Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

யுனிவர்சல் சோல்ஜர் டே ஆப் ரெக்கனிங் (ஆங்கிலம்)

யுனிவர்சல் சோல்ஜர் டே ஆப் ரெக்கனிங் (ஆங்கிலம்),Universal Soldier: Day of Reckoning
  • யுனிவர்சல் சோல்ஜர் டே ஆப் ரெக்கனிங் (ஆங்கிலம்)
  • நடிகர்: ஸ்காட் அட்கின்ஸ்
  • ..
  • இயக்குனர்: ஜான் ஹயாம்ஸ்
04 செப், 2013 - 16:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யுனிவர்சல் சோல்ஜர் டே ஆப் ரெக்கனிங் (ஆங்கிலம்)

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு. ஹாஸ்பிடல்ல அவர் கிட்டே ஸ்டேட்மெண்ட் வாங்க எஃப்.பி.ஐ., ( FBI) காத்திருக்கு. ஆனா அவருக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் நினைவு இருக்கு. நினைவு தெரிஞ்ச வரை என்ன நடந்ததுன்னா... ஹீரோவுக்கு ஒரே ஒரு சம்சாரம், ஒரு பெண் குழந்தை. ஒரு நாள் 3 பேர் கொண்ட கும்பல் அவர் வீட்டுக்கு வந்து குடும்பத்தையே நிர்மூலம் ஆக்கிடுது. பழிக்குப்பழி வாங்கத்துடிக்கிறார். தன் குடும்பத்தை சிதைச்சது யாருன்னு கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கறார். அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கு. அதாவது கவர்மெண்ட்டே இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணி இருக்கு. அவர் நினைவில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததா மூளையில் பதிவு பண்ணி வைக்குது. உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கலை. வெறும் பிம்பம் மட்டுமே அவர் மூளைல பதிவாகி இருக்கு. அதாவது பதிவு செய்யப்பட்டிருக்கு.

எதுக்காக கவர்மெண்ட் இப்படி பண்ணுச்சு? ஹீரோ இதுக்கெல்லாம் எப்படி பதிலடி தர்றாரு? என்பதை எந்த அளவு வன்முறையும், ரத்தமுமா சொல்ல முடியுமோ அந்த அளவு வல்கரா சொல்லி இருக்காங்க.

ஹீரோ ஸ்காட் அட்கின்ஸ். ஆள் ஜம்முன்னு இருக்கார். ஜிம் பாடி, ஃபைட் சீன்ல கலக்கி எடுத்துட்டார். பாடி லேங்குவேஜ்ல இன்னும் சுறுசுறுப்பு காட்டி இருக்கலாம். குழந்தையுடன் கொஞ்சும் காட்சிகள், மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் காட்சிகள் இன்னும் நல்லா சொல்லி இருக்கலாம். அப்போதான் அவங்க இறந்ததன் பாதிப்பு ஆடியன்சுக்கு பாதிப்பா உணர வைக்க முடியும்.

வில்லனா சூப்பர் ஸ்டார் ஜீன் கிளாடு வேண்டம். இவர் ஹீரோவை விட செம எக்சசைஸ் பாடி. ஃபைட் சீனில் பொறி பறக்குது.

ஹீரோயின், அந்த குழ்ந்தை எல்லாரும் கச்சிதமான நடிப்பு. இன்னொரு ஹீரோயின் நம்ம ஊர் இலியானாவுக்கே அக்கா மாதிரி ரொம்ப ரொம்ப மெல்லிய தேகம், அய்யோ பாவம். காம்ப்ளான் அவங்கம்மா குடுக்கவே இல்ல போல...


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஒரு ஆக்‌ஷன் படம், சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி பேஸ்ல சொல்லப்பட்டாலும் மிக நிதானமான அணுகுமுறை திரைக்கதைல தெரியுது. வெல்டன். பொதுவா இந்த மாதிரி கதைல ட்ரீட்மெண்ட் ஃபாஸ்ட்டா இருக்கனும்னு நினைப்பாங்க. இவர் வித்தியாசமா ஸ்லோவா சொல்லி இருக்கார்.
 
2. படத்தில் 2 இடங்களில் யூகிக்க முடியாத திருப்பங்கள் வருது. குட்!

3. வில்லன் ஜீன் கிளாடு வேண்டம்க்கு அளிக்கப்பட்ட அதீத முக்கியத்துவம் படத்துக்கு பிளஸ் பாயிண்ட், கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் மாதிரி. ஒரு படத்தில் வில்லன் ரோல் பிரமாதமாக பேசப்பட்டால் ஆட்டோமேட்டிக்காக் அது மக்கள் மனதில் தங்கிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவுக்கு எந்த பழைய நினைவுமே வரவில்லை. முதன் முதலாக அவர் நுழையும் ஒரு வீட்டில் எந்த இடத்தில் எந்த சுவிட்ச் இருக்கு என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருப்பது எப்படி?

2. சிவப்பு கலர் கார் ஒன்றை ஹீரோ அபேஸ் பண்ணி பல இடங்களுக்கு போறார். அந்த கார் ஓனர் ஹீரோவை சத்தம் போடறார். அவ்வளவுதான், அட்லீஸ்ட் போலீஸில் கூட புகார் தர மாட்டாரா? எப்படியோ போய்ட்டு போகுதுன்னு அநாமத்தா விட அது என்ன சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரா?

3. ஹீரோவுக்கு ஒரு குழப்பம். தன் மனைவி, மகள் கொல்லப்பட்டாங்களா? எல்லாம் டிராமாவா? அப்டின்னு. ஏன் அவர் கல்லறை போய் செக் பண்ண எந்த முயற்சியும் எடுக்கலை?

4. அரசாங்கம் ஏற்பாடு செஞ்ச ஹாஸ்பிட்டல்லேயே ட்ரீட்மெண்ட் எடுக்கும் ஹீரோ உண்மை நிலவரம் அறிய ஏன் வேற பிரைவேட் ஹாஸ்பிடல்ல போய் தன்னை செக் பண்ணிக்கலை ?

5. கோபமாக இருக்கும் ஹீரோவை சந்திக்க வரும் உயர் அதிகாரி கையில் எந்த ஆயுதமோ, வேறு பாதுகாப்போ இல்லாம தனிமையில் அவரை சந்திச்சு சாவது எப்படி?

6. தேவைக்கு மேல ரொம்ப ஓவரா வன்முறை, ரத்தம் எதுக்கு?

மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாழ்த்திக்கொடுத்த சாபத்தை வரமா மாத்திக்கிட்டோம்.

2. இங்கேயே இரு 10 நிமிஷத்துல நான் வந்துடறேன். அப்படி வரலைன்னா? மறுபடியும் ஒரு 10 நிமிஷம் இரு.

3. ஞாபகங்கள் எப்பவும் நம்மை துன்புறுத்திட்டுத்தான் இருக்கும்.


சி.பி.கமெண்ட் - ஆக்‌ஷன், சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி விரும்பிகள் பார்க்கலாம். பெண்கள், மைனர்கள், மாணவ, மாணவிகள் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் தவிர்க்க வேண்டியபடம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in