Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டோலி கி டோலி(ஹிந்தி)

டோலி கி டோலி(ஹிந்தி),Dolly ki doli (Hindi)
  • டோலி கி டோலி(ஹிந்தி)
  • ராஜ்குமார் ராவ்
  • சோனம் கபூர்
  • இயக்குனர்: அபிஷேக் டோக்ரா
23 ஜன, 2015 - 17:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டோலி கி டோலி(ஹிந்தி)

சோனம் கபூர், ராஜ்குமார் ராவ், புல்கிட் சாம்ராட், வருண் சர்மா

டைரக்டர் : அபிஷேக் டோக்ரா

தயாரிப்பாளர் : அர்பாஜ் கான், மலைக்கா அரோரா கான்


ஒரு எளிமையான ஆணை திருமணம் செய்யும் நவநாகரீக பெண், எதிர்கொள்ளும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில், டாலி கி டோலி படம் உருவாக்கப்பட்டுள்ளது. பஞ்சாபி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகி சுமாரான வெற்றி பெற்ற கதை தான் இது. அர்பாஜ் கான், இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். படத்தை பற்றி இனி காண்போம்...


டோலி கேரக்டரில் சோனம் கபூர் நடித்துள்ளார். டோலி எப்போதும் ஒரு குழுவாகவே இருப்பவள். குழுவாக அவர்கள் பிறறை ஏமாற்றி வருபவர்கள் மனோஜ் ஜோஷி, டோலிக்கு அப்பாவாகவும், ஜீனா பாட்டியா, அம்மா கேரக்டரிலும், ஜீஷன் சகோதரர் கேரக்டரிலும் நடித்து பிறரை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். இந்நிலையில், டோலி, ஹர்யானவி கை சோனு (ராஜ்குமார் ராவ்) ஏமாற்றுகிறார். பின் 10க்கும் மேற்பட்டவர்களையும் தொடர்ந்து டோலி ஏமாற்றுகிறார். மனோஜை (வருண் சர்மா) ஏமாற்ற நினைக்கும்போது, எதிர்பாராதவிதமாக, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணம் முடிந்த மறுநாளே, டோலி இருக்கும் இடத்தில், சோனுவும் வந்திறங்குகிறார். இதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. பின் டோலி எத்தகைய விளைவுகளை எதிர்கொள்கிறாள் என்பதே படத்தின் மீதிக்கதை. ராபின் சிங் (புல்கிட் சாம்ராட்), படத்தில், போலீஸ் ஆபிசர் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் முக்கியமான திருப்பங்களுக்கு இவரே முக்கிய காரணமாக உள்ளார்.


டைரக்டர் அபிஷேக் டோங்ரா, படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தவறி விட்டார். சிறந்த நடிகர்கள் இருந்தபோதிலும், தரமற்ற திரைக்கதையின் மூலம், படத்தின் பின்பாதி, பார்ப்பவர்களுக்கு சலிப்பையே பரிசாக அளிக்கிறது.பாடல்கள் சிறப்பாக இருக்கும்போதிலும், படத்தை விட்டு வெளியே வந்தால், ஒன்றும் மனதில் நிற்கவில்லை. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு ஆவரேஜ். பின்னணி இசையில் சிறிது மெனக்கெட்டிருக்கலாம். சிறந்த கதை இருக்கும்போதிலும், தரமற்ற வசனங்கள், தெளிவற்ற திரைக்கதை, படத்தை சேதாரமாக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.


படத்தின் கதை முழுமையற்றதாக இருக்கும்போதிலும், சோனம் கபூரின் நடிப்பு, சற்று படத்தை தாங்கி பிடிக்கிறது. படத்தில் பெண்களுக்கு முக்கிய கேரக்டர் என்பதை, சோனம் கபூரின் நடிப்பு சொல்லாமல் சொல்லி விடுகிறது. ராஜ்குமார் ராவ், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வசன உச்சரிப்புகளிலும் காமெடியை வெளிப்படுத்துவது தனிச்சிறப்பு. வருண் சர்மா, ராஜேஷ் சர்மா, ஜீஷன், மனோஜ் ஜோஷி, ஜீனா பாட்டியா உள்ளிட்டோர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. புல்கிட் சாம்ராட்டின் நடிப்பு, சல்மான் கானின் நடிப்பை ஒத்ததாக இருக்கிறது.


வழக்கமான காமெடி படங்களை விரும்புபவர்கள், டாலி கி டோலி படத்தை தாராளமாக சென்று பார்க்கலாம்


ரேட்டிங் : 2.5/5




வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in