Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஓம் சாந்தி ஓம்

ஓம் சாந்தி ஓம்,Om shanthi Om
01 நவ, 2015 - 10:47 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஓம் சாந்தி ஓம்

தினமலர் - திரைவிமர்சனம் :

ஒரு பேருந்து விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் ஆன்மாக்கள் , அந்த பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த ஸ்ரீகாந்தை துரத்தி பிடித்து, தங்களது அபிலாஷைகள் , நிராசைகளை ஸ்ரீ .... தான் பூர்த்தி செய்து புண்ணியம் கட்டிக் கொள்ள வேண்டுமென., கோரிக்கை வைக்கின்றன. அதை செய்ய முற்படும் நாயகர் ஸ்ரீ எதிர்கொள்ளும் நல்லதும் , கெட்டதும் ...தான் .,ஒம் சாந்தி ஒம் படத்தின் கரு , கதை ,களம் , காட்சி படுத்தல் ...எல்லாம் ,எனும் போதே., இந்த கதையை சமீபமாக எங்கோ பார்த்த ஞாபகம் ஏராளமானோருக்கு வருமே .?! யெஸ் , வெங்கட் பிரபு இயக்கத்தில் , சூர்யா நடித்து, சில மாதங்களுக்கு முன் வந்த மாஸ் என்கிற மாசிலாமணி படத்தின் கதையும் , இந்த ஓம் சாந்தி ஓம் படத்தின் கதையும் கிட்டத்தட்ட அல்ல , அல்ல ... அச்சு அசலாய் ஒரே கதையேதான் ....என்பது இப்படத்தின் பலவீனம்! யார் , எந்த ஆங்கிலப்படத்தைப் பார்த்து முதலில் சுட்டார்களோ? வெளியிட்டார்களோ .? ஒரே கதையை திரும்ப திரும்ப பார்க்கும் தமிழ் சினிமாரசிகன் தான் பாவம்! சரி போகட் டும்., விமர்சனத்திற்கு வருவோம் ...

இப்படக்கதைப்படி ., திருச்சியைச் சார்ந்த வாசு எனும் ஹீரோ ஸ்ரீகாந்த் பிரயாணிக்கும் பேருந்து ஒன்று , விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்தில்அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைக்கும் வாசு - ஸ்ரீகாந்துடன்., அதே பேருந்தில் சகபயணிகளாக, அதிக அளவு ஐஸ்கிரீம் சுவைக்கும் கனவுடன் பயணித்த சிறுவன் , தோழியின் காதலுக்கு,தன் காதலால் ., முட்டு கட்டை போட்ட ஒரு கல்லூரி மாணவி , போலி மருந்துக்கு ... மகனை பறி கொடுத்து விட்டு கணவனின் பழி ச்சொல்லுக்கு ஆளான ஒரு அபலைத் தாய் , இருந்த வீட்டை விற்றும்மகளின் மருந்துவ படிப்பு கனவை நிறைவேற்ற முடியாது காசு கொடுத்து ஏமாந்து போன ஸ்ரீரங்கத்து கோயில் குருக்கள் , பேத்தியின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த பத்து லட்சம் பணத்தை ரவுடி உறவி னரிடம் ஏமாந்த தாத்தா ... உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகின்றனர்.

அந்த ஐந்து பேரின்ஆன்மா க்கள்.. எனும் ஆவிகள்., தாங்கள் இப்படி , அகால மரணமடைந்ததால் ., நிறைவேறாத தங்களது ஆசைகளை நிறைவேற்றி தரச் சொல்லி .,தங்களுடன் இறுதியாக பயணித்து, உயிர் பிழைத்த நாயகர் ஸ்ரீகாந்தின் உதவியை நாடுகின்றன. அவர்களது அபிலாஷைகள் , நிராசைகள் .,சாத்தியப்பட.... களம் இறங்கும் ஸ்ரீகாந்த் ., தன் காதலிக்கும் , சுற்றம் மற்றும் நட்பிற்கும் ஒரு மனநோயாளியாக தெரிகிறார் . அதன்பின் அந்த ஐந்து ஆவி , ஆன்மாக்களுக்கும் , ஸ்ரீ உதவினாரா ? ஆன்மாக்களின் அபிலாஷைகள் அனைத்தும் அவரால் நிறைவேற்ற பட்டதா , இல்லையா? ஸ்ரீ..யின் காத ல் ஊட லில் முடிந்ததா, இல்லை கூடலில் இணைந்த தா ...? என்னும் கேள்விகளுக்கு விடை சொல்கிறது ... ஒம் சாந்தி ஓம் படத்தின் மீதி பாதிக்கதை.

வாசுவாக , ஹீரோவாக , ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த்., அந்த பாத்திரமாகவே வாழ முற்பட்டிருக்கிறார் ..! பல இடங்களில் அவரது , முயற்சியும் , எண்ணமும் , மிகச் சரியாக பலித்திருக்கிறது .சில இடங்களில் பல்லிளித்திருக்கிறது , பாவம்!

ஜூனியர் பாலைய்யா , வினோதினி , மாஸ்டர் சித்தார்த் ...உள்ளிட்ட ஐந்து ஆன்மாக்களின், ஆவிகளின் நிறைவேறா ஆசைகளை, அபிலாஷைகளை அழகாக நிறைவு செய்ய ஸ்ரீகாந்த் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ரசனை! ஸ்ரீ காந்தின் விழிகளுக்கு மட்டும் தெரியும்படி உலா வரும் ஆவி, ஆன்மாக்களுடன் ஸ்ரீகாந்த் , பேசும் காட்சிகளில் ஸ்ரீ மனநோயாளியாக, நாயகி நீலம் உள்ளிட்டவர்களுக்கு தோன்றும் காட்சி களில், ஸ்ரீயின் நடிப்பு , சிறப்பு... கூடவே சிரிப்பு!

இப்படக் கதாநாயகியாக ,சாந்தியாக வரும் நீலம் உபாத்யாயாவிற்கு , படத்தில் நடிக்க பெரிதாய் வாய்ப்பு இல்லை என்றாலும் பாடல் காட்சிகளில் பக்கா பர்பாமென்ஸ் காட்டி நடித்திருக்கிறார்! ஓ.கே, ஓ.கே !

ஜூனியர் பாலைய்யா , வினோதினி ,மாஸ்டர் சித்தார்த் ... உள்ளிட்ட ஐவரும் ஆன்மாக்களாக, ஆவிகளாக உருக, மருக வைத்து விடுகின்றனர். வழக்கம் போலவே வில்லன் ஆடுகளம் நரேன் சீறிப்பாய்ந்து சிறப்பித்திருக் கிறார். அவரையும் தாண்டி வவ்வால் பாண்டியாக, கட்டை, கரகர குரலும் ., காமெடி செயலுமாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி வில்லனாக வாழ்ந்திருக்கிறார்.

ௐம் சாந்தி ஓம் படத்தில் கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவு ஓஹோ பதிவு!அதிலும் , பாடல் காட்சிகளில் பாஸ்கரனின் காமிரா , பரவசம்!

இவள் தானா ... இவள் தானா .... கல்தோன்றும் முன்னரே தோன்றிய இந்த காதல் மாயம் தானா ... உள்ளிட்ட நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் அதற்கு வலு சேர்த்திருக்கும் விஜய் எபினேசரின் இசை , பின்னணி இசை... எல்லாம் பிரமாதம் ! விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு , ஜாக்கி யின் கலை இயக்கம் ஆகியவைகளும் ஓம் சாந்தி ஓம் படத்தை ஒங்கி உயரத்தி ல் வைக்கின்றன!

என்ன தான் கொஞ்சம் , நாங்கள் முன்னாடி ஆரம்பித்தோம், ரிலீஸுக்கு தாமதமாகி விட்டது , முந்திக் கொண்டார்கள் . மாசு படக் குழுவினர் ... எனச் சொன்னாலும் , டி.சூர்ய பிரபாகரின் எழுத்து, இயக்கத்தில் ஓம் சாந்தி ஓம் திரைப்படம் கொஞ்சமே கொஞ்ச ம் காலத்திற்கு முன் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த மாஸ் , எனும் மாசிலாமணி படக் கதையாகவே இருப்பது பலவீனம்! ஆனால் , அதையும் தாண்டிய பலங்களாக., நாயகி நீலம் கண்களுக்கு லாஜிக் படி, ஆவி எனும் ஆன்மாக்கள் தெரியக்கூடாது என்பதற்காக , அவர் முன் இருக்கும் கண்ணாடியில் தோன்றி ஊடலில் இருக்கும் ஸ்ரீ - நீலத்தின் காதலை சேர்த்து வைக்க ஆன்மாக்கள் முயலுவது , ஒரு மழை நாளில் மிகவும் நேச்சராக படமாக்கப்பட்டிருக்கும் அந்த ஆரம்ப காட்சி பேருந்து விபத்து.... உள்ளிட்டவை ., டி. சூர்ய பிரபாகரின் எழுத்து , இயக்கத்தில் , ,"ஒம் சாந்தி ஓம் படத்தை- ஓங்கி ஒசத்தி பிடிக்கின்றன எனலாம்!"

ஆக மொத்தத்தி.ல் ., 8 -பாயிண்ட் எண்டர்டெயின்மென்ட் , பி.அருமை ச்சந்திரன் தயாரிப்பில் , சற்று நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த , ஓம் சாந்தி ஓம் ஒரு வழியாக வெளிவந்ததே சாதனைதான் !

ஆகவே , "ஓம் சாந்தி ஓம் - ஒஹோ , ஆஹா .. அல்ல என்றாலும் ஓ.கே. ஒரு முறை பார்க்கலாம் ... என்பதே ஆறுதல் ..!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in