இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நடிகை வித்யா பாலன் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வித்யாபாலனுக்கும் அவரது காதலர் சித்தார்த் ராய் கபூருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. வித்யா பாலனுக்கு காஞ்சீபுரம் பட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் தனது திருமணத்திற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளரான சபயசாச்சியிடம் 18 சேலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். வித்யாவின் சேலைக்கு பட்டுத்துணி தேட சபயசாச்சி சென்னை வருகிறாராம். வித்யாவின் திருமணம் தமிழ் முறைப்படி கோவிலில் வைத்து நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணத்தை எளிமையாக நடத்த மணமக்கள் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமண தேதி, வரவேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.