Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கணவன் மனைவியை சேர்த்து வைத்த கொரோனா

09 மார், 2021 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Nawazuddin-siddiqui-wife-Aalia-withdraws-divorce-notice

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். நவாசுதீனும் அதற்கு ஒப்புக் கொண்டு இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்திருந்தனர். தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஆலியா கூறியிருப்பதாவது: சில வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் சித்திக் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். என்னையும் கவனித்துக் கொண்டார். நல்ல தந்தையாக, கணவனாக அவர் இருந்தார். அன்பாக இருக்கிறார். அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்தேன். திருமணம் பந்தம் என்பது அற்புதமானது என்பதை அவரும் நானும், உணர்ந்திருக்கிறோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு எதிர்ப்பு'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு ... ரன்பீர் கபுருக்கு கொரோனா ரன்பீர் கபுருக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Manian - Chennai,ஈரான்
12 மார், 2021 - 06:34 Report Abuse
Manian படுக்கை அறையிலும் , சாப்பிடும் போதும் எந்த விவாதமும் இல்லாமல் இருந்தால், பிரிவு வராது .
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
10 மார், 2021 - 23:46 Report Abuse
BalaG இதை கேட்க எவ்வளவு நல்லா இருக்கு.. பல விவாகரத்துகள் அவசரபட்டு நடக்குது என்பதும் இதை கவனிக்கும்போது உறுதியாகிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in