Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்,Tamilselvanum Thaniyar Anjalum
கெளதம் மேனன் தயாரிப்பில், பிரேம்சாய் இயக்கும் படம் இது.
12 ஆக, 2016 - 12:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'


இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் , நடிகர் ஜெய்

,நடிகை யாமி கௌதம் நடிக்க ., இயக்குனர் -, பிரேம் சாய் இசைஞர்- கார்த்திக்,

ஓளிப்பதிவாளர் - சத்யா பொன்மார் ஆகியோர் கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக வெளிவந்திருக்கும் படம் தான் " தமிழ்செல்வனும்

தனியார் அஞ்சலும் ".


கொரியர் பாயின் காதலும் , கொழிக்கும் மருத்துவ துறையின் ஸ்டெம்செல்., கொடூர ஊழல் தகிடுதித்தங்களும் தான் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தின் கரு , கதை ,களம் காட்சிப்படுத்தல் ... எல்லாம்.கதைப்படிஜெய் கல்லூரி படிப்பைபாதியிலே விட்டுஊரிலிருந்து வேலை தேடிசென்னைக்கு வருகிறார்.சென்னை வரும் ஜெய்தனது அக்கா வீட்டில் தங்கி மாமா விடிவிகணேஷுடன்தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே இண்டர்வியூ சரியில்லை, வேலை பிடிக்கவில்லை... என்று

சொல்லிதிரும்பிவருகிறார்.இந்நிலையில், ஜெய் கொரியர்கம்பெனியில் வேலை பார்க்கும் உறவும் நட்புமான சந்தானத்துடன்

சேர்ந்துகொண்டு அவர்,செல்லும் இடங்களுக்கும், சொல்லும் இடங்களுக்கும் சென்று வருகிறார். அப்போது,ஒருநாள் பாரிஸ் கார்னர் காதிகிராப்ட்டில் வேலை பார்க்கும் நாயகி யாமி கௌதமை அவருக்கு வந்த கொரியரை கொடுத்த போது பார்க்கும் ஜெய் ., அவர்மீதுகண்டவுடன் காதல்வயப்படுகிறார். அவரை தினமும் சந்திப்பதற்காக

அவர் இருக்கும் ஏரியாவில் கொரியர் சப்ளைசெய்யும் கொரியர் பாய் பணிக்கு சந்தானம் வாயிலாக வேலைக்கு சேருகிறார். கொரியர் வராத நாட்களிலும் யாமியினுடைய பெயருக்கு கொரியர் தயார் செய்து அதை டெலிவரி செய்வதுபோல் அவரை தினமும் சந்தித்து தனதுஒருதலைகாதலை வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் யாமி கௌதமும் ஜெய் மீது காதல் கொள்கிறார்.


இச்சமயத்தில் உளகளவில் மிகப்பெரிய., சென்னை டாக்டரான அஷூதேஸ் ரானா, சட்டத்திற்கு புறம்பாக தமிழகம் முழுதும், தன் டாக்டர் கூட்டாளிகள் மூலமாக கருக்கலைப்பு

வேலைகளை செய்து, அந்த ஆரம்ப நிலை கருமுட்டைகளை (ஸ்டெம்செல்ஸ்)வெளிநாட்டுக்கு விற்பனைசெய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார். இதைஅறியும் சேலம் தனியார் மருத்துவமனைவார்டு பாய் தம்பி ராமையா, ராணாவை நேரடியாகஎதிர்க்கமுடியாது என்பதற்காக ....சமூக சேவகரான நாசருக்கு இவர்களது அயோக்கிய தனத்தை தெரியப்படுத்தும் விதமாக.ராணா செய்துவரும்தில்லுமுல்லுகள் பற்றிய விவரங்களை கண்டுபிடித்து , சேகரித்து அதைநாசருக்கு கொரியர் மூலம்அனுப்பிவைக்கிறார்.


அந்த விவரங்கள் அடங்கியபார்சலை சப்ளை செய்யும்பொறுப்பு, அங்கு இங்கு சுற்றி .,ஜெய்க்கு வருகிறது.மறுபுறம் தம்பி ராமையா. தன்னைப் பற்றிய விவரங்களை பார்சலாக அனுப்பியவிஷயம் ராணாவுக்காக தெரிய வருகிறது. தம்பி ராமைய்யா வை தன் ஆட்கள் மூலம் தீர்த்து கட்டி விட்டு .,அவர் அனுப்பிய கொரியர் நாசரிடம்சென்றடையாமல் எப்படிதடுப்பது என்ற முயற்சியில்இறங்குகிறார்.. ராணா .இறுதியில், நாசரின் கைக்குஅந்த கொரியர் பார்சல் கிடைத்ததா?அந்த பார்சலை கொரியர் பாய் ஜெய் எப்படி தன் புத்திசாலிதனத்தால் பாதுகாத்து புரட்சி செய்து ., தன் குடும்பத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் காக்கிறார் ...?ஜெய் - யாமியின் காதல் என்னவாயிற்று ..?என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதிக்கதை .


கதாநாயகராக , தமிழ்ச்செல்வனாக வரும் ஜெய் .,ஹீரோயிசம் இல்லாத ஹீரோவாக மிகவும் யதார்த்தமாக

நடித்திருக்கிறார ஒவ்வொரு காட்சியிலும் ஜெய்யின் நடிப்பு நச் - டச் சென்றுரசிக்கும்படியாகவே

இருக்கிறது. இடைவேளைக்குப்பின் காதலையும் , காதலியையும் மறந்து ஜெய் ஒடிக்கொண்டே இருப்பது மட்டும் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. மற்றபடி ஜெய்யை கொரியர் பாயாக நம்புவதும் சற்றே கடினமாக இருக்கிறது.


காவ்யாவாக கதாநாயகியாக வரும் நடிகையாமி கௌதமுக்கு இப்படத்தில் பெரியதாக வேலை இல்லாவிட்டாலும்அம்மணி , தனக்குகொடுத்த கவர்ச்சிப்பணியை, காதல் பணியைசிறப்பாக செய்திருக்கிறார்.பிற உபநட்சத்திரங்களாக வரும் வழக்கம் போலவே, சந்தானம் , விடிவிகணேஷ் ரெண்டு பேரும் படத்தை கலகலப்பாககொண்டு செல்லஉதவியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் காமெடி பன்ச்கள் அனைத்தும் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்தும் கலாய்ப்புகள் என்பது படத்திற்கு பலம் ! டாக்டராக , வில்லனாக அஷுதேஷ்ராணாவின் நடிப்புமிரட்டும்படியாக இருக்கிறது. அவரது கூட்டாளி டாக்டர் சூர்யபிரகாஷாக வரும் பிரேம்குமாரும்பிரமாதம் .சமூக சேவகர்நாசர், லக்ஷ்மி யாக வரும் சத்ய கிருஷ்ணா , வார்டு பாய் -தம்பி ராமையா ஆகியோரின் அழகிய அனுபவ நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. தொழில்நுட்பகலைஞர்களில் ., சத்யாபொன்மாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் கலர்புல்லாக இருக்கிறது... என்பது மேலும்பலம்., கார்த்திக் இசையில் பாடல்கள் அழகாக இருக்கிறது. சந்தீப் கௌடாவின் பின்னணி இசையும் சூப்பர்.


தமிழ்செல்வனும்தனியார் அஞ்சலும்' - எனும் பட டைட்டிலும் ., அதில் காட்டப்பட்டிருக்கும் ஸ்டெம்செல் மோசடியும் தான் மேற்படி எல்லாவற்றையும் காட்டி றும் இப்படத்திற்கு பெரும் பலம்! என்றாலும் ., அந்த பலமான விஷயங்கள் இண்டர்வெல்லுக்கு பிறகே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சற்றேபலவீனம் . ஆனாலும்., சட்டத்திற்கு புறம்பாகசெய்யப்படும் கருக்கலைப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம் இருப்பதாகஇப்படத்தில் இயக்குனர் பிரேம்சாய் சொல்லவந்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.படத்தின் திரைக்கதையை இன்னும்கொஞ்சம் சிறப்பாகஅமைத்திருக்கலாம். .. என்பதை தவிர படத்தில் பெரிதாக குறையொன்றுமில்லை. ஆகமொத்தத்தில்,"தமிழ்செல்வனும்தனியார் அஞ்சலும்' - தமிழ் சினிமாவில் ஒரளவிற்கு முத்திரை பதிக்கலாம்!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in