மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? | வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு! | எனக்கு மாடர்ன் டிரெஸ்னா உசுரு...! உருகுகிறார், "பூ பார்வதி | சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்! | உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! | பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்! | நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! | நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்!! போலீசில் புகார் |
திருமண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதால் சினிமாவுக்கு சில மாதங்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன், என்று நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலுக்கு, பரத் தக்தானி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ள இஷா தியோல், தனது கணவருடன் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூரூ வந்தார்கள். அப்போது இஷா தியோல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், இப்போது நான் எந்த புதிய பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அதற்கு சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க வேண்டும். நானாகத்தான் சினிமாவை விட்டு விலகியிருக்கிறேன். ஏதாவது நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், பார்க்கலாம். நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருக்கிறது, என்றார்.