ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அக்ஷய் குமாருடன், சோனாக்ஷி சின்கா நடித்த, "ஜோக்கர் படம், தயாரிப்பாளரின் பாக்கெட்டை பதம் பார்த்து விட்டது.இந்த படத்தை தயாரித்த, பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் பாரா கான், சோகத்தில் மூழ்கி இருக்கிறார். "படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில், ஹீரோயின் சோனாக்ஷி சின்கா ஆர்வம் காட்டவில்லை என, புகார் கூறினார், பாரா கான்.
சோனாக்ஷியிடம் கேட்டபோது,"படத்தை விளம்பர படுத்துவதற்காக நடந்த, அனைத்து நிகழ்ச்சிகளிலும், நான் பங்கேற்றேன். இந்த விஷயத்தில், யாரும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. பாரா கானுடன் எனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரை, என்னுடைய மூத்த சகோதரியாக நினைக்கிறேன் என்றார். "ஜோக்கர் படத்தின் தோல்வி, உங்களை பாதித்து விட்டதா என, கேட்டபோது, "கண்டிப்பாக இல்லை. ஒரு படத்தின் வெற்றி,தோல்வியால், ஒரு நடிகையின் திரையுலக வாழ்வில் பெரிய பாதிப்பு ஏற்பட போவது இல்லை. இப்போது, என் கவனம் எல்லாம், தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள, "சன் ஆப் சர்தார் படத்தின் மீது தான் உள்ளது. கண்டிப்பாக, அந்த படம் ஹிட் ஆகும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.