Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

போஸ்டர் பாய்ஸ் (ஹிந்தி)

போஸ்டர் பாய்ஸ் (ஹிந்தி),Poster boyz
  • போஸ்டர் பாய்ஸ் (ஹிந்தி)
  • இயக்குனர்: ஸ்ரேயாஸ் தல்படே
09 செப், 2017 - 15:28 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » போஸ்டர் பாய்ஸ் (ஹிந்தி)

நடிகர்கள் : சன்னி தியோல், பாபி தியோல், ஸ்ரேயாஸ் தல்படே, சோனாலி குல்கர்னி
இயக்கம் : ஸ்ரேயாஸ் தல்படே

மராத்தியில் வெளியான "போஸ்டர் பாய்ஸ்" படம், ஹிந்தியில் அதேபெயரில் ரீ-மேக்காகி, தியோல் சகோதரர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் போஸ்டர் பாய்ஸ். முதன்முறையாக சன்னி தியோல் கொஞ்சம் காமெடியிலும் களமிறங்கியிருக்கும் இப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா என்று இனி பார்ப்போம்.

கதைப்படி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஜாக்வர் சவுத்ரி எனும் சன்னி தியோல், பள்ளி ஆசிரியரான வினய் சர்மா எனும் பாபி தியோல் மற்றும் கடன் வசூலிக்கும் ஏஜென்ட் அர்ஜூன் சிங் எனும் ஸ்ரேயாஸ் தல்படே, ஹரியானா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். ஒருநாள் மூன்று பேரை பற்றியும் போஸ்டர் செய்தி ஒன்று வெளியாக, அதை காரணம் காட்டி சன்னி தியோலின் சகோதரி திருமணம் நின்று விடுகிறது. பாபி தியோலின் மனைவி அவரைவிட்டு பிரிந்து செல்கிறார். ஸ்ரேயாஸின் திருமணமும் தடைபடுகிறது. அப்படி என்ன அந்த போஸ்டரில் வெளியானது, இந்த பிரச்னைகளில் இருந்து மூவரும் எப்படி மீண்டு வருகிறார்கள்... என்பது போஸ்டர் பாய்ஸ் படத்தின் கலகலப்பான மீதிக்கதை.

இதுவரை ஆக்ஷ்ன் காட்சிகளில் பார்த்து வந்த சன்னி தியோல், இப்படத்தின் மூலம் கொஞ்சம் காமெடியிலும் அசத்தியிருக்கிறார். தன்னால் முடிந்தவரை காமெடி செய்து ரசிகர்களை கலகலப்பூட்டுகிறார்.

சன்னி தியோலுக்கு உறுதுணையாக அவரது சகோதரர் பாபி தியோல் மற்றும் இப்படத்தின் இயக்குநரான ஸ்ரேயாஸூம் காமெடியில் ரசிக்க வைக்கின்றனர். சோனாலி குல்கர்னிக்கு இப்படத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு இல்லை என்று தான் எண்ண தோன்றுகிறது.

தன்ஷிக்கு பாகியின் பின்னணி இசை சிறப்பாக இருந்த போதிலும், பாடல்கள் மனதிலும் பதியும் படி இல்லை.

நிகாமின் ஒளிப்பதிவு ஓஹோ பதிவு இல்லை என்றாலும் ஓகே பதிவாக இருக்கிறது.

இயக்குநர் ஸ்ரேயாஸ் தல்படேவுக்கு பாலிவுட்டில் இது முதல்படம். காமெடி படமாக எடுத்தாலும் அதை ரசிகர்களை ஈர்க்கும் விதமாக, படம் பார்க்க வரும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இப்படத்தை இயக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். அதேசமயம் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், "போஸ்டர் பாய்ஸ் - கவலைகளை மறந்து சிரிக்க உத்ரவாதம்''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in