Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

போதையில் கார் ஓட்டி விபத்து: சல்மானுக்கு கோர்ட் "சம்மன்

Court summoned to salman khan
மது அருந்தி கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை கோர்ட், சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் மீது, 2002ல், மும்பையில், மது அருந்தி கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதாக, வழக்கு தொடரப்பட்டது. இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலரும், வக்கீலுமான, அபா சிங் என்பவர், மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சமீபத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கூறப்பட்டதாவது:விபத்து குறித்த வழக்கில், சல்மான் கானுக்கு சாதகமாக, சாட்சியங்களையும், ஆவணங்களையும், போலியாக, போலீசார் தயாரித்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து, சல்மான் கானை, தப்ப வைப்பதற்கான முயற்சி இது. எனவே, இதுகுறித்து விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, வரும், 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி, சல்மான் கானுக்கும், சம்பந்தபட்ட போலீசாருக்கும், சம்மன் அனுப்ப, மாஜிஸ்திரேட் கோர்ட், உத்தரவிட்டது.

Tags »
salman khan, Court, summoned, சல்மான் கான், கோர்ட், சம்மன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

CHRIST - chennai,இந்தியா
2012-12-04 19:22:56 Report Abuse
 CHRIST பரவ இல்லை கேசு வேகமாகத்தான் நகருது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ganesh - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-12-04 15:06:05 Report Abuse
 ganesh சமீப காலங்களில் துபாயில் பல மனித நேயம் நிகழ்சிகளில் கலந்து கொண்டு அவர் இருந்தது இங்குள்ள எல்லா நாளிதழ்களிலும் வந்தது. துபாயில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு மது அருந்தி கார் ஓட்டியதும், பாமர மக்கள் படுகாயம் அடைந்ததும்,இறந்ததும், சல்மான் மான் சாப்பிட்டு குற்றவாளியகியதும் தெரியாதோ என்னவோ.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in