Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அலோன் (ஹிந்தி)

அலோன் (ஹிந்தி),Alone (Hindi)
  • அலோன் (ஹிந்தி)
  • கரன் சிங் குரோவர்
  • பிபாஷா பாசு
  • இயக்குனர்: பூஷன் படேல்
17 ஜன, 2015 - 16:17 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அலோன் (ஹிந்தி)

அலோன்




நட்சத்திரங்கள் : பிபாஷா பாசு, கரன் சிங் குரோவர், ஜாகிர் ஹூசைன்

டைரக்டர் : பூஷன் படேல்

தயாரிப்பாளர் : குமார் மங்கட், அபிஷேக் பதக், பிரதீப் அகர்வால், பிரசாந்த் சர்மா


ஆத்மா, ரக்த், கிரியேச்சர் உள்ளி்ட்ட திகில் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிபாஷா பாசு, புதிதாக, அலோன் என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். படத்தை பற்றி இனி பார்ப்போம்,.....


தாய்லாந்து மொழியில் வெளியான திகில் படத்தின் ரீமேக்கே அலோன் படம். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அஞ்ஜனா மற்றும் சஞ்ஜனா கேரக்டர்களில் பிபாஷா பாசு நடித்துள்ளார். கபீர் கேரக்டரில், கரன் சிங் குரோவர் நடித்துள்ளார். மேற்படிப்பிற்காக, லண்டன் செல்கிறார் கபீர். 10 ஆண்டுகளுக்கு பிறகு, கபீர் மீண்டும் இந்தியா திரும்புகிறார். அஞ்ஜனா மற்றும் சஞ்ஜனா இருவரும் கபீரை காதலிக்கின்றனர். கபீர், சஞ்ஜனாவை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். கேரளாவில் உள்ள தனது அம்மாவை பார்க்க கபீர், சஞ்ஜனாவுடன் காரில் வந்துகொண்டிருக்கும்போது, கார் திடீரென விபத்தில் சிக்கிக்கொள்கிறது. பேய் ஆக வரும் அஞ்ஜனாவால், இவர்கள் எந்தளவிற்கு துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை, படம் பார்ப்பவர்கள் சிரிக்கும் விதத்தில் இருக்கிறது அலோன் படம்.


தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை தந்த டைரக்டர் பூஷன் குமார், திகில் கலந்த செக்ஸ் படத்தை வழங்க நினைத்து தோல்வியை தழுவியுள்ளார். படத்தின் தோல்விக்கு அரத பழசான பார்முலாவும், சுரத்தில்லாத நடிப்பும் முக்கிய காரணங்கள் ஆகும். பாடல்கள் சிறப்பாக இருந்தபோதிலும், தேவையான இடங்களில் இடம்பெறாதது, படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பையே தருகிறது. எடிட்டிங் சிறப்பாக இல்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ரசிகர்களுக்கு அயராத சலிப்பையே தருகிறது. கதை நன்றாக இருந்தபோதிலும், தெளிவற்ற வசனங்களால், படம் தோல்வியடைந்துவிட்டது. ஆர்ட் மற்றும் காஸ்டியூம் சொல்லிக்கொள்ளும்படி உள்ளது.


கிரியேச்சர், ஆத்மா படத்தில் நடித்த நடிப்பையே, பிபாஷா பாசு, இதிலும் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். கரன் சிங் குரோவரின் நடிப்பு சிறப்பாக இருந்தபோதிலும், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, ஜாகிர் உசேன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு, படம் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை மட்டுமே வரவழைக்கிறது.


திகில் பட பிரியர்கள் அலோன் படம் பார்க்கலாம். ஆனால், , படம் பார்த்து சிரிக்கக்கூடாது.


ரேட்டிங் : 2.5/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in