Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சிங்கம் புலி

சிங்கம்  புலி,Singam Puli
16 மார், 2011 - 11:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிங்கம் புலி

  

தினமலர் விமர்சனம்

தமிழ்சினிமாவில் மற்றுமொரு இரட்டையர்கள் சப்ஜெக்ட்! ஆனால் அது மற்றுமொரு எனும் அளவில் இல்லாது, மட்டற்றது எனும் அளவில் ஆச்சர்யப்படுத்தி இருப்பதுதான் "சிங்கம் புலி" யின் சிறப்பு! ஒரே குடும்பத்தில் பிறந்த இரட்டை ஜீவாக்களில் ஒருத்தர் அப்பா நம்பும் அடப்பாவி கேரக்டர்! மற்றும் ஒருத்தர் அப்பாவை நம்பும் அப்பாவி கேரக்டர்! ஆனால் அப்பாவிற்கும், உறவிற்கும், ஊருக்கும் அடப்பாவி அப்பாவியாகவும், அப்பாவி அடப்பாவியாகவும் தெரிவதுதான் படத்தின் பலம். பலவீனம் எல்லாம்!!!

கதைப்படி பொன்வண்ணன், குயிலி தம்பதியினரின் இரட்டை வாரிசுகள் சிவாவும், அசோக்கும். சிவா மீன் மார்கெட்டில் தொழிலாளி. அசோக் பெரிய வழக்கறிஞர். சிவா மீன் வெட்டுபவர் என்றாலும் தான் உண்டு, தன் காதலி ஸ்வேதா உண்டென்று வாழ்பவர். ஆனால் அவரது தம்பி அசோக் வக்கீல் என்றாலும் பெரிய பெண்பித்தர். தான் திருப்தியாக வாழ யாருடைய நிம்மதியையும் குலைக்க கூடியவர். அப்படி அசோக்கால் பாதிப்பிற்குள்ளான ஒரு பெண் பிணமாகிறார். அவருக்காக தம்பி என்றும் பாராமல் வக்கீல் அசோக்கை போலீஸில் படித்து கொடுக்கிறார் அண்ணன் மீன்வெட்டி சிவா. தான் வாதாடபோகும் கோர்ட்டிலேயே தன்னை குற்றவாளியாக நிறுத்தும் அண்ணணை பழிவாங்க புறப்படுகிறார் தம்பி! ஜெயித்தது அண்ணனா? தம்பியா? நீதியா? அநீதியா? என்பதுதான் "சிங்கம் புலி" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

மீன் மார்கெட் தொழிலாளி சிவாவாகவும், வக்கீல் அசோக்காகவும், ஜீவா இரட்டை வேடங்களில் சும்மா பியித்து உதறி இருக்கிறார் என்றே சொல்லலாம். அண்ணன் ஜீவாவுக்கு தம்பி மீது கோபமும், பாசமும் ஒருங்கே பொங்கும் காட்சிகளில் இந்த ஜீவா அள்ளுகிறார் என்றால், கட்டுணா இவளைத்தான் கட்டணும்... என பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கையில் தள்ளும் அந்த ஜீவா பேசும் பஞ்ச் டயலாக்குகளில் தியேட்டரே துள்ளுகிறது. சொந்த அண்ணனிடமே உள்ளுக்குள் விஷமத்தையம், வில்லத்தனத்தையம் வைத்துக்கொண்டு வெளியில் இனிக்க இனிக்க பேசும் பாத்திரத்தில் ஜீவா ரொம்பவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

நல்ல ஜீவாவின் காதலி ஸ்வேதாவாக திவ்யா ஸ்பந்தனாஸ், கெட்ட ஜீவாவின் காதலி காயத்ரியாக புதுமுகம் செளந்தர்யா. இருவரில் திவ்யாவிற்கே நடிக்க அதிக வாய்ப்பு, ஆனால் காதல், கர்ப்பம், தற்கொலை, என தன் பக்கமும் ரசிகர்களை திருப்பி, திருப்திபட்டு‌ கொள்கிறார் புதுமுகம் செளந்தர்யாவும். பொன்வண்ணன், பாண்டு, குயிலி, மாணிக்கவிநாயகம் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். விதவிதமான கெட்-அப்களில் வரும் சந்தானம் டபுள் மீனிங்கில் சிரிக்க வைப்பதுடன் சிலிர்க்கவும் வைக்கிறார்.

மணிசர்மாவின் இசை சிங்கமாக உருமுகிறது என்றால், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு புலியாக பளீரென்று பாய்கிறது. படத்தின் பெரிய பலம் ஜீவாவின் டூயல் ரோல் மாதிரியே இவை இரண்டும் என்றால் மிகையல்ல!

சின்ன வயதிலேயே காணாமல் போகும் அண்ணன், வயசான காலத்தில் கிடைக்கும் தம்பி என பழைய காலபாணியில் இரட்டையர் கதையை கையாளாமல் ஒரே வீட்டில் எதிரும், புதிருமான இரட்டை பிறவிகளை வைத்து புதுசாக கதை பண்ணியிருக்கும் ஒரு காரணத்திற்காகவே எழுதி, இயக்கி இருக்கும் புதியவர் சாய்ரமணியை பாராட்டலாம். "பேராண்மை" இயக்குநர் எஸ்.பி.ஜெகநாதனின் உதவியாளராம் இவர். எந்த சீனிலும் அது தெரியாதது சாய்ரமணியின் பலம்! நீண்டு கொண்டே போகும் படத்தின் நீளம் பலவீனம்!!

கூட்டி கழித்து பார்த்தால் "சிங்கம் புலி" காம(நெ)டி! "கலக்ஷன்வெடி!!"

------------------------------------------

குமுதம் விமர்சனம்

ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட அண்ணன் - தம்பி ஆள்மாறாட்டம்தான் மையக் கதை.

முதலில் முள்ளு ஜீவா... அழுக்கு லுங்கி, மெட்ராஸ் பாஷை, முன்கோபி என கெட்டவனாகத் தெரியும் உள்ளுக்குள் நல்லவன்.

மீன்காரனாக இருந்துகொண்டு அவர் மாடர்ன் பெண் திவ்யாவை காதலிப்பதில் லாஜிக் மிஸ்ஸிங். உதைத்தாலும் திவ்யா வீட்டுக்குள் புகுந்து பெண்கேட்டு பாண்டுவை உலுக்குவது சூப்பர்யா... அடிதடி ஆசாமியாக தன்னைப்பற்றி நினைக்கும் அப்பா பொன்வண்ணனிடம், "நான் வீட்ல இருக்கறது உனக்கு பிடிக்கலையா? அப்போ.. நீ வீட்டை விட்டுப் போயிடு... என கத்தும்போது இயக்குநர் சாய்ரமணியின் கைவண்ணம் தெரிகிறது.

அடுத்தது ஜொள்ளு ஜீவா...! பக்தி பழமாக வீட்டில் பூஜையெல்லாம் முடித்துவிட்டு வெளியே பத்தடி தூரம் கடந்ததும் பக்கா மார்டன் பையனாக இவர் கொடுக்கும் பில்ட்அப் இருக்கே... நல்ல கெட்டப். "வாழ்ந்தா இவளோடதான் வாழணும்... என ஒவ்வொரு பெண்ணுக்கும் ப்ராக்கெட் போட்டு அவிழ்க்கும் காட்சிகளில் கச்சிதமாய் பொருந்துகிறார்.
ஜொள்ளு ஜீவாவுக்கு நண்பனாக... வேற யாரு...? நம்ம சந்தானம்தான். பழைய படம் "நிறம் மாறாத பூக்கள் விஜயன் கேரக்டரில் ஆரம்பித்து பல்வேறு விதமாக பழைய பாணி கெட்டப்பில் வந்து சிரிப்பை அள்ளித் தெளிக்கிறார்.

ஜொள்ளு ஜீவா கழட்டிவிட்ட பெண் தற்கொலை செய்யவில்லை... ஜீவாதான் தள்ளிவிட்டார் என ட்விஸ்ட் வைத்து கதை நல்ல ஜீவா கண்டுபிடிப்பதுபோல காட்டியிருப்பதும், தம்பிக்கு எதிராக கோர்ப்பில் நடக்கும் விவாதம், அதில் சாமர்த்தியமாக ஜொள்ளு ஜீவா தப்புவதுமாக குட்டி குட்டி காட்சிகளை பக்கா பதமாக சேர்த்திருக்கிறார் டைரக்டர்.

"ஃபிகரு கிடைச்சுட்டா.. "பூவே பூவே போதை.. பாட்டுகளில் மணிசர்மா நம்மை கவனிக்க வைக்கிறார். கண்களை உறுத்தாத தெளிவான ஒளிப்பதிவுக்காக பாலசுப்ரமணியனை பாராட்டலாம்.

சிங்கம் புலி - அளவான பாய்ச்சல்!. குமுதம் ரேட்டில் - ஓகே

----------------------------------

கல்கி விமர்சனம்

எந்த ரோல் கொடுத்தாலும் ஸ்கோர் பண்ணும் ஜீவாவுக்கு சிங்கம் புலி படத்தில் ஸ்ட்ரிக்ட் பாய், ப்ளே பாய் என ரெட்டை வேடங்கள். ஸ்ட்ரிக்ட் ஜீவா மீன் மார்க்கெட்டில் வேலை பார்ப்பதும், ப்ளேபாய் ஜீவா, வீட்டில் பொறுப்பானவனாக நடித்துக்கொண்டு வெளியில் விட்டேத்தியாக அலைவதும் ஜீவாவின் ஆக்டிங்கில் ரசனையான முரண்.

ஆனால், நல்ல ஜீவாவின் பார்வையில் கதையை நகர்த்தாமல் கெட்டவனின் பார்வையில் நகர்த்தி இருப்பது இயக்குனர் சாய் ரமணியின் கமர்ஷியல் போலும். ஆனாலும், ரெண்டு ஜீவாவுக்கும் பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி, மேனரிசங்கள்... இவற்றில் ஏதாவது ஒன்றில் வித்தியாசம் காட்டி இருக்கலாம். இதை ஜீவாவும் கவனித்திருக்கலாம்.
நல்லவனுக்கு திவ்யா ஸ்பந்தனாஸும் கெட்டவனுக்கு ஹனி ரோஸும் பேருக்குத்தான் ஜோடி. மற்றபடி கமர்ஷியல் போதைக்கு கவர்ச்சி ஊறுகாய்.

சந்தானத்தில் டைமிங்க் காமெடி தௌசன் வாலா. அதுவும் மஃப்டி போலீஸிடம் மாட்டிக்கொண்டு அடிக்கும் லூட்டியில் அடிவயிறு வலிக்கிறது. படத்துக்குப் படம் கிர்ன்னு எகிறுது அவரது கிராஃப். கீப் இட் அப். அம்மா கேரக்கடருக்கு சரண்யா போல... அப்பா கேரக்டருக்கு பொன்வண்ணன். அவரும் நல்லாத்தான் நடிச்சிருக்கார். அம்மா குயிலி, ரெண்டு ஜீவாவுக்கும் முட்டிக்கும் போது அழுவறாங்களா... சிரிக்கறாங்களான்னு... கண்டுபிடிக்க முடியலை. அப்படி ஒரு பர்ஃபாமன்ஸ்(?).

மணிசர்மாவின் இசையில் அநியாயத்துக்கு தெலுங்கு வாடை. எந்தப் பாடல்களும் காதுக்குள் இறங்கி மனசை ஆக்கிரமிக்கவில்லை. வழக்கமாக மெலடியில் மயக்கும் மணிசர்மா மிஸ்ஸோமிஸ். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் கெட்டவன் ஜீவா சீக்குவன்ஸ் மட்டும் ப்ரைட் அண்ட் ப்ரெஷ்.

படத்தின் முதல் பாதி சரசரன்னு நகர்ந்தாலும் மறுபாதி... வழக்கமான கோடம்பாக்கத்து வழவழா... கொழகொழா... ஆனால், அண்ணனைக் கொலை செய்ய தம்பி ப்ளான் போடும் காட்சிகளில் மட்டும் முதல் பாதியின் பெப். ஆனால் அந்த இழுவையான க்ளைமாக்ஸ்... எத்தனையோ படத்துல பார்த்ததுதான்.

சிங்கம் புலி : கமர்ஷியல் பாய்ச்சல்.



வாசகர் கருத்து (35)

satheeshkumar - theni,இந்தியா
10 மே, 2011 - 15:15 Report Abuse
 satheeshkumar படம் பரவா இல்ல இருந்தாலும் தேவை இல்லாத ஆபாசம்
Rate this:
sathish - chennai,இந்தியா
29 ஏப், 2011 - 14:58 Report Abuse
 sathish no comment
Rate this:
Bala - 408,கிரிகிஸ்தான்
17 மார், 2011 - 23:18 Report Abuse
 Bala வேஸ்ட் படம், டிக்கெட் காசு வேஸ்ட்
Rate this:
arthi - coimbatore,இந்தியா
17 மார், 2011 - 19:17 Report Abuse
 arthi படம் ஓகே. ஜீவாவுக்காக பார்க்கலாம்.
Rate this:
சுந்தர் - chennai,இந்தியா
17 மார், 2011 - 10:20 Report Abuse
 சுந்தர் வாழ்ந்தா இவ கூட தா valanum
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in