வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ | ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை! - ரம்யா நம்பீசன் | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா |
பாலிவுட்டில், வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களின் வரிசை தொடர்கிறது. அந்த வரிசையில், இப்போது, "டேபிள் நம்பர்-21ம் சேரும் என, பாலிவுட் வட்டாரங்கள் உறுதியாக நம்புகின்றன. இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதி, பிஜி தீவுக்கு, சுற்றுலா செல்கின்றனர்; ஆடம்பர ஓட்டலில் தங்குகின்றனர். அங்கு இருக்கும் ஒருவர், டாக்டர் தம்பதியை, ஒரு புதுமையான போட்டியில் விளையாட அழைக்கிறார். இந்த போட்டியில், எட்டு கேள்விகள் கேட்கப்படும். எட்டு கேள்விகளுமே, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த வாழ்க்கையை மையமாக வைத்தே கேட்கப்படும். வெற்றி பெற்றால், 21 கோடி ரூபாய் பரிசு நிச்சயம். ஒரே ஒரு நிபந்தனை; எந்த காரணத்தைக் கொண்டும், போட்டியிலிருந்து, பாதியிலேயே வெளியேற முடியாது. இதில், டாக்டர் தம்பதி, ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இக்கட்டான சூழல் ஏற்படும்போது, போட்டியிலிருந்து வெளியேற முயற்சித்தும், அவர்களால் முடியவில்லை. தங்களை திட்டமிட்டு, சூழ்ச்சியில் சிக்க வைத்துவிட்டதை, அவர்கள் உணர்கின்றனர். இந்த ஆபத்திலிருந்து, அவர்கள் வெளியேறுகின்றனரா இல்லையா என்பதே கதை. ஆதித்யா தத் இயக்கியுள்ள இப்படத்தில், பரேஷ் ராவல், தீனா தோசே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.