'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றால், அவர்களுக்காக, நிர்வாணமாக நிற்பதற்கு தயார் என, 2011ம் ஆண்டு பூனம் பாண்டே என்ற மாடல் அழகி, ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதுவரை யாரும், அவரை பெரிய அளவு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை அதோடு மாறியது. பின் இடைவிடாது, இதைபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். அதோடு, அவரது அரை நிர்வாண படங்களை, அவரே தனது இணைய தளத்திலும், டுவிட்டரிலும் வெளியிட்டுக்கொள்வார்.
இது சம்பந்தமாக, அவருக்கு பெங்களூரூ கோர்ட் ஒன்று "சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நாடகங்கள் எல்லாம், அவர் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்கும், அதன் மூலம், ஹிந்தி திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்கும் என, அனைவருக்கும் தெரிந்ததே. இந்த முயற்சியில், ஒரு ஆண்டு ”சுய விளம்பரத்திற்கு பின் வெற்றி பெற்று உள்ளார். "நஷா என்ற கவர்ச்சி படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அடுத்து, "இப்போவாவது இவரது நாடகங்கள் ஓயும் என, இந்தி பட வட்டாரங்களில் பேசப்படுகிறது.