நடிகர்கள் : சன்னி லியோன், துஸார் கபூர், வீர் தாஸ்,
இயக்குநர் : மிலாப் ஜவேரி
கவர்ச்சி குயின் சன்னி லியோன், இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் 'அடல்ட்' காமெடி செக்ஸ் படம் தான் இந்த 'மஸ்திஜாதே'. இப்படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
சன்னி கெலி(துஸார் கபூர்)யும், ஆதித்யா சோட்டியா(வீர் தாஸ்)வும் நெருங்கிய நண்பர்கள். விளம்பர கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் இருவரும், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். அதனால் பெண்கள் என்றாலே ஜொள்ளு விட்டு அலைகின்றனர். ஒருநாள் இருவரது கண்ணிலும் சன்னி லியோன் தென்படுகிறார். சன்னி லியோன் இப்படத்தில் லில்லி, லைலா என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். துஸார் கபூர் - லைலா சன்னி லியோனையும், வீர்தாஸ் - லில்லி சன்னி லியோனையும் காதலிக்க தொடங்குகிறார்கள். திருமணம் செய்யும் வேளையில் ஒரு பிரச்னை எழுகிறது. என்ன பிரச்னை..., காதலர்கள் இணைந்தார்களா...? என்பதை காமெடி என்ற பெயரில் காமநெடியுடன் வசனத்தை அள்ளி வீசி, கூடவே சன்னி லியோனின் அதிரடி கவர்ச்சியையும் காட்டி மஸ்திஜாதே படத்தை சொல்லியிருக்கிறார்கள்.
துஸார் கபூர், மீண்டும் ஒருமுறை அடல்ட் காமெடி படத்தில் அசத்தியிருக்கிறார். அதேசமயம் வீர் தாஸ் நடிப்பும் பெரிதாக இல்லை.
சன்னி லியோன் - லில்லி, லைலா என இரண்டு மாறுபட்ட வேடங்களில் அசத்தியிருக்கிறார். நடிப்பைக்காட்டிலும் தனது உடம்பை காட்டியே படம் முழுக்க ரசிகர்களை ஈர்க்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் வரும் ரித்தேஷ் தேஷ்முக், காமெடி பண்ணும் அஸ்ரானி, சுரேஷ் மேனன் ஆகியோரது நடிப்பும் சுமார் தான்.
ஜனே கஹான் சே ஆயி ஹே படத்திற்கு பிறகு மிலாப் ஜவேரி இயக்கிருக்கும் படம் இதுவாகும். இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாச காட்சிகளை தவிர படத்தில் வேறு ஒன்றும் இல்லை. படத்தின் ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை உள்ளிட்டவைகளும் சுமார் ரகம் தான்.
நீங்கள் குடும்ப பாங்கான படத்தை விரும்புவர் என்றால் தயவு செய்து இந்தப்படத்தை பார்க்க வேண்டாம். சன்னி லியோனின் கவர்ச்சியை விரும்புவர்கள் மட்டும் மஸ்திஜாதே படத்தை பாருங்கள்.
மொத்தத்தில், ''மஸ்திஜாதே - சன்னி லியோனின் கவர்ச்சி ஜாஸ்தி!''