டிசம்பர் 14ம் தேதி வித்யாபாலன் திருமணம்!!
பிரபல இந்தி நடிகை வித்யாபாலனுக்கு டிசம்பர் 14ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. யு.டி.வி., சித்தார்த் ராய் கபூரை அவர் திருமணம் செய்ய உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த மலையாளத்து தமிழ் பெண் வித்யாபாலன். ப்ரணீதா என்ற இந்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான வித்யாபாலன் தொடர்ந்து பா, தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக மறைந்த தென்னிந்திய நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்தி தவிர மலையாளம் மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் வித்யாபாலனுக்கும், யு.டி.வி., சித்தார்த் ராய் கபூருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை கடந்த மே மாதம் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார் வித்யாபாலன். இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில், வருகிற டிசம்பர் 14ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வித்யாபாலன் வீட்டு முறைப்படியும், சித்தார்த் ராய் கபூர் வீட்டு முறைப்படியும் திருமணம் நடைபெற இருக்கிறது.
Tags »
December 14, Vidya Balan, Siddharth Roy Kapur, marriage, டிசம்பர் 14, வித்யாபாலன், சித்தார்த் ராய் கபூர், திருமணம்,