பிரிட்டிஷ் ராணியிடம் விருது பெற்ற கேத்!
"டைட்டானிக் படத்தில்,"ரோஸ் என்ற கேரக்டராகவே மாறி, உலகம் முழுவதும் உள்ள, சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், கேத் வின்ஸ்லெட். அதற்கு பின், "ரீடர் என்ற படத்தில், தன் அற்புதமான நடிப்புக்காக, ஆஸ்கர் விருது பெற்றார். தற்போது, இவருக்கு, மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது. பிரிட்டிஷ் ராணி எலிசபெத் கையில், பிரிட்டனின் சிறந்த நடிகை என்ற விருதை, அவர் பெற்றுள்ளார். இதற்கான விழா, சமீபத்தில், பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. கேத் கூறும்போது, "பிரிட்டிஷ் ராணியை சந்திக்க வேண்டும் என்பது, என்னுடைய கனவு. இந்த கனவு, இவ்வளவு விரைவில் நனவாகும் என, நினைத்துக் கூட பார்க்கவில்லை. விருது வழங்கியபோது, ராணி எனக்கு பாராட்டு தெரிவித்தார். இதற்கு முன், பல விருதுகளை வாங்கி இருந்தாலும், இந்த விருது, எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக அமைந்து விட்டது என, சிலிர்ப்புடன் பதில் அளிக்கிறார், கேத் வின்ஸ்லெட்.
Tags »
பிரிட்டிஷ், ராணி, விருது, கேத், Kate, Award, received, British, Queen,