குரங்குகளாக மாறும் நடிகர்கள்! கரீனா கபூர் தாக்கு!!
நடிகர்கள் குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். மனதில் தோன்றுவதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று போட்டு உடைப்பவர்களில் கரீனா கபூரும் ஒருவர். அவ்வப்போது இப்படி பட்டென்று பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், நடிகர்களின் விளம்பர யுத்தி குறித்து கூறியிருக்கிறார். அவர் தனது பேட்டியில், நடிகர்கள் தற்போது குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர். உயரமான கட்டிடங்களில் இருந்து தங்கள் படங்கள் பற்றி விளம்பரம் என்ற பெயரில் அலறுகின்றனர். தபாங் 2 படம் நன்றாக வந்துள்ளது. அதை விளம்பரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள். பிரகாஷ் ஜாவின் சத்யாகிரஹா படத்தில் பத்திரிக்கையாளராக வருகிறேன். ஆனால் அதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கமாட்டேன். அமீர் கானுடன் நான் நடித்துள்ள தலாஷ் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை விளம்பரம் செய்யும் எண்ணம் இல்லை, என்று கூறியுள்ளார்.