Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நேர் எதிர்

நேர் எதிர்,Ner Yethir
  • நேர் எதிர்
  • நடிகர்: ரிச்சர்டு, பார்த்தி
  • வித்யா
  • இயக்குனர்: ஜெயபிரதீப்
29 ஜன, 2014 - 15:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நேர் எதிர்

தினமலர் விமர்சனம்


தமிழில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்த திருப்தியை தர வெளிவந்திருக்கும் திரைப்படம்! அதற்குதான் ஹாலிவுட் படங்களையே 'டப்' செய்கிறார்களே... என நீங்கள் கேட்காத பட்சத்தில் 'அக்ராஸ் தி ஹால்' என்ற ஹாலிவுட் படத்தை தமிழில் யாரும் 'டப்' செய்வில்லையே... அதனால் அந்தப்படத்தின் அப்பட்டமான காப்பியாக 'நேர் எதிர்' திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்!

தான் மனம் விரும்பி மனைவியாக்கி கொள்ள இருப்பவளை, மதிமயக்கி (அவளது சம்மதத்துடன் தான்...) பெண்டாளும் நண்பனுக்கும், தன் காதலிக்கும் ஒரு சேர பாடம் புகட்டும் ஹீரோ (வில்லானிக் ஹீரோ.?!) வின் கதைதான் 'நேர் எதிர்' மொத்தபடமும்!

கார்த்திக் எனும் நட்பு துரோகியாக ரிச்சர்ட், கதிர் எனும் வில்லானிக் ஹீரோவாக பார்த்தி, இஷா எனும் ஏமாற்றுகாரியாக நாயகியாக வித்யா, நீராவியாக எம்.எஸ்.பாஸ்கர் என குறிப்பிட்டு சொல்லும்படியான நட்சத்திரங்கள் தான். நிறையவே நடித்திருக்கிறார்கள். அதில் 'நீராவி' என தன் பெயர் காரணம் சொல்லும் எம்.எஸ்.பாஸ்கர் நிறைவு!

சதீஷ் சக்ரவர்த்தியின் மிரட்டும் இசை, ராசா மதியின் திகில் ஒளிப்பதிவு, பார்த்தி (கதிர்)யின் நடிப்பு எல்லாம் அளவுக்கு மஞ்சுவதால் 'நேர் எதிர்' சற்றே எதிர்மறை ஆகி விடுகிறது!

எம்.ஜெய பிரதீப்புக்கு என்ன ஒரு துணிவு.?! 'நேர் எதிர்' இயக்கம் அவருடையது ஓ.கே.! கதையும் அவருடையது என டைட்டில் கார்டு போடுகிறாரே.?! எனும் விஷயம் தெரிந்தவர்களின் கிண்டலும் காதலில் விழுந்தது!

ஆகமொத்தத்தில், ''நேர் எதிர் - புதிர்!''

-------------------------------------------------------------------------


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா லவ் பண்றார். அந்த ஊர்லயே பேமசான ஒரு ஹோட்டலுக்கு அந்தப்பொண்ணு கார்ல போறதைப்பார்த்து பாலோ பண்ணி, அந்தப்பொண்ணு ரூம் போட்ட ரூம்க்கு எதிர் ரூம்ல ரூம் போடறார். (அடேங்கப்பா, ஒரு வாக்கியத்துல எத்தனை ரூம்? நாம போட்டாச்சு?). இப்போ அவளைக்கண்காணிக்கனும். இப்பவெல்லாம் பொண்ணுங்களைக் கண்காணிப்பதுதானே நாட்டோட ஹாட் டாபிக்?

கண்காணிப்பு நடக்கும்போது ஹீரோ தன் உயிர் நண்பனுக்கு ஃபோன் பண்ணி மேட்டரைச்சொல்லி துணைக்கு அவனையும் வரச்சொல்றார். இப்போ ஒரு ட்விஸ்ட். ஹீரோவுக்கு துரோகம் செஞ்சதும், ஹீரோவுக்கு நிச்சயம் ஆன பொண்ணோட கில்மா பண்ண ஹோட்டல்க்கு அந்த ரூம்ல வந்ததும் அந்த உயிர் நண்பன் தான். இந்த ரூம்ல ஹீரோ, அந்த ரூம்ல ஹீரோயின், வில்லன். அவன் வெளில வர வழி இல்லை. இனி என்ன நடக்கும்? என்பதன் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் தான் நேர் எதிர் கதை.

அஜித்தின் மச்சானும், ஷாலினி அஜித்தின் தம்பியும் ஆன ரிச்சர்ட் தான் படத்தின் வில்லன். ப்ளே பாய் கேரக்டர் பிரமாதமாப்பண்ணி இருக்கார். கதிர் இயக்கத்தில் காதல் வைரஸ்ல ஹீரோ வா நடிச்சாரே அவரே தான். படத்தில் மொத்தம் உள்ள முக்கியமான அஞ்சு கேரக்டர்ல இவர் தான் முதல் பரிசு வாங்குறார். முகத்தில் பதட்டம் காண்பிக்கும்போதும் சரி, ஒரே ஹோட்டல்ல 2 ஃபிகருங்களைக்கரெக்ட் பண்ணும்போதும் சரி அப்ளாஸ் அள்ளறார்.

ஹீரோவா வருபவர் புதுமுகம் பார்த்தி. ஏதோ பரவாயில்லை என்ற அளவில் தான் இவர் நடிப்பு. வாய்ஸ் மாடுலேஷனில் வெரைட்டி காண்பிக்கிறேன் பேர்வழி என இவர் நிறுத்தி நிதானமாக வசனம் பேசுவது வசனத்தை ஒப்பிப்பது மாதிரி இருக்கு.

ஹீரோயினாக வரும் வித்யா 60 மார்க் போடும் அளவு சுமார் அளவைத்தாண்டிய ஃபிகர் என்றால், வில்லனின் எக்ஸ்-கரண்ட் கேர்ள் ஃபிரண்டாக வரும் அந்த ஃபிகர் 75 மார்க் அளவு பிரமாதமாக இருக்கார். இந்த இயக்குநர்கள் கிட்ட இருக்கும் கெட்ட பழக்கமே சுமார் ஃபிகரை ஹீரோயினா போட்டுட்டு , பக்கா ஃபிகரை துணைக்கேரக்டரில் போட்டுவிடுவதுதான் (இதுக்கு ஏதாவது முக்கிய உளவியல் காரணம் இருக்கும் என அவதானிக்கிறேன், நேரம் கிடைக்கையில் விசாரித்து இது பற்றி தாளிக்கிறேன்)

ஹோட்டல் ரூம் பாயாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் கச்சிதமான நடிப்பு, அல்வா வாசுவும் இருக்கார், ஒரு சீனில் மட்டும் காமெடி பண்றார் .

ஏதோ ஹாலிவுட் படத்தைப்பார்த்து எடுத்திருக்கார்னு அப்பட்டமா தெரியுது. பரபரப்பான கதை தான், நகாசு வேலைகள் சேர்த்து இன்னும் கலக்கி இருக்கலாம். 100 நிமிடம் தான் மொத்தப்படமே . இயக்குநர், ஜெயபிரதீப் முதல் படம் என்ற அளவில் ஓக்கே தான். இசை சதீஷ் சக்ரவர்த்தி, பல இடங்களில் பி.ஜி.எம்களில் ஹாலிவுட் பட தழுவல் அப்பட்டமாய்த்தெரியுது . என் பேரு லட்சுமி என்ற ஒரு பாட்டில் அந்த முதல் வரி புரியவே பாட்டு முடிஞ்சிடுது . அது ஒரு ஹிட் பாட்டு

சி.பி.கமெண்ட் -
இது ஹாலிவுட் படத்தின் காப்பியோ, ஒரிஜினலோ படம் பரபரப்பா தான் போகுது. ஆனா 100 நிமிடம் என்பதால் சிலருக்கு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லாமல் போகலாம். மற்றபடி ஒரு நல்ல க்ரைம் த்ரில்லரே.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in