மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஏ பி சி டி என்ற இந்தி படத்தில், உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் பாணியில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். அவருடன் மாதுரி தீட்சித்தும் சேர்ந்து ஆட உள்ளார். ஏ பி சி டி (எனி படி கேன் டான்ஸ்) என்ற இந்தி படத்தை நடன அமைப்பாளரும் டைரக்டருமான ரோமியோ டிசோசா இயக்கி வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், சல்மான்கான், தர்மேஷ், பிரின்ஸ், மயூரேஷ், விருஷாலி ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை கவுரவப்படுத்தும் விதமாக அவர் பாணியில், இன்னொரு பாடல் காட்சிக்கு பிரபுதேவா நடனம் ஆடுகிறார். அவருடன் மாதுரி தீட்சித், டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோரும் நடனம் ஆடுகிறார்கள். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் தாராவி பகுதிகளில் இந்த பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.