சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
விக்ரம் - ஜீவா இணைந்து, "டேவிட் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தபு, லாராதத்தா, நாசர் உட்பட பலர் நடித்துள்ள இப்படம், இரண்டு கதைகளாக படமாக்கப்பட்டுள்ளதாம். இரண்டு கதைகளும், இரண்டு விதமான கலரில் இருக்க வேண்டும் என்பதற்காக, முதல் பாதியை ஒரு ஒளிப்பதிவாளரும், இரண்டாவது பாதியை, மற்றொரு ஒளிப்பதிவாளரும் படமாக்கியுள்ளனராம். தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இப்படம் பற்றி விக்ரம் கூறுகையில், "இப்படத்துக்காக தினமும், 17 மணி நேரம் நடித்தோம். அத்துடன், இப்படம் என் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்கிறார். விக்ரமுக்கு, சுத்தமாக இந்தி தெரியாதாம். அதனால், தனக்கு ஜோடியாக நடித்த தபுவிடம், அவ்வப்போது இந்தி வார்த்தைகளின் அர்த்தத்தை கேட்டறிந்து, அதற்குரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்தாராம். தபுவும், முகம் சுளிக்காமல், மிகுந்த ஆர்வத்துடன் விக்ரமுக்கு இந்தி கற்றுக் கொடுத்தாராம்.