Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திருமணமான ஆண்களைக் காதலிக்க வேண்டாம் - நீனா குப்தா

19 மார், 2021 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Dont-fall-in-love-with-married-man-:-Neena-gupta-advice-to-women

கிரிக்கெட் வீரர்களைத் திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் என்பது இந்தியாவில் அடிக்கடி நடக்கும் ஒன்று. அப்படியான திருமணங்கள் பல உண்டு. ஆனால், திருமணமே செய்து கொள்ளாமல் பரபரப்பாகப் பேசப்பட்ட ஜோடி ஹிந்தி நடிகை நீனா குப்தா, மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்.

பல வருடங்களுக்கு முன்பு விவியன் மீது ஆசைப்பட்டு அவரைக் காதலித்தார் நீனா. ஆனால், திருமணமே செய்து கொள்ளாமல் அவர் மூலம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். தற்போது நீனாவின் மகள் மசாபா குப்தா டிசைனர் ஆக இருக்கிறார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தனது ரசிகைகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார் நீனா. “எனது மகள் திருமணமாகாத பெற்றோருக்குப் பிறந்த காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டாள். திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ள வேண்டாம். இதற்கு முன்பு நான் அப்படிச் செய்து, அதனால் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் இதைப் பற்றி நான் சொல்கிறேன்,” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தற்போது 61 வயதாகும் நீனா குப்தா, 13 வருடங்களுக்கு முன்பு விவேக் மெஹ்ரா என்ற ஆடிட்டரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்திய படத் தயாரிப்பில் இறங்கிய அமேசான்இந்திய படத் தயாரிப்பில் இறங்கிய ... ஹாலிவுட் ரீமேக்கில் ரிஷி கபூருக்கு பதிலாக அமிதாப் பச்சன் ஹாலிவுட் ரீமேக்கில் ரிஷி கபூருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Manian - Chennai,ஈரான்
22 மார், 2021 - 13:22 Report Abuse
Manian ஏம்மா கனவு கன்னிகை நடன ராணி ஹேமாமாலினி தர்மேந்திராவை ரெண்டாந்தாரமா இருக்க சம்மதிச்சு தியோல்ன்னு ஒரு பெண்ணையும் பெத்தாளே அப்பா அவ ஒரு அனுபவ படட ஆணைதானே தேடினா? அதெலேயும் ஒரு சொகம் இருக்குதே பொண்ணுங்க ஜனத்தொகை ஜாஸ்தின்னு, நம்ம முஸ்தாபாவுமே 4லு பெண்களையே கலியாணம் கெட்டிகிடட போது அவிங்க க வேண்டாம்னாங்களா?
Rate this:
Tamilan - kailasa,இந்தியா
21 மார், 2021 - 09:26 Report Abuse
Tamilan முதிர்ச்சி இல்லாத ஒழுக்கம் இல்லாத பெண்
Rate this:
Manian - Chennai,ஈரான்
20 மார், 2021 - 04:27 Report Abuse
Manian ஒரு ஆணை பெண் விரும்புவது அல்லது ஒரு பெண் ஆணை விரும்புவது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை மரபணு தூண்டல், முன் மண்டை (frontal cortex ) முதிர்ச்சி அடையாத பெண்கள்(சுமார் 22 வயதிற்கு முன்- ஆண்கள்:27-28 வயதிற்க்கு முன்), டெஸ்டிராஸ்டோன்(testosterone ) என்ற பால் உந்தல் ஹார்மோன் கர்ப காலம் முதலே குழந்தை உடலில் அதிகமாக சுரத்தல், கர்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சலால் அதிகமாக உற்பத்தியாகும் கார்டிசால்(cortisol ) குழந்தைக்கு பரவுதல் குடிகாரத்தை, நார்ஸிஸிட்(narcissist ) தாயார் போன்ற பல காரணங்களால், கானல் நீரை தேடுவதால், நீண்ட கால திட்டம் இல்லாமல் பொதுவாக, இந்த வாழ்வை உயர்த்தாத போலி காதல் கானல் நீர் பிரமையை ஏற்படுத்துகிறது செக்ஸ் தாராளமாக உள்ள மேல் நாடுகளிலும் இதே நிலைதான் முன் மண்டை வளர்ச்சி அடையும் வரை , இந்த பால் உந்தலை சரியாக புரிந்து கொள்ளாதவர்களே "இந்த கருமத்தை ஆண்டாண்டு காலாக புரிதல் இல்லாத பெரியவங்க தவறு என்றார்கள்". புரிதல் உள்ளவரகள் (சிந்திக்கவில்லை என்றாலும்), பாட்டு, கும்மி, நடனம், தோட்டக்கலை, கைவினைகள், பாண்டி விளையாடுதல் மூலம் உடலை ஓய்வெடுக்கும் வடிகாலாக வழியில் நடத்தினார்கள் பால் உணர்வு வளராவிட்டால் மனித குலமே அழிந்தேவிடும். பெற்றோர்களின் தவறே, இந்த பரிதாப நிலை
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2021 - 23:04 Report Abuse
BalaG அந்த கருமத்தைதான ஆண்டாண்டு காலமா பெரியவங்க சொல்றாங்க.. இது ஒரு குந்தையையையும் பெத்து வயசானத்துக்கு அப்புறம் வந்து சொல்லுது பாரு.. இதனால பாதிக்கபடறது அந்த அப்பாவி குழந்தைதான்.. இந்த அடிப்படை அறிவை இத்தனை வருஷம் வாழ்ந்து பட்ட பிறகுதான் புரியுதா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in