ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ஆப்தே புகழாரம் | There is no one Like Rajinikanth- Radhika Apte | Kabali Exclusive News

ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ஆப்தே புகழாரம்

ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ஆப்தே புகழாரம்

தென்னிந்திய படங்களில் நடித்து வந்தாலும் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்து வந்த ராதிகா ஆப்தே, ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, ‛கபாலி' படம் பற்றியும், ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்தும் மும்பையில் இருந்து நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...


‛கபாலி' வாய்ப்பு வந்தது எப்படி?


ஒருநாள் இயக்குநர் பா.ரஞ்சித்திடமிருந்து போன் வந்தது. கபாலி படத்தில் நடிப்பது பற்றி பேசினார். நான் ஏதோ காமெடிக்கு சொல்கிறார் என்று எண்ணினேன். ஆனால் சில தினங்களிலே சென்னைக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பினார். நானும் சென்னை வந்து கபாலி பட கதையை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது, உடன் நடிக்க சம்மதம் சொன்னேன். இது எல்லாமே ஒரு வாரத்தில் நடந்தது.


கபாலியில் உங்க கேரக்டர் எந்தளவுக்கு மாறுப்பட்டது?


கபாலி படத்தில் முற்றிலும் எனது கேரக்டர் மாறுப்பட்டது, மேலும் கதையும் அற்புதமானது. ஆனால் அதுப்பற்றி என்னால் இப்போது கூற முடியாது. படத்தில் நடிக்கும்போதே எனக்கு முக்கியமான ரோல் என்றும், அதிகளவில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதம் எனது கேரக்டர் இருக்கும் என்று இயக்குநர் சொன்னார். அவர் சொன்னது போலவே அமைந்தது. இது ரஜினி படம் என்றாலும் என்னுடைய ரோலும் படத்தில் முக்கியமானதாக இருக்கும், அந்தவகையில் எனக்கு மகிழ்ச்சி.


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளீர்கள், உங்களுக்கு ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா?


உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நடிப்பு விஷயத்தில் பெரிய வித்தியாசம் தோன்றவில்லை. ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் மாறுப்பட்டு இருக்கும், அது ஒன்று தான் வித்தியாசம். பாலிவுட்டில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தால், அங்குள்ள இயக்குநர்கள், அவர்களின் பட ஸ்டைல் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். மற்றபடி நடிப்பில் பெரிய மாற்றம் இருக்காது.


‛கபாலி' படம் எப்படி வந்துள்ளது?


கபாலி படம் சிறப்பாக வந்துள்ளது. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால் படம் நன்றாக வந்துள்ளதாக சில கூறினர். ரஜினியுடன் நடித்தது என் வாழ்க்கையில் முக்கியமானதாக கருதுகிறேன். கபாலி படத்தை பார்த்த பின்னர் எனது நடிப்பு நன்றாக இருக்கிறது என்று யாராவது சொன்னார்கள் என்றால் அதை என் சாதனையாகவே கருதுவேன்.


ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய விஷயம் ஏதாவது?


ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும். கபாலி படத்தின் ஷூட்டிங் ஒருநாள் மருத்துவமனையில் நடந்தது. அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள். ரசிகர்கள் கூட்டத்தால் ஒட்டுமொத்த படப்பிடிப்பே அன்று பாதிக்கப்பட்டது. ரஜினிக்கு இந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன். என் வாழ்நாளில் இதுபோன்று பார்த்ததில்லை.


ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?


ரஜினியுடன் நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாது. மிகவும் ரசித்து, மகிழ்ச்சியுடன் நடித்தேன். நான் பார்த்த நடிகர்களில் தொழில் பக்தியில் ரஜினி போன்று யாரும் இல்லை. ஒட்டுமொத்தமாக எல்லோரையும் அவர் ஈர்த்துவிடுவார். அவரின் நடை, உடை, ஸ்டைல், அடுத்த ஷாட்டிற்கு அவர் தன்னை தயார்படுத்தி கொள்ளும் விதம், அவரின் எளிமை, அடுத்தவர்களிடம் பழகும் தன்மை, எல்லோருக்கும் மரியாதை தரும் விதம்.... என்று ரஜினியைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நான் கற்று கொண்டேன். மொத்தத்தில், ரஜினி மிகவும் அற்புதமான மனிதர், அவரைப்போன்று ஒருவரும் கிடையாது.


உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?


தற்போது நான் ‛பாம்பரியா, கபாலி, பார்ச்டு, மேட்லி, ஆஸ்ரம்' என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இதில் கபாலி, ஆஸ்ரம் படங்கள் முடிந்துவிட்டது. இவைகள் தவிர பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்கும் கவுல் படத்தில் நடிக்கிறேன். இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த ஹரார் படமாக மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது.


இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

விமர்சனம்

Kabali Movie Review

தினமலர் விமர்சனம்உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர்

பட குழுவினர்கள்

Kabali Cast & Crew
படம் : கபாலி
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி’ தினேஷ், ‛மெட்ராஸ்’ கலையரசன், ‛ஆடுகளம்’ கிஷோர், வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், நாசர், மைம் கோபி...