ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தி நடிகர் அமீர் கான், நடிக்கும் "தலாஷ் திரைப்படம், அவரது சொந்த தயாரிப்பில், இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. இதில் அமீர் கானும், கரீனா கபூரும் நடிக்கின்றனர். தீபாவளிக்கு, "ஜப் தக் ஹை ஜான் மற்றும் "சன் ஆப் சர்தார் என்ற இரு பெரிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், வசூல் கருதி, "தலாஷ் இந்த மாத இறுதியில் தான் வெளியாகும்.
இந்த படத்தை விளம்பரப்படுத்த, வழக்கமான பாணியிலான விளம்பரங்களை மட்டும் நம்பாமல், "கூகுள் இணையதளத்தை அணுகியுள்ளார், அமீர் கான். கூகுள் உலகிலேயே பெரிய இணைய தேடல் நிறுவனம். "தலாஷ் என்றால் இந்தியில் தேடல் என்று, பொருள். அதை பயன்படுத்தி, கூகுள் இணையதளத்தில், கூகுள் என்ற பெயரை விலக்கிவிட்டு தலாஷ் என்று, தெரியுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல், நவம்பர் 30ம் தேதி வரை இப்படித்தான் கூகுளின் இந்திய இணையதளம் தெரியும் என்று, கூறப்படுகிறது.