Advertisement

சிறப்புச்செய்திகள்

Kannadhasan M.S.Viswanathan Birthday Special Dinamalar
இதயம் கவர்ந்த இரு இமயங்கள்: கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள் இவர்களைப் பற்றி இங்கே எழுதுங்கள் வாசகர்களே...
கவிஞர் கண்ணதாசன் – சினிமா பாடல்கள், தனி நுால்கள், தத்துவங்கள், ஆன்மிக கருத்துகள் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களுக்குள் நுழைந்து, நீங்கா இடம் பிடித்தவர். இவரது பாடல்களுக்கு இசைக்கோர்வையால் உயிர் கொடுத்து, உலவ விட்டவர் இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன். இவர்கள் இருவருக்குமே ஜூன் 24 தேதி பிறந்த தினம். இது ஒரு அபூர்வ ஒற்றுமை. அவர்களது நட்புக்கு இயற்கையே அளித்த கவுரவம். இவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகள், கருத்துகள், பிடித்த பாடல்கள் பிடிப்பதற்கான காரணங்களை 500 எழுத்துக்களுக்குள், உங்கள் புகைப்படத்துடன் இங்கே பதிவிடுங்கள். அவை உடனுக்குடன் வௌியிடப்படும்.

உங்களது பதிவுகள்

Ilango

இன்று முதுமையில் இருப்பவர்கள் கொஞ்சம் நல்லவர்களாக இருப்பது அவர்கள் இளமையில் கேட்ட நல்ல நல்ல பாடல்களும், பார்த்த நல்ல நல்ல சினிமாக்களும் தான். இதற்கு உதவிய கவிஞருக்கும் எம் எஸ் வீ க்கும் நெஞ்சார்ந்த நன்றி. இவர்கள் நம்முடன் இன்றும் வாழ்கிறார்கள். இருவரும்.

25 ஜூன்,2016 - 10:21 Pudukkottai

N.LAKSHMANAN

All of you are under the impression that M.S.V is a genius in film melody,credit goes to T.K RAMAMOORTHY a carnatic music exponent who comes from a great violinist genius,after the duo seperated the so called genius hired MADURAI G.S MANI to write the notes film music excel only ragamalika and not pure carnatic music,you must have a sound knowledge on weaving a ragamalika

25 ஜூன்,2016 - 10:08 MADURAI

ANBU LAL SHASTRI ANBU

இருவரும் ஓர் வரப்பிரசாதம் . ஒரு நாளிலும் தமிழ் மக்கள் இருவரையும் மறக்கமாட்டார்கள் .

25 ஜூன்,2016 - 09:48 KUALA LUMPUR

SS Kumaran

இரு காலத்தை வென்ற இமயங்கள் மறுபடியும் இந்த பிறவியிலேயே பிறப்பார்களா? வணங்குகிறேன். இரவு 10 மணிக்குமேல் இவர்கள் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்போது மனதுக்கு எவ்வளவு இனிமையாகவும் இருக்கும் , கவலைகள் பறந்தோடியும் போகும்.

25 ஜூன்,2016 - 08:51 Singapore

M.செந்தில்குமார்

இவர்கள் இருவரும் இறக்கவில்லை.<||>!<||> மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்

25 ஜூன்,2016 - 08:45 திருச்சி

sangeetha senthi

இ லிக்கே கண்ணே கலைமானேய் song

25 ஜூன்,2016 - 07:31 namakkal

Muruganperiyasamy

அன்பு நடமாடும் கலைக்கூடமே,ஆசை மழை மேகமே,, நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா.. மன்னவனே அழலாமா.. மல்லிகை என் மன்னன் மயங்கும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.. அமைதியான நதியினிலே ஓடம்.. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. கேட்டுக்கொடி உறுமி மேளம்..(கிராமத்து வார்த்தைக்கு மேற்கத்திய இசை.. ஆங்கில வார்த்தைகளுக்கு கிராமத்து இசை..) இன்னும் நிறைய.. நிறைய.... மேற்சொன்ன பாடல்கள் பிடிக்காமல் போனால் தான் காரணம் வேண்டும்.

25 ஜூன்,2016 - 04:07 Hosur

Pulavar. Ira. PONNARASSOU

ஈடுண்டோ? சொல்வீர்<||>!<||> வியந்து. ஈடு இணையற்ற இன்னிசைக் காலங்கள் ஈடுண்டோ? சொல்வீர்<||>!<||> வியந்து. வாழீ<||>!<||>

25 ஜூன்,2016 - 03:09 Athis-Mons

karthik

we loss amazing legends .still they r living with us by great songs and poems. spec to me msv-karnnan-ullathi uyaratha ullam urngathu kannadasan-i read story written by kanna-avalukaka oru padal i stuned in front of both talent.

25 ஜூன்,2016 - 02:32 dubai

a.latchathi pathi

தமில்லன் தலை நிமிர்ந்து நீக்கவும் தமிழன்எ ன்று சொல்லவும் தமிழுக்கு விதித்திட்டவர் பலர் இதில் இவர்களின் பெயர்என்றும் தமிழகத்தின் நிலைத்து நீக்கும் . உடல் உயிர் அனைத்தையும் அர்ப்பணித்த மஹான்கள் என்றும் நீங்க

24 ஜூன்,2016 - 22:54 tamil nadu

ராமலிங்கம் குருசாமி

வானமே எல்லை என்றே கவியரசு கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவரது திறமைக்கு அளவிடலாம். கண்ணதாசன் (குரு) பிறந்த நாள் 24.6.1927, எம்.எஸ்.வி (சிஷ்யர்) பிறந்த நாள் 24.6.1928 இருவரும் ஒருவர் கவிதை மழை பொழிய, மற்றவர் இசை மழை பெய்ய என தமிழர்களை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரின் செவிகளில் அமிர்த கானங்களை கருத்துடன் வருஷித்தவர்கள். இவ்விரு இமயங்களின் காலத்தில் நாம் வாழ வாய்ப்பு அருள் செய்த கடவுளுக்கு நன்றி சொல்வோம்

நாட்டை நினைத்து நொந்தவன்

வீனா போன மனிதர்கள் இருவரும் ்அருகதை அற்றவர்களை ஆளவைத்தவர்கள்

24 ஜூன்,2016 - 20:57 Malaysia

r radhakrishnan

வானம்பாடி படத்தில் கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் ஈந்த பாடல் உலக காதலர்களுக்கு ஓர் ஆசிர்வாதம்

24 ஜூன்,2016 - 20:40 coimbatore

KUMAR

இசையின் இரு கண்களாக இன்றும் இருப்பவர்கள் கவியரசும் மெல்லிசை மன்னரும் ஆதவன் இடையே மேகத்தில் மறைவது போல் தோன்றினாலும் பின் ஒளிருவது போல் இவர்களின் பூத உடல் மறைந்தாலும் உயிராகிய இசை எங்கும் என்றென்றும் பரிணமிக்கும் இவர்களின் அபரிமிதமான கூட்டணியில் உதித்த பாடல்கள்தான் எத்தனை எத்தனை ஒவ்வொன்றும் தேனமுதம் சொல்ல எழுத வார்த்தைகளில்லையே அவற்றை எழுத முடியாது அனுபவிக்கத்தான் முடியும் இவர்களை அளித்த தமிழ் தாய்க்கு கோடானு கோடி நன்றி

24 ஜூன்,2016 - 20:09 chennai

Udhayan

பாசம் திரைப்படத்தில் வரும் <||>'<||> பால் வண்ணம் பருவம் கண்டு ...<||>'<||> பாடல். <||>'<||>கண் வண்ணம் அங்கே கண்டேன்<||>;<||> கை வண்ணம் இங்கே கண்டேன் <||>;<||> பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் <||>'<||> என்ற வரிகள். கம்ப இராமாயணத்தில் வரும் வரிகளை எளிய நடையில் இனிமையாக கொண்டு வந்தது. இது போல பல பாடல்கள். மறக்க முடியாத இணை : கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் M . S . விஸ்வநாதன் .

24 ஜூன்,2016 - 19:49 Chennai

D.Selvam

இருவர் கூட்டணி தமிழினத்துக்கு கிடைத்த வரம்

24 ஜூன்,2016 - 19:03 chennai

Jayaraman

பல இலக்கிய, சமய, அறநெறி சார்ந்த மற்றும் வாழ்க்கையின் எந்த ஒரு நிகழ்வுக்கும் மிகவும் எளிமையான தமிழில் பாடலாகவும், கதை, கட்டுரைகளாகவும் கூறி தமிழ் நெஞ்சங்களில் வாழும் துறவு நிலை மனோபாவத்தை அடைந்தவர் கவியரசர். இசை மேதை என்றால் அது MSV . தழிழ் வரலாற்றில் பொன்னால் குறிப்பிட வேண்டியவர்கள்<||>!<||><||>!<||>

24 ஜூன்,2016 - 18:56 Singapore

thiroomal

<||>'<||>சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.<||>'<||> என்ற பாடலில் வரும் கருணை தவழும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கருணை மறந்து வாழ்கின்றார், கடவுளை தேடி அழைக்கின்றார். என்ற வரிகளும் <||>'<||>ஒண்ணா இருக்க கத்துக்கணும்<||>'<||> பாடல் வரிகளில் <||>'<||>தன்னை போன்று பிறரை எண்ணும் எண்ணம் வேண்டுமே, அந்த எண்ணம் வர உள்ளத்திலே கருணை வேண்டுமே, என்ற இந்த இரு கருத்துக்களை நாம் கடைபிடித்தால் போதும்.. அனைவருக்கும் நல்வாழ்வு உறுதியாகும்.

24 ஜூன்,2016 - 17:52 chennai

krishnan

மயக்கமா கலக்கமா ........

24 ஜூன்,2016 - 17:09 chennai 63

kannan

தேனும், அமுதும் இணைத்ததால் உண்டாகின <||>'<||>தேனமுது<||>'<||> பாடல்கள் . இவ் உலகின் மிக சிறந்த விருது: மக்களின் அங்கீகாரம் தான். அதனை முழுவதுமாக பெற்ற தூய உள்ளங்கள் இவர்கள் இருவரும் என்பதில் மாற்று கருத்து இல்லை .. இவ் வையகம் உள்ளவரை இவர்களுக்கு அழிவில்லை .

24 ஜூன்,2016 - 16:44 trichy

Udhaykumar PK

கிரேட் லெஜெண்ட்ஸ், எவர் க்ரீன் பாடல்களை தந்தார்கள் .

24 ஜூன்,2016 - 16:25 coimbatore

GOPUKUMAR

கண்ணதாசன் , எம் எஸ் வி இருவரும் தமிழக கலைத்துறைக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் . ஒரு கோப்பையில் என் குடியிருப்பு பாடல் தன் வாழ்க்கை எதார்த்தத்தை அவர் தெரிவித்த விதம் ..கவிக்கு தலைவன் கண்ணதாசன் தான்.

24 ஜூன்,2016 - 16:21 Chennai

karthick

இவர்கள் நிரந்தரமானவர்கள் இவர்களுக்கு அழிவில்லை எந்த நிலையிலும் இவர்களுக்கு மரணமில்லை- இன்னும் எங்கள் நெஞ்சங்களில் வாழ்கின்றனர்.....

24 ஜூன்,2016 - 16:20 chennai

ஜெயராஜ்

கவிச்சக்கரவர்த்தியும் மெல்லிசை மன்னரும் இறைவனுக்காக இசைப்பதற்கென்றே படைக்கப்பட்டவர்கள். அதில் பங்கெடுத்துக் கொள்ள நமக்கு வாய்ப்பளித்த அந்த இறைவனுக்கு நன்றி.

24 ஜூன்,2016 - 16:16 சின்னமனுர்

Latha

இருவர் பாடலும் இசையும் கவலைக்கு மருந்து.

24 ஜூன்,2016 - 15:52 chennai

Hajamohaideen

கண்ணதாசன் போல் ஒரு கவிஞர் மறுபடியும் கிடைப்பபாரா?

24 ஜூன்,2016 - 15:24 Madurai

KATHIRESAN SORNAVEL

அளந்து பேசுபவனை உலகம் அதிகம் மதிக்கிறது…<||>!<||><||>!<||> கண்ணே கலைமானே. மூன்றாம் பிறை என்ற படத்தில், கமல்.. ஸ்ரீ தேவிக்காக பாடுவதாக அமைந்தது...<||>!<||> ஆனால் கவிஞர் அவர்கள் <||>'<||>தமிழ்தாய்<||>'<||> மீது கொண்ட காதல் மிகுதியால் ... கவிதையாக அமைந்தது. அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன், ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ….., காதல் கொண்டேன், , கண்மணி உனை நான், கருத்தினில் நினைத்தேன்…., உனக்கே உயிரானேன், என்னாளும் எனை நீ மறவாதே…., நீ இல்லாமல், எது நிம்மதி…, நீதானே என் சன்னிதி…ஆம் கவியரசு இன்றும் தமிழ் அன்னையின் சந்நதியில் இருக்கிறார் ...

24 ஜூன்,2016 - 15:11 Vapi Gujarat

K M

வாழ்க்கையின் உணர்வுகளை, வார்த்தையின் உறவுகளை, இன்னிசையை மெல்லிசையாக்கிய பெருமைக்கு உரிய உயர்ந்தவர்கள். தமிழ் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர்கள். காலத்தால் அழியாத இசைக்கோலங்கள் உருவில் என்றும் நிரந்தரமாக நம் வாழ்வில் கலந்தவர்கள்.

24 ஜூன்,2016 - 15:08 chennai

j.venkatesan

கண்ணதாசன் விஸ்வநாதனை வாடா போட என்று உரிமையுடன் அழைப்பார் என்று முன்பு ஒருமுறை படித்திருக்கிறேன் .இப்பொழுது அப்படி ஒரு நட்பு இன்றைய கவிஞருக்கு ம்யூசிக் டைரக்டர் இருக்குமா என்று தெரியாது .

24 ஜூன்,2016 - 14:36 Thirumullai Voyal,Chennai

arasu

They are the two legends of Tamil Film and Tamil peoples.

24 ஜூன்,2016 - 14:16 kolar

S.RAMAR

இருவரும் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

24 ஜூன்,2016 - 13:48 THEVARAM

Aadithya

கண்ணனாக இருந்த தாசனும் நாதமாக இருந்த விஸ்வமும் இணைந்ததொரு கோலம் அனைவருக்கும் இன்பமான உலகம். பாடல் வரிகளுக்கு கண்ணதாசன் இசையமைக்க விஸ்வநாதன், பாடுவதற்கு சௌந்தரராஜன் நடிப்பதற்கு சிவாஜி கணேசன் மறக்க முடியாத நினைவுகள்.

24 ஜூன்,2016 - 13:38 Madurai

G.MURUGESAN

கண்ணதாசன் இல்லை எண்ணதாசன்<||>!<||> - ஆம் தமிழுக்கே ஒருவித தயக்கம்<||>!<||> தன்னை உண்டு தலைவிரித்த மயக்கம்<||>!<||> உன் வரிகள் எல்லாம் திரைப்பானை தொங்கவைக்கும் உரிகள்<||>!<||> மலரில் தொடங்கி பலரில் முடிந்த எழுத்து<||>!<||> பலாவாய் இனிக்கிறது பழுத்து<||>!<||> கதைகள் - சில கவிஞனுக்கு விதைகள்<||>!<||> பாடல்கள் இசையில் ஒட்டிய பசைகள்<||>!<||> இடியில் கொட்டிய திசைகள்<||>!<||> மொத்தத்தில் உன் சகாப்தம் நிலையாக மட்டும் அல்ல சிலையாக.. தமிழ் மக்களின் கலையாக கம்பீரமாய் இருக்கும்<||>!<||>

24 ஜூன்,2016 - 13:35 keeranur

Sivagami Ananth

ஒருவரை பற்றி அவர் உயிருடன் அல்லாத போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்றால் அது தான் சாதனை. தடங்களை விட்டுச் சென்றதால் தான் தொடர்கிறோம். அவர்களை இதயத்தில் இருத்தி வைத்து மகிழ்கிறோம். மகாகவியும் , மெல்லிசை மன்னரும் காற்று உள்ளவரை வாழ்வார்கள் <||>!<||>

24 ஜூன்,2016 - 13:29 BANGALORE

sankar

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை - கண்ணதாசன்

24 ஜூன்,2016 - 13:18 chennai

Ananth

அனைவருக்கும் புரியுமாறு பாடல்களை எளிமையாகவும் , அதே சமயம் அர்த்தமாகவும் கொடுத்துச் சென்ற மகாகவி கண்ணதாசன் . அத்தகைய பாடல்களை அழகாக்கி , இனிமையாய் நம் காதுகளில் மட்டுமல்லாது , இதயத்திலும் இருந்து வைத்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். இருவரும் காலம் சென்றவர்கள் அல்ல . காலம் வென்றவர்கள் <||>!<||><||>!<||><||>!<||>

24 ஜூன்,2016 - 13:17 bangalore

Vaduvooraan

<||>'<||>வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது<||>'<||> என்பது உண்மைதான் என்றாலும் ஒரு சிலருக்கு இறப்பில் இருந்து இயற்கை விதி விலக்கு அளித்திருக்க கூடாதோ என்ற ஏக்கத்தை உண்டாக்குபவர்கள் மெல்லிசை மன்னர்கள் (ராமமூர்த்தியை பலர் மறந்து விடுகிறார்கள்<||>!<||>) கண்ணதாசன் போன்றோர். ஜெனோவா, பணம் தொடங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தி தொடாத ராகங்களே கிடையாது , பயன்படுத்தாத இசைக் கருவிகளே இல்லை<||>;<||> கையாளாத இசை வகைகளே நினைத்து பார்க்க முடியாது. ஜாஸ் இசை என்றால் <||>'<||>மாடி மேல மாடி கட்டி<||>'<||><||>;<||> மலரென்ற முகமின்று<||>;<||> நீ என்பதென்ன ...

24 ஜூன்,2016 - 12:40 Chennai

sundarrajan s

ரெண்டுபேரும் மிகமிக திறமைசாலிகள் அவர்களுடைய பாடல்வரிகளையும் இசையையும் என்றும் மறக்கமுடியாதவை. அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை எல்லோரும் மனதிலும் நெருடக்கூடியவை பாடல்கள் அனைத்தும் உயிர் ஓட்டம் உள்ளவை. என்னுடைய கருத்துக்கள பதிவு செய்ய இடமளித்த தினமலர் நாளிதழ் நன்றி

24 ஜூன்,2016 - 12:18 chennai

T MOHAN RAJ

வருவாய் வருவாய் என நான் இருந்தேன் , வந்ததும் வந்தாய் துணைஉடன் வந்தாய் , துணைவரை காக்கும் கடமையும் தந்தாய், துாயவளே நீ வாழ்க<||>!<||> ஒரு முழு நீளபடத்தின் கதை நாலு வரியில். கண்ணதாசனால் மட்டுமே முடியும்.

24 ஜூன்,2016 - 12:16 KOZHIKODE

Thirumalai kumar

கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் ,எம்.எஸ் .விஸ்வநாதனின் இசை,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.திரைத்துறையில் இம்மூவரின் திறமையை யாராலும் மறக்கமுடியாது,இவர்களைப்போன்று இனி யாரும் பிறக்கப்போறதும் இல்லை.அந்தளவுக்கு அவர்களின் உயிரோட்டமான பாடல்கள்,உயிரோட்டமான இசை ,உயிரோட்டமான நடிப்பு.இம்மூவரின் திறமையை பிரித்து பார்க்கமுடியாது. எவராலும் எட்டமுடியாத எல்லைகள் அவர்கள்.இதயம் கவர்ந்த இமயங்கள் இரண்டல்ல மூன்று.

24 ஜூன்,2016 - 11:53 tenkasi

சத்யா வெங்கட்

இரு இமயங்களும் சேர்ந்து அமைத்த பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையானது. காலத்தால் அழியாத இதில் நவரசங்களும் இருக்கும்.

24 ஜூன்,2016 - 11:31 kumbakonam

M.UMAPATHY

​​காதல் என்றாலும் சோகம் என்றாலும் தத்துவம் என்றாலும் அதன் உண்மையை அப்படியே பிரதி பலிக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். அவர் தமிழிலுக்கு கடவுள் தந்த வாரிசு. ​அவரின் பாடல் வரிகளை ​விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதே போல விஸ்வநாதன் அவர்களின் இசையால் மயங்காதவர்கள் யாரும் இல்லை. இருவரும் செய்த பங்களிப்பு எல்லை அற்றது. இருவரும் கடவுளுடன் இன்பமாக இருப்பார்கள் . இப்படிக்கு உங்கள் ரசிகன் . மு .உமாபதி.

24 ஜூன்,2016 - 11:25 BODINAYAKKANUR

vaishu

கண்ணதாசன் ஒரு தலை சிறந்த கவிஞர். அவருடைய பாடல்கள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாவும் இருக்கும். அவருடைய நிறைய பாடல்களில் உள்ள தத்துவங்களை நான் கடைபிடிக்கிறேன். உதாரணமாக அவருடைய பாடல் வரிகளில் ஒன்றான <||>'<||>நமக்கென்று பூமியில் கடமைகள் உண்டு அதை நம் கையால் நாமே செய்வது நன்று <||>'<||> என்ற நல்ல கருத்தை நான் விடாமல் கடைப்பியடிக்கிறேன். இதை மாதிரி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம், பாதி படத்தின் கதையை அழகாக கண்ணதாசனின் பாடல்களே சொல்லும்.

24 ஜூன்,2016 - 10:46 chennai

ரவிசங்கர் லட்சுமணன்

சாந்தி திரைப்படத்தில் யார் அந்த நிலவு பாடல் மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரியில் டி.எம்.எஸ். குரலில், நடிகர் திலகத்தின் நடிப்பில் உயர்ந்த உச்சத்தை தொட்டது. இதில் எது உயர்ந்தது எதுவென்று யார் சொல்ல இயலும். விஸ்வநாதன் + கண்ணதாசன் + சௌந்திரராஜன் + சிவாஜி கணேசன் இந்த நால்வர் கூட்டணி திரையுலகை ஆண்டது போல் இனியொருவரும் வர இயலாது. பூ மணம் கொண்டவள், பால் மணம் கண்டாள், பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் - பாசமலர்

24 ஜூன்,2016 - 10:33 Bhavani

R SUNDARARAJAN

கண்ணதாசன் ஒரு தலை சிறந்த கவிஞர். அவருடைய பாடல்கள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாவும் இருக்கும். அவருடைய நிறைய பாடல்களில் உள்ள தத்துவங்களை நான் கடைபிடிக்கிறேன். உதாரணமாக அவருடைய பாடல் வரிகளில் ஒன்றான <||>'<||>நமக்கென்று பூமியில் கடமைகள் உண்டு அதை நம் கையால் நாமே செய்வது நன்று <||>'<||> என்ற நல்ல கருத்தை நான் விடாமல் கடைப்பியடிக்கிறேன். இதை மாதிரி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம், பாதி படத்தின் கதையை அழகாக கண்ணதாசனின் பாடல்களே சொல்லும். அவரை ரொம்ப மிஸ் பன்றேன்.

24 ஜூன்,2016 - 10:31 Chennai

X. Rosario Rajkumar

இலக்கியம் தெரிந்தவர்க்கு கவிஞர் வைரமுத்து, படித்தோருக்கும் பாமரருக்கும் கவிஞர் கண்ணதாசன். சங்கீதம் மட்டும் போதாது, இங்கிதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று மொழிந்த மெல்லிசை மன்னரின் இசையில் வான் நிலா, நிலா அல்ல என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதை என் வயலினில் தினமும் வாசிப்பேன். மகிழ்வேன். ,,

24 ஜூன்,2016 - 10:28 tiruchi

முருகேசன் மாரிமுத்து

கண்னதாசனின் வரிகள் மட்டும் தனித்து நின்றிருந்தால் இவ்வளவு பிரபலம் ஆகி இருக்காது.<||>!<||>... அதனை இந்த அளவிற்க்கு பிரபலபடுத்திய பெருமை மெல்லிசை மண்னர் <||>'<||>எம்.எஸ். விஸ்வநாதன்<||>'<||> அவர்களுக்கே சேரும்..

24 ஜூன்,2016 - 10:00 Coimbatore

S R NARAYANAN

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் இசை அமைத்த பாடல்கள் பெரிதும் வெற்றி அடைந்ததற்கு காரணம் அந்த பாடல் வார்த்தைகளா அல்லது இசையா என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த இருவரின் சாதனை அமைந்திருந்தது. பிடித்த பாடல் என்று எதை சொல்வது எதை விடுவது ? சொல்லுங்கள் ரசிகர்களே <||>!<||>

24 ஜூன்,2016 - 09:59 CHENNAI

panneerselvam

இவர்கள் இருவரும் பாடல் மற்றும் இசைகளின் ராஜாக்கள்

24 ஜூன்,2016 - 09:56 Nettapakkam,puducherry

kuppusamy

திரைப்பட இசையின் பொற்காலம் ஒருபாடல் கவிஞர் எழுதியவுடன் அதற்கு எப்படி இசை அமைத்தால் நன்றாகஇருக்கும் யார் பாடவேண்டும் என்று முடிவுசெய்து இசையமைப்பார் .ஓடம் நதியினிலே பாடலை நௌஷாத் போன்ற சிறந்த இசைவல்லுனர்கள் கேட்டு மெய் மறந்தனர் பேசுவது கிளியா ,போனொன்றுகண்டேன் ,தெய்வம் தந்தவீடு போன்ற பல பாடல்கள் காலத்தால் அழியாதது மட்டுமல்ல நம் நினைவில் தங்கி விட்ட தேன்துளிகள்

24 ஜூன்,2016 - 06:56 chennai

X. Rosario Rajkumar

கவியரசு கண்ணதாசனிடம் திருச்சி தேவர்ஹாலில் ஆட்டோகிராப் வாங்கினேன். மெல்லிசைமன்னரிடம் திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி இசை அரங்கத்தில் ஆட்டோகிராப் வாங்கினேன். என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள் இவை. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்ற பாட்டில், பாதையெல்லாம் மாறிவிடும் .....என்ற இடத்தில் ஒரு சுரமும் மாறி இருக்கும். இதை எண்ணி மகிழ்வேன்,ஏன் என்றால் நான் பிடில்வாசிப்பேன். கவியரசரின் மருதமலை மாமணியே முருகையா பாடலை தினமும் வீட்டில் இசைப்பேன்

23 ஜூன்,2016 - 23:50 tiruchi

R NATARAJAN

கண்ணதாசன் மாபெரும் கவிஞர்.சரஸ்வதி அவர் நாவில் ஆசனம் போட்டு அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு பாடலும் ஓர் இலக்கியம். இனி ஒருவர் பிறக்கமுடியாது. ஒரு பாடலில் தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே என எழுதுவார். என்ன ஒரு அறிவு.

23 ஜூன்,2016 - 22:20 coimbatore

PKV

நட்புக்கு இலக்கணமாய் விளங்கிய இரண்டு மேதைகளின் பிறந்த நாள் கூட ஒன்றே என நினைக்கும்போது கண்களில் நீர் சுரக்கிறது. வையம் உள்ள மட்டும் இந்த இருவரின் பாடலும் இசையும் நிலைத்து நிற்கும். என் என்றால் அந்த மாதிரியான பாடல்களை இப்போதுள்ள கவிஞர்களும் சரி இசை அமைப்பாளர்களும் கொடுக்க தவறி விட்டனர் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியது நம் சூழல்.

23 ஜூன்,2016 - 21:47 Coimbatore

Satya

எம் எஸ் விஸ்வநாதன் + கண்ணதாசன் = திகட்டாத தேன் இசைப் பாடல்கள் . மறக்க முடியாத மனதில் பதிந்த திரை இசைப் பாடல்கள்

23 ஜூன்,2016 - 20:43 Chennai

v. sundaram

சினிமா பாடல்களுக்கு சிம்மாசனம் அமைத்து தந்த மேதை. மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு தன் திறமையால் உயர்ந்து சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக கோலோச்சியவர். எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல தமிழ் கற்பித்தவர். சங்கநூல்களை திரைப்பாடல்களாக்கி சுவை கூட்டியவர்.

23 ஜூன்,2016 - 19:45 Coimbatore ( Camp Patna)

ratchagan

அர்த்த முள்ள ஹிந்து மதம் சொன்னதை கடை பிடித்தால் நாமும் ஒரு கண்ணதாசன் அல்லது விஸ்வநாதன் ஆகலாம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம். வானும், மண்ணும் இருக்கும் வரை அவர்கள் புகழ் அழியாது. <||>'<||><||>'<||>உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது<||>'<||><||>'<||> என்பது போன்று அவர்கள் இருவரின் ஆன்மா, உலகம் இருக்கும் வரை மறையாது. சரஸ்வதி தேவி அவர்கள் இருவரிடமும் குடிக்கொண்டிருந்தாள். இரு மேதைகளும், செய்த சாதனைகளை எழுதுவதற்கு, இந்த இடம் போதாது. ஒரு டி.எம்.எஸ்., சுசிலா போன்று யாரும் உருவாக முடியாது

23 ஜூன்,2016 - 19:30 vallioor

sathya

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம், இரு தெய்வத்திற்கு ஒரு இதய பூர்வ அஞ்சலி

23 ஜூன்,2016 - 19:29 chennai

T JOHN VEDANAYAGAM

காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழ் திரை ரசிகர்களுக்கு இவர்கள் அழித்துள்ளனர்.இவ்விருவரும் ராமமூர்த்தியுடன் இணைந்து வழங்கிய பாடல்கள் தேனினும் இனியவை.இந்த மும்மூர்த்திகள் தமிழ் திரையுலகின் மெல்லிசை கடவுள்கள் என சொல்லலாம்.தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே ,நிலவே என்னிடம் நெருங்காதே ,பெண் ஒரு கண்டேன் ,என்னை யார் என்று,மலர்களை போல் தங்கை ,ஆறு மனமே ஆறு ,அவள் பறந்து போனாலே ,அச்சம் என்பது மடமையடா போன்ற பாடல்கள் இதற்கு உதாரணம்.கவிஞரும் விஸ்வநாதனும் ஒரே தேதியில் பிறந்தார்கள் என்பது அதிசயம்தான்.



23 ஜூன்,2016 - 19:28 Chennai

v. mohan.

கண்ணதாசன் தமிழ் வார்த்தைக்கு தமிழ் உள்ளவரை நிலையாய் இருக்கும்

23 ஜூன்,2016 - 18:58 dubai uae

praba

இருவரும் காலத்தை வென்றவர்கள், தமிழ் உள்ளவரை இவர்கள் பெயர் இருக்கும், இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர் கண்ணதாசன் அவரின் வரிகளுக்கு இசையால் மெருகூட்டியவர் மெல்லிசை மன்னர்.

23 ஜூன்,2016 - 18:31 மதுரை
Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in