வானில் பறக்கத் தயாராகும் 'கபாலி' | Kabali flights ready to fly | Kabali Exclusive News

வானில் பறக்கத் தயாராகும் 'கபாலி'

வானில் பறக்கத் தயாராகும் 'கபாலி'

விமானத்தில் ஒட்டப்பட்டிருந்த 'கபாலி' போஸ்டர்கள்தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியது. ஏர்-ஏசியா நிறுவனம் 'கபாலி' படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக தன்னுடைய விமானங்களின் வெளிப்புறங்களில் அசத்தலான 'கபாலி' பட போஸ்டர்களை விமானப் பணிமனைகளில் செய்யும் வேலை செய்தது வந்தது. இந்நிலையில் கபாலி போட்டோக்கள் ஒட்டிய ஏர் ஏசியா விமானங்கள் நாளை முதல் தனது விமான பயணத்தை தொடங்க உள்ளது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கபாலி விமானங்கள் பறக்க தயாராகிவிட்டன.


இதனிடையே கபாலி ஏர் ஏசியா விமானங்களை பற்றி தான் சாமானிய ரசிகர்கள் முதல் திரையுலகத்தினர் வரை அது பற்றித்தான் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். பொதுவாக ரஜினியைப் பற்றி ஏதாவது ஒரு கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் அது பற்றி தன் பங்குக்கு ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.


“இது உயரமல்ல, ஆனால், இதுதான் நட்சத்திர அந்தஸ்து. ரஜினி குண்டு அல்ல, அவர் ஒரு அணுகுண்டு” என பதிவிட்டிருக்கிறார்.


'கபாலி' படம் பற்றிய தகவல்கள் செய்திகளும் படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

விமர்சனம்

Kabali Movie Review

தினமலர் விமர்சனம்உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர்

பட குழுவினர்கள்

Kabali Cast & Crew
படம் : கபாலி
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி’ தினேஷ், ‛மெட்ராஸ்’ கலையரசன், ‛ஆடுகளம்’ கிஷோர், வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், நாசர், மைம் கோபி...