Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மேயாத மான்

மேயாத மான்,Meyatha maan
18 அக், 2017 - 20:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மேயாத மான்

குறும்பட இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் குறும்படமாக வெளியாகி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வெளியான பென்ச் டாக்கீஸ் குறும்பட தொகுப்பில் இடம்பெற்று வரவேற்பை பெற்ற படம் மது. அந்த மது தான் மேயாத மானாக உருவெடுத்திருக்கிறது. குறும்படம் நம்மை ரசிக்க வைத்த அளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறதா மேயாத மான் என்பதை பார்ப்போம்.

வடசென்னையில் வாழும் ஒரு கானா பாடகனின் காதலும் காதல் நிமித்தமுமான படம் தான் மேயாத மான்.

மூன்று ஆண்டுகளாக காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் இதயம் முரளியாக கெத்து காட்டுகிறார் வைபவ். என்ன ஆல்ரெடி ஹலோ நான் பேய் பேசுகிறேனில் பார்த்த அதே வடசென்னை லுக். காதலை சொல்லத் தயங்கும்போதும் செத்துப்போறேன் என்று நண்பர்களைக் கோர்த்து விடும்போதும் ரசிக்க வைக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர் கோலிவுட்டுக்கு இன்னொரு நல்வரவு. சமந்தா இடத்தை நிரப்பலாம்.

படத்தில் ஒரிஜினல் இதயம் முரளி விவேக் பிரசன்னா தான். முதல் பாதியில் கரடுமுரடாகவும் இரண்டாம் பாதியில் காதலை சொல்லத் த்யங்கும் அப்பாவியாகவும் அசரடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியான இந்துஜா அக்மார்க் சென்னைப் பொண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

குறும்படத்தை பெரிய படமாக மாற்றும்போது ஏற்படும் திரைக்கதை தொய்வு இதிலும் தொடர்கிறது. வைபவ் ப்ரியா பவானி சங்கர் ஜோடியை விட விவேக் பிரசன்னா இந்துஜா ஜோடி தான் படத்தைக் காப்பாற்றுகிறது.

ஆங்காங்கே ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் இழுப்பது நன்றாக தெரிகிறது. இரண்டு பாடல்களில் யார் இசையமைப்பாளர் என்று தேட வைக்கிறார்கள். கதை வேகமெடுக்கும்போது முட்டுக்கட்டை போடும் அந்த முகவரி பாடல் தேவையா?

மானை அவிழ்த்து விடுவதற்கு முன்பு நன்றாக திட்டமிட்டிருக்கலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
மேயாத மான் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in