Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தி ஷவ்கீன்ஸ்(இந்தி)

தி ஷவ்கீன்ஸ்(இந்தி),The Shaukeens(hindi)
  • தி ஷவ்கீன்ஸ்(இந்தி)
  • பிற நடிகர்கள்: அனுபம் கர், அன்னூ கபூர், பியூஸ் மிஸ்ரா, அக்ஷை குமார்
  • பிற நடிகைகள்: லிசா ஹைடன்
  • இயக்குனர்: , அபிஷேக் சர்மா
08 நவ, 2014 - 15:39 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தி ஷவ்கீன்ஸ்(இந்தி)

தினமலர் விமர்சனம்


அபிஷேக் சர்மா இயக்கத்தில், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா, அனுபம் கெர், லிசா ஹைடன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும், அக்ஷ்ய் குமார் கெஸ்ட் ரோலிலும் நடித்து வெளிவந்துள்ள காமெடி கலாட்டா தான் ''தி ஷாக்கீன்ஸ்'' திரைப்படம். ஏற்கனவே வெளிவந்த சவுக்கீன்ஸ் படத்தின் ரீ-மேக் என்றாலும், அதை இந்தகாலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இயக்கி இருக்கிறார் அபிஷேக் சர்மா.


பிங்கி(பியூஸ் மிஸ்ரா), லாலி(அனுபம் கெர்) மற்றும் கேடி(அன்னு கபூர்) ஆகிய மூவரும் வயதான நண்பர்கள். இவர்கள் தங்களது இளமைகாலத்தில் அனுபவிக்க முடியாத விஷயங்களை எல்லாம் இப்போது அனுபவிக்க எண்ணி மொரிசீயஸ் செல்கின்றனர். இதுஒருபுறம் இருக்க தனது பாய்பிரண்டால் கைவிடப்பட்ட அஹானா எனும் லிசா ஹைடன், தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது ஏதேச்சையாக சினிமா ஸ்டாரான அக்ஷ்ய் குமாரை சந்திக்கிறார். அங்கு தொடங்குகிறது படத்தின் காமெடி கலாட்டா. மொரிசீயசில், அஹானாவை சந்திக்கும் பியூஸ் மிஸ்ரா, அனுபம் கெர் மற்றும் அன்னு கபூர் மூவரும், அவரை இம்பரஸ் செய்ய பண்ணும் காமெடி கலாட்டாக்கள் தான் 'தி சவுக்கீன்ஸ்' படத்தின் கதை.


அனுபம் கெர், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அறிந்து செயற்கை தன்மை இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.


குறும்புத்தனமும், கவர்ச்சியுமாக லிசா ஹைடன் படம் முழுக்க தன் பங்களை சிறப்பாக செய்து நடித்திருக்கிறார். தி சவக்கீன்ஸ் படத்தின் ஹைலைட்டே அக்ஷ்ய் குமார் தான். ஹீரோவாக வரும் அக்ஷ்ய், தான் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.


1982-ம் ஆண்டு வெளிவந்த சவுக்கீன்ஸ் படத்தின் ரீ-மேக் என்றாலும், அதை இந்தக்காலத்திற்கு ஏற்றவாறு அருமையாக படமாக்கியிருக்கிறார் அபிஷேக் சர்மா. அபிஷேக் சர்மாவின் இயக்கத்திற்கு திக்மான்சூ துலியாவின் திரைக்கதை, யோ யோ ஹனி சிங், ஹார்ட் கவுர் ஆகியோரின் இசை, செளத்ரியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பக்கபலமாக இருந்துள்ளது. ''தி சவுக்கீன்ஸ்'' படத்தை ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் நன்றாக இருப்பதாக தெரிகிறது, அதேசமயம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாமா என்று எண்ணவும் தோன்றுகிறது.




'தி சவுக்கீன்ஸ்' - 'காமெடி கலாட்டா!'




ரேட்டிங் - 3/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in