Kabali Contest | Kabali Movie Contest | கபாலி போட்டி | கபாலி சிறப்பு பகுதி | கபாலி ஸ்பெஷல்

'கபாலி' நாணயம் பரிசுப்போட்டி!

தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய திரையுலகை மட்டுமல்லாது, உலகம் முழுக்க ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் ‛கபாலி’. கலைப்புலி எஸ்.தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி படம் ஜூலை 22-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கபாலி கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க களை கட்டத் தொடங்கிவிட்டன. கபாலி சிறப்பு விமானம், கபாலி நாணயம், கபாலி டீ-சர்ட் என... எங்கும் கபாலி மயமாக இருந்து வருகிறது.

கபாலி படத்திற்கு ஏற்கனவே தினமலர் சார்பாக சிறப்பு இணையதளம் துவக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களை ஈர்க்கும் விதமாக, தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் முத்தூட் ஃபின் கார்ப் இணைந்து, தினமலர் இணையதளம் வாயிலாக ‛‛கபாலி நாணயம் பரிசுப்போட்டி’’ நடத்துகிறது.

வாசகர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். சரியான பதிலை சொல்லி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 100 வாசகர்களுக்கு கபாலி சிறப்பு நாணயங்கள் பரிசாக காத்திருக்கிறது.

போட்டிக்கான கடைசி நாள் : 24.07.2016

Kabali Movie
போட்டியில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவர்க்கும் நன்றி

நிபந்தனைகள்
  • 01. தினமலர் மற்றும் தினமலர் குழுமத்தை சார்ந்த நபர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
  • 02. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாக நடத்தப்படும் போட்டி மட்டுமே.
  • 03. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், போட்டியில் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
  • 04. ஆசிரியர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.