'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த, 2009ல் வெளியான, "தி கலெக்டர் என்ற படத்தின், இரண்டாம் பாகம், இது. மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன், ஒரு இளம்பெண்ணை, யாருக்கும் தெரியாத, மர்மம் நிறைந்த, ரகசிய இடத்துக்கு கடத்திச் சென்று, மறைத்து வைக்கிறான். அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக, பெண்ணின் தந்தை, ஆயுதம் தாங்கிய, ஒரு கும்பலை, வாடகைக்கு பணியமர்த்துகிறார். அந்த கும்பலில் இடம் பெற்றுள்ள, ஒரு இளைஞன், சைக்கோ கொலைகாரனிடம் இருந்து, இளம்பெண்ணை காப்பாற்றுவதற்காக போராடுவதுதான், கதை.
சஸ்பென்ஸ், திகில், பரபரப்பு, திருப்பங்கள் நிறைந்த இந்த படத்தை, ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், மார்கஸ் டன்ஸ்டன் இயக்கியுள்ளார். ஜோஸ் ஸ்டீவர்ட், எம்மா பிட்ஜ்பாட்ரிக், கிறிஸ்டோபர் மெக்டொனால்டு ஆகிய நட்சத்திரங்கள், நடித்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது. "கலெக்ஷன் படம், ஹாலிவுட் பாக்ஸ் ஆபீசில், கலெக்ஷனை குவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.