தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேபாள அரசு மன்னர் குடும்பத்திலிருந்து வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. பம்பாய், உயிரே, இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையான மனிஷா, சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றின் போது மயங்கிவிழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதனை மனீஷாவும் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்து இருந்தார். இந்நிலையில் கேன்சர் வியாதியை பற்றி கவலைப்பட இல்லை என்றும், சிகிச்சை பெற்று மீண்டும் நடிக்க வருவேன் என்றும் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நான் நலமாக உள்ளேன். கேன்சர் இருப்பதால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்றும், எனக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்கள் உள்ளதால் நான் கவலைபடவில்லை என தெரிவித்துள்ளார்.