Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

49 ஓ

49 ஓ,49 O
  • 49 ஓ
  • நடிகர்: கவுண்டமணி
  • ..
  • இயக்குனர்: ஆரோக்கியதாஸ்
17 செப், 2015 - 16:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 49 ஓ

தினமலர் விமர்சனம்


கரன்ட் காமெடி நடிகர் சந்தானம், அதற்கு முந்தைய காமெடி வடிவேலு உள்ளிட்டவர்கள் நாயகர்களாக சமீபமாக நடித்த படங்கள் எல்லாம் செய்யாத சாதனையை எவர்கிரீன் காமெடி நடிகர் கவுண்டமணி, கதையின் நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் ''49-ஓ'' செய்திருக்கிறது என்றால் மிகையல்ல! யெஸ், முழுக்க முழுக்க விவசாயத்தை ஆதரிக்கும், விளைநிலங்களை அழிப்பவர்களை, அபகரிப்பவர்களை எதிர்த்தும் கவுண்டரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ''49-ஓ'' திரைப்படம் இக்காலகட்டத்திற்கும், இன்றைய இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும் படம் அல்ல பாடம்! அதுவும் துளியும் போரடிக்காத, தூக்கம் வராத சுவாரஸ்யமான பா(ப)டம் என்பது குறிப்பிடத்தக்கது.


கதைப்படி, விவசாயத்தையே நம்பியிருக்கும் தன் ஊரையும், ஊர் மக்களையும் காப்பாற்ற புறப்படும் ஒரு விபரமான விவசாயி, அரசியல் வாதிகளுக்கு எதிராக அவர் செய்யும் போராட்டமும், கோபமும் தான் ''49-ஓ'' படம் மொத்தமும்!


லோக்கல் அரசியல் புள்ளியின் வாரிசும், அவரது ரியல் எஸ்டேட் நண்பர்களும் சேர்ந்து ஏழை விவசாயிகளுக்கு எப்போதுமே உடன் இருக்கும் கடன் பிரச்னை, கரன்ட் பிரச்னை... உள்ளிட்ட இன்னும் பல கண்ணீர் பிரச்னைகளை காரணம் கட்டி, அதிக விலை தருவதாக சொல்லி அவர்களது நிலங்களை, கொஞ்சமே கொஞ்சம் முன்பணம் கொடுத்து தங்களுடையதாக்கி கொண்டு மீதி பணத்தை தராமல் இழுத்தடித்து, அந்த இடத்தில் ரியல் எட்டேஸ் பிசினஸ் செய்கின்றனர். அவர்களை நம்பி தன் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்த விவசாயி ஒருவர், மாப்பிள்ளை வீட்டில் சொன்ன வார்த்தையை காபந்து செய்ய முடியாமலும், மகளின் திருமணத்தை நடத்தி வைக்க முடியாமலும் தற்கொலை செய்து கொள்கிறார். இதைப்பார்த்து பொறுக்க முடியாமல் பொங்கி எழும் கதையின் நாயகர் கவுண்டமணி எடுக்கும் அவதாரமும், பணத்தாசை பிடித்த ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிக்கு எதிரான போராட்டமும் தான் ''49-ஓ'' படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம். அதை எந்தளவுக்கு காமெடியாகவும், கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அந்தளவிற்கு கலக்கலாக கருத்தாகத்துடன் சொல்லியிருக்கின்றனார் இளம் இயக்குநர் ஆரோக்கிய தாஸ்.


கவுண்டமணி, விவசாயியாக தன் வயதிற்கும், உருவத்திற்கும் ஏற்ற பாத்திரத்தை ஏற்று பொருந்தி நடித்திருக்கிறார். பிச்சைக்காரனை, தன் கோரிக்கைளை ஏற்று கொள்ளாத அரசியல்வாதிகளுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து, வேடிக்கை பார்ப்பதில் தொடங்கி, 49-ஓவிற்கு வாக்களிப்பதால் என்ன பயன்', அதன் பயன் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என அரசாங்கத்திற்கான அறிவுரை உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தியேட்டரில் கை தட்டலையும். விசில் சத்தத்தையும் கிளப்பிவிடுகின்றன.


இது மாதிரி சிரீயஸான விஷயங்களுக்கு இப்படி விசில் சத்தமும், கைத்தடலும் இருந்தது என்றால், கவுண்டமணி தன் பாணியில் போகிற போக்கில் அடிக்கும் காமெடி பன்ச்களுக்கு எல்லாம் தியேட்டர் அதிர்கிறது. அதிலும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு எதிராக தன் விளை நிலத்தை ஆறடி தாய் மடி திட்டம் எனும் புதுமையாக சுடுகாடு திட்டத்திற்காக விளம்பர பட இயக்குநராக வரும் நான் கடவுள் ராஜேந்திரனையும், அந்த விளம்பர படத்தில் ஹீரோவாக நடிக்க வரும் சாம்ஸையும் போட்டு தாக்கும் இடங்களிலும் திரையரங்கம் சிரிப்பில் அல்லோல அல்லோலப்படுகிறது. இதுமாதிரி படம் முழுக்க கவுண்டரின் காமெடி நெடி, காட்சிக்கு காட்சி சற்று தூக்கலாக இருக்கிறது. படத்தில் லவ், ஆக்ஷ்ன், இத்யாதி இத்யாதி... உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் எந்தவித்திலும் காட்டாமல் ஆஹா ஓஹா என தூக்கி நிறுத்துகிறது.


கவுரி பாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பது மாதிரியே எம்.எல்.ஏ.,பூமி நாதனாக வரும் ஆடுகளம் ஜெயபாலன், அவரது மகன் கரிகாலனாக படம் முழுக்க வில்லனாக வரும் களவாணி திருமுருகன், எதிர்கட்சி தீனதயாளன் - பாலாசிங், விளம்பரபட இயக்குநர் - நான் கடவுள் ராஜேந்திரன், அல்டாப் விளம்பர பட ஹீரோ சாம்ஸ், ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆறுமுகமாக வரும் குரு சோமசுந்தரம், கவுண்டமணியின் உறவுவ்பெண் கயலாக வரும் வைதேசி, கவுண்டமிணியின் மனைவி விஷாலினி, மூணாறு ரமேஷ், அல்வா வாசு, அவன் இவன் ராம்ராஜ் உள்ளிட்ட சகலரும் சக்கை போடு போட்டிருக்கின்றனர். அதிலும் நான் கடவுள் ராஜேந்திரன் - சாம்ஸ் - கவுண்டமணியின் காமெடி, இப்படத்தில் கவுண்டருடன் செந்தில் இல்லாத குறையை செவ்வனே தீர்க்கிறது.


ரமேஷ் கிருஷ்ணாவின் படத்தொகுப்பு, யுகபாரதியின் பாடல்கள், கே-வின் இசை, ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் கவுண்டமணியின் நடிப்பு மாதிரியே, ஆரோக்கியதாஸின் எழுத்து - இயக்கத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.


ஆறடி தாய்மடி திட்டம், ஓட்டு பதிவு இயந்திரத்தில் 49-ஓவிற்கு எத்தனை பேர் வாக்களித்தாலும், அது எப்படி பயன் இல்லாமல் இருக்கிறதோ... அதை எப்படி பயன் உள்ளதாக மாற்ற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தரப்பட்டிருக்கும் ஐடியா, விவசாயிகள் எத்தனை பெரிய கஷ்டம் வந்தாலும் விளை நிலங்களை விற்க கூடாது, அப்படியே விற்றாலும் அதை ரியல் எஸ்டேட்காரர்கள் பயன்படுத்த கூடாது. விளைநிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க வேண்டும் எனும் போரடிக்காத போதனை உள்ளிட்ட விஷயங்களுக்காக 49-ஓ படத்தில் உள்ள ஒருசில சின்ன சின்ன குறைகளும் நிறைகளாகவே ஜொலிக்கின்றன. ஆகவே கவுண்டரின் 49-ஓ - அவர் பாணியிலேயே ஆஹா - ஓஹா!!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in