Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ப்ரோஸன் (ஆங்கிலம் 3டி)

ப்ரோஸன் (ஆங்கிலம் 3டி),Frozen (English 3D)
  • ப்ரோஸன் (ஆங்கிலம் 3டி)
  • ..
  • ..
  • இயக்குனர்: கிறிஸ் பக்
06 டிச, 2013 - 11:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ப்ரோஸன் (ஆங்கிலம் 3டி)

தினமலர் விமர்சனம்


அச்சம், கோபம் போன்ற அதீத உணர்வுகளால் தீண்டப்பட்டால், பனிச்சூறாவளியை உருவாக்கும் அற்புத சக்தி படைத்த இளவரசியும், அவளுக்கு அன்பை கற்றுத் தந்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் அவளது சகோதரியும்... மாயாஜால கண்ணாமூச்சி ஆடும் ப்ரோஸன்.

இளவரசி எல்சா (இடினா மென்ஸெல்) மகுடம் சூடும் நாளில், ஒரு விபரீதம் விளைகிறது. அரன்டேல் நாடே, அவளது உணர்ச்சி பெருக்கெடுப்பால், பனி சூழ் நாடாக மாறுகிறது. தன்னால் ஏற்பட்ட துன்ப விளைவுகளை தாங்க மாட்டாமல், நாட்டை விட்டு ஒரு மலை உச்சிக்கு ஓடுகிறாள் எல்சா. அங்கே, தன் சக்தியால் பனி மாளிகையை அமைத்துக் கொண்டு தனிமையில் வாழ்கிறாள். இளம்பெண் அனா(கிறிஸ்டன் பெல்), எல்சாவின் மகுடமேற்பு விழாவுக்கு வந்த இளவரசன் ஹான்ஸ் (சான்டினோ பாண்டனா) மேல் கண்டவுடன் காதல் கொள்கிறாள்.

பின் நாட்டை அவனிடம் ஒப்படைத்து, அக்காவை தேடி புறப்படுகிறாள். வழியில் சந்திக்கும் கிறிஸ்டாப் (ஜோனத்தன் கிராப்) எனும் இளைஞன், அவளுக்கு உதவுகிறான். மீண்டும் அல்சாவின் பினிக்கரங்களால் பாதிக்கப்படுகிறாள் அனா. அவள் இறந்து விடுவாள் என நம்பும் ஹான்ஸ், சுயரூபத்தை வெளிக்காட்டுகிறான். கிறிஸ்டாப் உதவியுடன் அவனை வீழ்த்தும் அனா, எல்சாவுடன் நாடு திரும்பினாளா? என்பது க்ளைமாக்ஸ்.

உறைபனியில் செய்யப்பட்ட பொம்மை(ஸ்நோமேன்) பேசுவதும், சித்திரக்குள்ளர்கள் வட்டப்பாறைகளாய் சுருண்டு கிடப்பதும், எல்சாவின் கையசைவில்... பனிப்பாலங்களும், மாடிப்படிகளும், மாட மாளிகையும் உருவாவதும் அசத்தல் முப்பரிமாணம்.

'பாப்கார்ன்'களுக்கு இடைவெளி கொடுத்து, அடிக்கடி கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். அது, இயக்குனர் கிறிஸ் பக்கின் இயக்கத்திற்கு சொல்லும் அசத்தல் வாழ்த்து!

மொத்தத்தில், ''ப்ரோஸன் - குளுமை!''

ரசிகன் குரல் - ஐஸ்கட்டி விழுந்த மாதிரி இருந்துச்சா? நான் துடைச்சு விடவா டார்லிங்?



வாசகர் கருத்து (2)

jack - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2013 - 21:47 Report Abuse
jack goood
Rate this:
Silviya - Dindigul  ( Posted via: Dinamalar Android App )
11 டிச, 2013 - 11:55 Report Abuse
Silviya It is a fairy tale. but still comparing wit all old fairy stories like cinderella, snow white they r really classics to watch all the time. but should appreciate the story writers n directors for their effortless work for bringing all the stories before our eyes realistically.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in