Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பண்டக செசுகோ (தெலுங்கு)

பண்டக செசுகோ (தெலுங்கு),Pandaga chesko (Telugu)
30 மே, 2015 - 10:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பண்டக செசுகோ (தெலுங்கு)

எனர்ஜெடிக் யங் ஹீரோவான ராம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் தான் பண்டக செசுகோ. சமீபகாலமாக அவருடைய சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாத நிலையில், அவர் இந்தப்படம் மூலம் தனக்குரிய இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள பெருமுயற்சி எடுத்துள்ளார். இந்த குடும்பப்பாங்கான பொழுது போக்கு படம் அவருக்கு எந்த அளவிற்கு உதவி இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.


போர்ச்சுகல் நாட்டில் வாழும் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் கார்த்திக் (ராம்) குடும்ப உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். அவர் குடும்ப உறவுகளில் கூட ஒரு கொடுக்கல்-வாங்கல் இருப்பதாகவே உணர்கிறார். அவரை போலவே ஒரு மிகப்பெரிய பெண் தொழில் அதிபரான அனுஷ்கா என்ற ஸ்வீட்டியை (சோனல் சௌகான்) ராம் சந்திக்கிறார். இருவரும் தொழில் ரீதியாக பல விஷயங்களில் ஒத்து போகின்றனர். ஒரு நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்படும் சூழல் ஏற்படுகின்றது. இந்நிலையில் ராமின் அம்மா சரஸ்வதியின் (பவித்ரா லோகேஷ்) சோக காதல் கதையை தெரிந்து கொள்கிறார். அந்த காதலால் தான் தற்போது தனது குடும்பம் தனித்து விடப்பட்டு இருக்கின்றது என்பதனை ராம் தெரிந்து கொள்கிறார். இதனை அடுத்து ராம் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற இந்தியாவிற்கு வருகிறார். அதன் பிறகு பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார். வந்த இடத்தில் ராம் தனது முறைப்பெண்ணை திவ்யாவை (ராகுல் ப்ரீத் சிங்) சந்திக்கிறார். அவர் மீது காதல் வயப்படுகிறார். ராம் எவ்வாறு பிரிந்த குடும்பத்தை எவ்வாறு இணைக்கிறார்? யாரை திருமணம் செய்கிறார்? இது தான் படத்தின் மீதிக்கதையாகும்.

ஹீரோ ராமின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் அவர் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறார். அவர் மிகவும் ஸ்டைலிஷாகவும், அழகாகவும் இருக்கிறார். ஹீரோ ராம் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதாரமாகும். இரண்டு நாயகிகளும் அழகாகவே வந்து செல்கின்றனர். சோனல் சௌகானின் நடிப்பு முதல் பாதியில் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் இரண்டாம் பாதியில் அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு அவருடைய பங்களிப்பு குறைந்து விடுகின்றது. ராகுல் ப்ரீத் சிங் பாரம்பரிய முறையில் மிகவும் அழகாக வந்து அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விடுகிறார். அவர் பாடல் காட்சிகளில் கிளாமராக வந்து அசத்துகிறார். அவருக்கு நடிப்பு முழுமையாக வரவில்லை என்ற குற்றசாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகின்றது. இது தவிர ப்ரித்வி, நாராயணா, பிரபாஸ் ஸ்ரீனு, பவித்ரா லோகேஷ், வெண்ணெல கிஷோர், தேஜஸ்வி மடிவாடா போன்றோர்களின் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. வீக்எண்டு வெங்கட ராவ்வாக வரும் பிரபல காமெடியன் பிரம்மானந்தம் ஒரு கலக்கு கலக்கி விடுகிறார்.

படத்தின் முதல் பாதி மிகவும் விறு, விறுப்பாக செல்கிறது. கதை களம் கொஞ்சம் பழசாக இருந்தாலும், நேர்த்தியான திரைக்கதையின் மூலம் படம் செம ஸ்பீடாக செல்கிறது. தமனின் இசை படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றது. போர்ச்சுகல் நாட்டை மிக அழகான வகையில் சமீர் ரெட்டியின் கேமரா படம் பிடித்து இருக்கின்றது. எடிட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.


மொத்தத்தில் பண்டக செசுகோ ஒரு குடும்ப பாங்கான பொழுதுபோக்கு சித்திரம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in