Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

வித்யாபாலன் - சித்தார்த் ராய் திருமணம்

Vidya Balan, Siddharth Roy Kapur  wedding!பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும், "யு டிவி நிறுவன தலைவர் சித்தார்த் ராய்க்கும், மும்பையில், திருமணம் நடந்தது. தமிழ் மற்றும் பஞ்சாப் பாரம்பரிய முறைப்படி, நடந்த இந்த திருமணத்தில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை, வித்யா பாலன், 34. மறைந்த நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட, "தி டர்ட்டி பிக்சர் என்ற, இந்தி படத்தில், நடித்து பிரபலமானவர். இந்த படத்தில் நடித்ததற்காக, வித்யாவுக்கு, தேசிய விருதும் கிடைத்தது.இதற்கு முன், "தம்மாரே தம், ககானி உள்ளிட்ட படங்களிலும், இவர் நடித்துள்ளார். இவர், "யு டிவி நிறுவன தலைவர் சித்தார்த் ராயை காதலித்தார். இருவருக்கும் திருமணம் முடிக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.

மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில், இவர்களுக்கு திருமணம் நடந்தது. வித்யா பாலன், பாலக்காட்டு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். சித்தார்த், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.இதனால், இவர்களது திருமணம், தென் மற்றும் வட மாநில கலாசார முறைப்படி நடந்தது. திருமணச் சடங்கின் போது, வித்யா, கடுகு மஞ்சள் நிற பட்டுப் புடவையும், இளம் சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். சித்தார்த், பஞ்சாப் கலாசாரப்படி, மஞ்சள் நிற குர்தாவும், இளம் சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்திருந்தார்.

வித்யாவின் கழுத்தில், தமிழ் பாரம்பரிய முறைப்படி, சித்தார்த் ராய், தாலி கட்டினார்; தொடர்ந்து, வித்யாவின் கால் விரல்களில், மெட்டி அணிவித்தார். அப்போது, வித்யா பாலன், உணர்ச்சிவசப்பட்டு, ஆனந்த கண்ணீர் வடித்தார். அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சடங்குகளும் நடந்தன.பஞ்சாப் முறைப்படியும், திருமணச் சடங்குகள் நடந்ததால், சடங்குகள் முடிவடைய, ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.

இந்த திருமணத்துக்கு, வித்யா மற்றும் சித்தார்த்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். வெளி நபர்கள் யாரும், அனுமதிக்கப்படவில்லை. திருமணம் நடந்த பங்களாவைச் சுற்றி, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட நகர்களில் நடக்க உள்ளது.

Tags »
Vidya Balan, Siddharth Roy Kapur,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

Jaya - madurai,இந்தியா
2012-12-15 11:39:47 Report Abuse
 Jaya 3rd marriage for siddarth roy
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
viji - chennai,இந்தியா
2012-12-15 10:20:08 Report Abuse
 viji good
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சந்தோஷ் - madurai,இந்தியா
2012-12-15 08:03:19 Report Abuse
 சந்தோஷ் வேற பொண்ணு கிடைஇகலய ப
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in