Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காமராஜ்

காமராஜ்,Kamaraj
  • காமராஜ்
  • நடிகர்: ரிச்சர்டு மதுரம்
  • சமுத்திரக்கனி
  • இயக்குனர்: ஏ.பாலகிருஷ்ணன்
11 ஜூலை, 2015 - 13:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காமராஜ்

தினமலர் விமர்சனம்


சுதந்திரப் போர் வீரர், மூன்று தமிழக முதல்வர், இரண்டு பிரதமர்களை தேர்ந்தெடுத்த கிங்மேக்கர், அவர் மறைந்தபோது, அவர் வாழ்ந்த வாடகை வீட்டில் இருந்தவை சில கதர் வேட்டி, சட்டைகளும், 110 ரூபாயும்... எனும் முன்னுரையுடன் 15 புதிய காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முற்றிலும் புதிய பொலிவுடன் மீண்டும் வௌிவந்திருக்கிறது 'ரமணா கம்யூனிகேஷன்ஸின்' ''காமராஜ்'' திரைப்படம்!


'அப்பச்சி' காமராஜரின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவருக்கு மரியாதை செய்யும் விதமாக அ.பாலகிருஷ்ணனின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் வௌிவந்திருக்கும் 'காமராஜ்' படத்தில், 3-முறை தமிழக முதல்வராக இருந்த காமராஜர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையும், அவர் கொண்டு வந்த இலவசக்கல்வி, மதிய உணவுத்திட்டம் மற்றும் விவசாயம் செழிக்க உதவும் வகையில் கட்டிய பெருவாரியான அணைக்கட்டுகள்... உள்ளிட்ட ஒவ்வொன்றை பற்றியும் 'இன்ச்' பை 'இன்ச்'சாக சுவாரஸ்யமாக பேசும் காமராஜ் சினிமா, காமராஜ், காந்தியின் மீது கொண்டிருந்த பற்று, நேருவின் மீது கொண்டிருந்த பாசம், இந்திராவை இந்திய பிரதமராக அரியணை ஏற வைத்து அழகு பார்த்த நேசம் உள்ளிட்ட காமராஜரின் சகல ப்ளஸ்பாயிண்ட்டுகளையும் பேசுவதோடு, காமராஜருக்கு மூதறிஞர் ராஜாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மிசா காலத்தில் இந்திராவுடன் ஏற்பட்ட உரசல், சொந்த ஊரான விருதுநகரிலேயே ஒரு தேர்தலில் தோல்வியை தழுவிய துயரம் உள்ளிட்ட சகலத்தையும் சாமாணியனுக்கும் புரியும்படி சரியாக சொல்லியிருக்கிறது.


காமராஜ் திரைப்படம் டாக்குமெண்ட்ரி படம் மாதிரி இல்லாமல் கருத்து நெடி, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாகவும் தெரிவது இந்த முறை இந்தப்படத்திற்கு வெற்றியை தேடித்தரும்... என்பது திண்ணமாக தெரிகிறது!


தென்னகத்து காந்தியாக வாழ்ந்த சுயநலம் துளியும் இல்லா, அநாகரிகம் அறவே இல்லா, அரசியல்வாதி காமராஜராக ரிச்சர்டு மதுரமும், அவரது மகன் பிரதீப் மதுரமும் காமராஜரை நம் கண்முன் நிறுத்துகின்றனர்.


ஜவகர்லால் நேருவாக வரும் சுமன், தியாகி சத்தியமூர்த்தியாக வரும் சாருஹாசன், காமராஜர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை பார்த்து வியக்கும் எஸ்டேட் டேக்ஸ் அதிகாரியாக கனி பாத்திரத்தில் இயக்குநர், நடிகர் சமுத்திரகனி, மூதறிஞர் ராஜாஜியாக கோவை ராமசாமி, காமராஜரின் உதவியாளர் வைரவனாக ராஜா, இந்திராகாந்தியாக ஆனந்தி, முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனாக ஆர்.தீனதயாளன், காமராஜரின் பி.ஏ., வாக பட்ஜெட் லோகநாதன், காமராஜரின் தாயாக வரும் பாட்டி நடிகை உள்ளிட்ட ஒவ்வொருவரும் காமராஜர் படத்திற்கு தங்கள் உயிரை கொடுத்து நடித்து உயிர் கொடுத்திருக்கின்றனர்.


இளையராஜாவின் இசை, எம்.எம்.ரங்கசாமியின் ஔிப்பதிவு, விடி.விஜயனின் படத்தொகுப்பு, சேம்பர் ஜெயராஜ் - ஜே.பிரான்சிஸ் கிருபா இருவரது திரைக்கதை வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் ஆர்.பாலகிருஷ்ணனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ''காமராஜ்'' திரைப்படத்தை இக்கால இளைஞர்களையும் கவரும் விதத்தில் கர்ஜிக்க வைத்திருக்கிறது.


காமராஜ் - இக்கால ஊழல் அரசியல்வாதிகளும், அரசியல் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம்!


''காமராஜ் - 'கர்ஜணை'ராஜ்!!''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
காமராஜ் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in