பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஐஸ்வர்ராயின் மகள் ஆராத்யாவுக்கு முதல் பிறந்த நாளில் ரூ. 28 லட்சம் மதிப்புள்ள மினி கார் பரிசாக கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருந்தபோதே ஆராத்யா எந்த தேதியில் பிறப்பாள் என்று பலர் பெட் கட்டிக் கொண்டிருந்தனர். ஐஸை விட மற்றவர்கள் தான் அவருக்கு எப்பொழுது பிரசவம் நடக்கும் என்று பேராவலாக இருந்தனர். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம்தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்தவுடன் அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கினர். ஐஸ்வர்யாவின் மகளை ஊடகங்கள் கண்ணில் படாமல் பல மாதங்கள் வைத்திருந்தனர். குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்த பிறகே அதற்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர்.
சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கு பிரான்ஸ் அரசு விருது கொடுத்த விழாவில் தான் ஆராத்யாவின் முகத்தை முதன்முதலாக கேமராவுக்கு காட்டினார் ஐஸ். இந்நிலையில் ஆராத்யாவுக்கு நேற்று (16ம் தேதி) தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது மகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற மினி கூப்பர் எஸ் காரை பிறந்த நாள் பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அபிஷேக் பச்சன். பின்னர் அதேகாரில் தனது தாத்தா-பாட்டி அமிதாப் மற்றும் ஜெயா பச்சனுடன் நகரை வலம் வந்தார் ஆராத்யா.