Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தெறி

தெறி,Theri
06 மே, 2016 - 12:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தெறி

தினமலர் விமர்சனம்


இளைய தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன், சுனைனா, பிரபு, ராதிகா, மொட்ட ராஜேந்திரன்... உள்ளிட்ட மாஸ் நட்சத்திரங்களுடன் பெரும் இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரனும் முக்கிய பாத்திரத்தில் முதன்முதலாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், பக்கா ஆக்ஷ்ன் கமர்ஷியல் படமாக வெளிவந்திருக்கும் தெறி., ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்திருக்கும் 50-வது படமும் கூட...


கதைப்படி., ஜோசப் குருவில்லா, தர்மேஷ்வர் மற்றும் நேர்மை "தெறிக்கும் விஜயக்குமார் எனும் ஐ.பி.எஸ் அதிகாரி என மூன்று கெட்-அப்களில் வருகிறார் விஜய்! அவரது போலீஸ் லிமிட்டில் உள்ள பெரிய மனிதர் மகேந்திரன் (உதிரி பூக்கள், முள்ளும் மலரும் படங்களின் இயக்குனர்) அவரது மகனின் அட்டகாசமும், அயோக்கியத்தனமும் பொறுக்காமல் ஆக்ஷ்னில் இறங்குகிறார் விஜய்!


பிள்ளைக்காக அந்த பெரிய மனிதர் எப்படி, எப்படி எல்லாம் விஜய்யுடன் ஆக்ஷ்ன் விளையாட்டு விளையாடுகின்றனர்? அவர்களை விஜய் எப்படி அதிரடியாய், சமாளித்து அசத்தலாய் பழி தீர்க்கிறார்...? எனும் ஆக்ஷ்ன் கதையுடன் விஜயகுமார் ஐ.பி.எஸ்., அல்லாது ஜோசப் குருவில்லா, தர்மேஷ் என இன்னும் இரண்டு விஜய்களின் பாத்திரம் என்ன?, அவர்களுக்கும் போலீஸ் விஜய்க்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா..?, இந்த ஒட்டுமொத்த விஜய்களுடனான சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா உள்ளிட்டோரின் தொடர்பு, காதல், நேசம், பாசம்... உள்ளிட்டவைகளையும் கலந்து கட்டி, குழந்தைகளை, செல்லம் கொடுத்து வளர்ப்பதை விட சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் எனும் அழகிய மெஸேஜையும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் காட்சிகளையும் அழகாக திணித்து நல்ல மெஸேஜுடன் கூடிய அழகிய கமர்ஷியல் ஆக்ஷ்ன் படம் தந்திருக்கிறார் இயக்குனர் அட்லி !


விஜய், ஜோஸப் குருவில்லா, தர்மேஷ்வர், விஜயக்குமார் ஐ.பி.எஸ், ஆகிய மூன்று வித கெட்-அப், கேரக்டர்களிலும் தன் பாணியில் குறும்பும், குதூகலமாகவும் கலக்கியிருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக, மலையாளி ஜோஸப் குருவில்லாவாக, தர்மேஷ்வராக.... மூன்றிலும் முத்திரைப் பதித்திருக்கிறார் விஜய். அதிலும், அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் சொல்லவே தேவை இல்லை, மிரட்டியிருக்கிறார்கள் விஜய்யும், அவரது ஆசை மகளாக வரும் நைனிகாவும்! கேரளா மண்ணில் மகளுடனான ஓப்பனிங் பைக்சேஸிங்கில் மனிதர் செம கலக்கல். ஜோசப் குருவில்லா, விஜயகுமார் ஐ.பி.எஸ்ஸாக ப்ளாஷ்பேக் காட்சிக்கு செல்லும் இடத்திலும் ஆக்ஷ்ன் அதிரடி .


அதே மாதிரி, ரவுடிகளுக்கு கிளாஸ் எடுக்கும் காட்சியில், கத்தி எடுத்து குத்துறது ஈஸி.. பேனா எடுத்து எழுதறது கஷ்டம்.. போலாமா... எனும் வசனம், விஜய் பேசுவதால் செம பன்ச். இது மாதிரி படம் முழுக்க பல இடங்களிலும் ரசிகனை மயக்கும் குறும்பு வாசனை... வசீகரம்!


கதைப்படி. படத்தில் நைனிகாவின் ஆனி டீச்சராக மலையாளி பெண்குட்டியாக முதலில் வரும் நாயகி எமி ஜாக்சன், மெச்சூரிட்டியான ரோலில், தன் மற்றப் படகளைக் காட்டிலும் அதிகளவு போர்த்தியப்படியான உடையில் ரசிகனை கொள்ளை கொள்கிறார். யெஸ்!


முதல் நாயகி சமந்தா, விஜய் ஜோடியாக, காதலியாக மனைவியாக, டாக்டராக கலக்கல். அவரது நடை, உடை, பாவனை அவரை விடகச்சிதம்.


விஜய்யிடம் எங்க அப்பாவுக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தை ஒன்னு தான்.. என சமந்தா சொல்ல, அது சாரி.... தானே ..? என விஜய் அவசரப்பட்டுகேட்க, இல்ல, போலீஸ் எனும் இடத்தில் சமந்தா ரசனை.


சாவு நமக்கு நடக்கறப்போ வலிக்கிறது தெரியாது... நமக்கு நெருங்கிய சம்பந்தப்பட்டவர்களுக்கு நடக்கிறப்போ, நமக்கு எப்படி வலிக்கும் தெரியுமா? என்று அழுத்தமான வசனம் பேசியபடி மகனின் அயோக்கியத்தனங்களுக்கு துணை நிற்கும் மகேந்திரன், நடிப்பிலும் தான் ஒரு திரை மேதை என்பதை நிருபித்திருக்கிறார்.


படத்தில் விஜய்யின் செல்ல மகளாக வரும் நைனிகா, நிஜத்தில் மாஜி நாயகி மீனாவின் குட்டி வாரிசு. இந்த வயதிலேயே 32அடி பாய்ந்திருக்கிறார் சபாஷ்!


சுனைனா, பிரபு, ராதிகா, காளி - வெங்கட், அழகம்பெருமாள், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிற பாத்திரங்களும் கச்சிதம். அதிலும், செம சிரிப்பு மூட்டும் வெறும் கமெடியனாக மட்டுமில்லாமல் படத்தை இன்டர்வெல் வரை எமோஷனலாக கொண்டு செல்லும் ராஜேந்திரன் பேஷ், பேஷ்!


செல்லக்குட்டி..., ஜித்து ஜில்லாடி .. உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டோ ஹிட். அதிலும், ஈனா.. மீனாடீக்கா... பாடல் ரசனையின் உச்சக்கட்டம்! இப்படதொடக்கத்தில் இருந்தே பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றேன், இளைய தளபதி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாது எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் தெறி படத்தின் பாடல்கள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்த நம்ம ஜீ.வி, தன் 50வது படம் இது என்பதால் அதை அம்சமாக பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் செய்துகாட்டி இருக்கின்றார்.


மூன்று விதமான கெட்-அப்புகளில் வரும் விஜய்க்கும் மூன்று விதமான கலர்களில் காட்சிப்படுத்தல் செய்திருக்கும் ஜார்ஜ்.சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படக்காட்சிக்காகவும், பாடல் காட்சிகளுக்காகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் லொகேஷன்களும் ஆஹா, ஓஹோ! அசத்தல் !


அம்மா ராதிகாவை தன் போலீஸ் ஜீப்பில் ஏற்றாமல், காமராஜர் சி.எம். கதை சொல்லி போக்கு காட்டும் விஜய், காதலி சமந்தாவையும், அவர் தோழிகளையும் தன் வண்டியில் வலிய ஏற்றிச் சென்று அம்மாவிடம் வழிவது... உள்ளிட்ட படம் முழுக்க பல இடங்களிலும் விஜய் ரசிகனை மயக்கும் குறும்பு விரவிக்கிடப்பது அட்லியின் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி.


எந்த முன்னணி ஹீரோவின் படம் வந்தாலும் தங்களது ஹீரோவின் அறிமுக காட்சி எப்படி இருக்கும்.? என்பதே பெரும்பாலான ரசிகர்களில் ஆவலாக இருக்கும். அந்த விதத்தில் முற்றிலும் புதுமையாக, தெருவின் ஓரத்தில் பைக் ரிப்பேராகி நிற்கின்றது. மகள் திட்டிக்கொண்டே நிற்கின்றாள்... திடீரென பின்னனி இசையில் மெல்லிய ஒரு சீறல்... சீட்டுக்கு அந்தப்பக்கம் உக்காந்து பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு இருந்த இளைய தளபதி விஜய் சற்றே தலையை தூக்கிப்பார்க்கின்றார். இப்படித்தான் சிம்பிளாக இருக்கிறது ஹீரோ என்ட்ரி எனப்படும் விஜய்யின் அறிமுககாட்சி. இது , விஜய் ரசிகர்களைக் காட்டிலும் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவருமென்று இயக்குனர் அட்லி உணர்ந்தே வைத்திருப்பார் போலும்!


இது மாதிரி, படத்தின் கதையும் சரி, படம் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி... பெரிதாக குறை சொல்லும்படி இல்லை என்றாலும், ‛‛சத்ரியன், ‛‛அக்னி நட்சத்திரம், ‛‛பாட்ஷா, ‛‛என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிவதும், பின்பாதி படம் கொஞ்சம் நீளமாக தெரிவதும் சற்றே பலவீனம்.


மற்றபடி, விஜய் மாதிரி மாஸ் ஹீரோ நடித்திருககும் இது மாதிரியான ஒரு ஆக்ஷ்ன் கமர்ஷியல் படத்தில், குழந்தைகளை சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் எனும் அழகிய மெஸேஜையும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் காட்சிகளையும் அழகாக திணித்திருப்பதற்காகவே நாயகர் விஜய்யையும், இயக்குனர் அட்லியையும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்! ஹேட்ஸ் ஆப் டூ தி என்டயர் டீம்!


ஆக மொத்தத்தில் தெறி" எட்டுத்திக்கும், பொறி பறக்கிறது! வசூலிலும் தான்!


-----------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்

ஹீரோ போலீஸ் அதிகாரி மகனைத் தண்டிக்கும் ஹீரோவின் கடும்பத்தைச் சிதைக்கிறார் வில்லன். பதிலுக்கு ஹீரோ வில்லனைப் பழிவாங்குகிறார். அப்பப்பா... எந்தக் காலத்து கதை? பாட்ஷா, ரமணா, சத்ரியன் என்று கொஞ்சம் கொஞ்சம் உருவி 'தெறி' ரெசிபியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

கேரளாவில் மகள் நைனிகாவுடன் தானுண்டு தன் பேக்கரி உண்டு என்று இருக்கும் விஜய்க்கு, சாதுவான ஒரு முகம். நைனிகாவின் பள்ளி டீச்சர் எமிஜாக்சன் பிரச்னையில் பாட்ஷா மாதிரி ஆக்ரோஷமான இன்னொரு முகத்தைக் காட்ட வேண்டிய சூழல்.

படத்தைத் தாங்கிப் பிடிப்பது விஜய் மட்டும்தான். சாது அப்பா, ஆக்ஷன் அதிகாரி, பிரியமான காதலன் என்று ஜமாய்க்கிறார். அவர் வரும் அத்தனை ஆக்ஷன் காட்சிகளும் 'தெறி' என்றே சொல்லலாம். சிக்னலில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகளை துவம்சம் செய்யுமு் காட்சியில் உண்மையில் தெறிதான்.

சிக்லெட்டை வாயில் போடுவது, கண்ணாடியை இந்தக் கையிலிருந்து அந்த கைக்கு மாற்றுவது - பழசுங்கண்ணா...

மகனைக் கொன்ற அதிகாரிகளைப் பழிவாங்கும் வில்லன் பாத்திரம் இயக்குநர் மகேந்திரனுக்கு. ஆள் புதுசு, வில்லத்தனம் பழசு. கிளைமாக்ஸில் அவரை பரிதாபமாக உட்காரவைத்து விடுகிறார் இயக்குநர்.

விஜய்யின் மனைவி சமந்தா நடிப்பும் சரி, டூயட்டில் கவர்ச்சியும் சரி. தரம்! எமிஜாக்சனுக்குத்தான் பொருந்தாத் கேரக்டர். அந்த லிப்ஸ்டிக், ரோஸ் நிற உடை அம்மணிக்கு என்ன கேரக்டர்?

படத்திற்கு கைகொடுத்திருக்கிறது பேபி நைஜிகாவின் பேச்சும் துறுதுறு நடிப்பும் (மீனா மகளாச்சே)

மொட்டை ராஜேந்திரன் காமெடியும் கேரக்டரும் கலந்து அப்ளாஸ் வாங்குகிறார்.

பிரபு, ராதிகா, அழகம் பெருமாள், காளிவெங்கட் கச்சிதமான தேர்வு.

ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் ரொம்ப உழைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் பாடல்களில் காட்டிய அக்கறை பின்னணி இசையில் இல்லை.

பழைய கதைகள்தான் என்றாலும் திரைக்கதையில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். திடீரென இறந்து போன விஜய் வந்து பழவாங்குவதாக பேய்க் காட்சிகள். ரமணா பாணி கருத்துக் கேட்புகள், சென்டிமென்ட என்ற பெயரில் டி.வி. சீரியல்களை நினைவுபடுத்தும் காட்சிகள் என்று குறைகள் நிறைய என்றாலும், விஜய்யின் நடிப்பும் ஆக்ஷனும் ரசிகர்களை தெறிக்க வெளியே வரவிடாமல் கட்டிப்போட்டிருப்பது இயக்குநருக்கு லக்குதான்.


தெறி - பொறி!


குமுதம் ரேட்டிங் - நன்று


-------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


கற்போல் உறுதிக் காவலன் தனக்கு

பற்பல இன்னல் பதைக்க விளைக்கும்

சிற்சில வில்லன் செயலை விளக்கும்

படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று!


பம்பாய் தாதா பம்மிக் கொண்டு

ஆட்டோ ஓட்டும் அந்நாள் கதையை

'பாட்சா' படத்தில் பார்த்திருக்கிறோம்

சட்டெனப் பார்க்கையில் சாயல் இதிலும்!


சாக்லெட் சிற்பம் சமந்தா டாப்பு

எமிஜாக் சனோ எகிடு தகிடு!

மாமா கிட்ட விஜய் பேச்சு

மறுபடி பார்க்கத் தூண்டும் மாப்பூ!


மீனா மகள்தான் மிடுக்காய் நடக்கும்

நைனிகா நடிப்போ அசத்தல் போங்கோ!

ஆரம்ப சீனில் அசத்தும் குட்டி

பூராப் படத்திலும் நடிப்பில் கெட்டி!


உதிரிப் பூக்கள் மகேந் திரனின்

உக்கிர நடிப்பு ஓஹோ ஓஹோ!

உதிரம் கொட்ட வெட்டிய பின்னும்

அதிரடி விஜயின் அக்ஷன் ஆஹா!


'ஜித்து ஜில்லாடி' இசையோ கில்லாடி!

செல்லக்குட்டி சிங்கார பாட்டு

வெல்லக் கட்டி வெகுஜன ரசனை!

ஜில்லுனு வீசும் தென்றலின் குளுமை!


'இதுக்கு மேலே' என்றோர் வசனம்

இப்போது தானே 'ஐ'யில் பார்த்தோம்!

'சாவுக்கு மேலே' என்றே உல்டா

தங்கம் பார்த்துப் பூசிய கில்டா?


குத்தாட் டத்தின் பாடல் காட்சியில்

பட்டாஸ் வெடிபோல் பாய்ந்தே ஆடுவர்

'மெட்ராஸ் ஐ' தான் வந்து விட்டதோ?

கூலிங் கிளாஸ்தான் அனைவர் முகத்திலும்


சண்டையின் போது கேரள இசையை

சாமர்த்தி யமாய்ச் சேர்த்தது நன்று!

குண்டர் தமக்குக் கொடுக்கும் தண்டனை

சிரிக்கச் செய்யும் தேவா மிருதம்!


மொட்டைத் தலையர் ராஜேந் திரனோ

கட்டைக் குரலில் கலகலப் பாக்கி

படத்தின் போக்கில் வேகம் கூட்டி

இடத்தைப் பிடிக்கிறார் நமது நெஞ்சில்!


சொந்தம் கொண்டு சோகம் விளைக்கும்

நொந்த டெக்னிக் இந்தப் படமும்

பந்தம் வாடும் படத்தின் கதையை

எத்தனை முறைதான் இன்னும் பார்ப்பது?


படத்தின் தொய்வுக்கு காரணம் எடிட்டிங்

பாடாய்ப் படுத்துது பாடல் செட்டிங்

இருக்குது இங்கே சமந்தா கிஸ்ஸிங்

இருந்தும் எதுவோ இதிலே மிஸ்ஸிங்!


திரையரஙகில் பல்லாவரம் ராஜ்மோகன், சரண்யா தம்பதியினர் கருத்து: நாங்க ரெண்டு பேருமே தளபதி ரசிகருங்க. என்னா ஃபைட்டு! என்னா டேன்ஸு! அப்பாவி மாதிரி முகமும், ஆக்ரோஷமான முகமும்... ஊஹூம் சான்ஸே இல்லை. விஜய்னா விஜய்தான்...!வாசகர் கருத்து (39)

Shankar Ganesh - Kumbakonam,இந்தியா
23 ஏப், 2016 - 15:24 Report Abuse
Shankar Ganesh அட்லி உங்களுக்கு இந்த மாஸ் ஹீரோவெல்லாம் வேண்டாம். இவர்கள் உங்கள அதல பாதளம் வரை கொண்டு விடுவருவார்கள். விஜி இது மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் மக்கள் ரசனை மாறிவிடும். உங்கள ஓரம் கட்டி விடுவார்கள்.சத்தியமா இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை. நாட்டுக்கு எதாவது நல்ல விசயத்த சொல்லுங்க. கோடி கோடியா சம்பாதிங்க.. உங்க ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்காதிங்க ப்ளீஸ்
Rate this:
shiva - arni  ( Posted via: Dinamalar Windows App )
23 ஏப், 2016 - 11:56 Report Abuse
shiva ஒரு தடவை ரசித்து பாக்கலாம்
Rate this:
Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22 ஏப், 2016 - 05:13 Report Abuse
Dr Vijaya Choumiyan தலைப்புதான் சரி இல்ல. பொறி, சொறி, கரின்னுகிட்டு.
Rate this:
vijay - chennai,இந்தியா
21 ஏப், 2016 - 09:00 Report Abuse
vijay மொக்க படம்
Rate this:
billa prabhu - selam  ( Posted via: Dinamalar Windows App )
18 ஏப், 2016 - 01:33 Report Abuse
billa prabhu ஏத்தணை காலம் ஏமாத்தூவார் இந்நாட்லே
Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
தெறி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in