‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் ரசிகர்களால், பெரிதும் விரும்பப்படும் நடிகை, கத்ரீனா கைப். இவரது தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர். தாயார், பிரிட்டனை சேர்ந்தவர். தந்தையின் பணி நிமித்தமாக, இளம் வயதிலேயே, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து, சீனா, ஜப்பான், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளில், கத்ரீனாவும், அவரது குடும்பத்தினரும், வசிக்க நேர்ந்தது. தற்போது, இந்தியாவில் வசித்து வந்தாலும், கத்ரீனா, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பெண் தான். பல நாடுகளில் வசித்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், "என்னுடைய, முதல், 12 வயதிலேயே, ஒன்பது நாடுகளில் வசித்து விட்டேன். பல மொழிகள் எனக்கு தெரியும். தற்போது, திரைப்படங்களில், வேறுபட்ட கலாசாரங்களிலும், வேறுபட்ட கேரக்டர்களிலும் நடிப்பதற்கு, இந்த அனுபவம், எனக்கு பெரிதும் உதவுகிறது என்ற கத்ரீனாவிடம், "பாலிவுட்டில், உள்ள சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் ஆகிய கான்களில், உங்களுக்கு, எந்த கான் பிடிக்கும் என, கேட்டபோது,"மூன்று பேருக்குமே, தனித் தனி திறமைகள் உள்ளன. ஒவ்வொருவரும், அவரவர் ஸ்டைலில் நடிக்கின்றனர். இதனால், மூன்று பேரில், யார் பெஸ்ட் என்பது கூறுவது சிரமம் என, விவரமாக எஸ்கேப் ஆனார்.