புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
நடிகை ஸ்ரீதேவி நீண்டஇடைவெளிக்கு பிறகு நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் 2ம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்திலும் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வயதானாலும் ஸ்ரீதேவியின் நடிப்பு திறமை மாறவில்லை என்று பலரும் பாராட்டினர். இந்த படத்துக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. இயக்குனர்கள் ஸ்ரீதேவியை முற்றுகையிட்டு அவர் வயதுக்கு ஏற்ற கதை இருப்பதாக சொல்லி நடிக்க அழைத்தனர். இந்த பட்டியலில் ஸ்ரீதேவி கணவர் போனிகபூரும் உள்ளார். அவர் தயாரிக்கும் படமொன்றில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.
இந்நிலையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை இயக்கிய கவுரி ஷிண்டே அதன் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளார். அதிலும் ஸ்ரீதேவியே நடிக்க வேண்டும் என்று வேண்டி அணுகியுள்ளார். இவர்களில் யார் படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்றார் ஸ்ரீதேவி.