Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சந்தியாவின் பிரத்யேக பேட்டி!!

17 அக், 2012 - 15:51 IST
எழுத்தின் அளவு:

       எல்லோருக்கும் வணக்கம்! தினமலர் வாசகர்கள் எல்லாரையும் சந்திப்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு நாம பேசப் போறது மெயினா கலர் புல்லான விஷயங்களைத் தான் பேசப் போறோம். நீங்க எனக்கு கலர்புல்லா கேள்விகள் கேளுங்க கலர் புல்லா பதில் சொல்றேன்.

* அழகு கண்கள் பற்றிய ரகசிய குறிப்புகள்?

அடிப்படையா எங்க அப்பா - அம்மாவுக்கு அழகான கண்கள். எங்கப்பாவோட கண்களை பார்த்தீங்கன்னா நீளமா இருக்கும். அம்மாவுக்கு பெரிசா விரிந்திருக்கும். எனக்கு அந்த இரண்டுமே கலந்த கண்களை உடையது. என்னோட கண்கள் நீளமாகவும், வட்ட வடிவமாகவும் இருக்கும். இரண்டு பேரோட கண்கள் கலந்து கடவுள் எனக்கு அழகாக படைச்சிருக்கார். நிறைய பேர் அழகா இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நிறைய கேமரா மேன்களும், இயக்குனர்களும் சொல்லியிருக்காங்க. இத்தனைக்கும் நிறைய குளோசப் ஷாட் வைக்கும் போது, நிறைய ஷாட் என் கண்களுக்கே வைச்சிருக்காங்க. ரொமான்டிக் சீன்ல என் கண்களுக்கு சிறப்பு கொடுத்திருக்காங்க. நிறைய எக்ஸ்பிரஷன் கொடுக்கும் போதும், ரியாக்ஷன் கொடுக்கும் போதும் பார்த்தீங்கன்னா எனக்கு பெரிய கண்கள் இருக்கிறதுனால கொஞ்சம் பிரைட்டா தெரியும். அதனால எனக்கு ரொம்ப சந்தோஷம்.

@ @@@@@

* உங்களுடன் கதாநாயகனாக நடித்திருப்பவர்களில் பிடித்தவர் யார்?

நான் நடிச்ச நடிகர்களில் ரொம்ப மாடல்தான். பார்த்தீங்கன்னா அவங்களோட கேரியரா இருந்தாலும் சரி ஒரு நடிகருக்கு மட்டும்தான் அவங்க மேல நம்பிக்கை வரும். நம்ம சொல்வோம், நீ என்ன எப்பவுமே உன் மேல நம்பிக்கையா இருக்க. சுயநலம் இல்லையான்னு கேட்போம். ஆனா எல்லா நடிகர்களும் நம்பிக்கையோடு தான் இருப்பாங்க. நான் நினைக்கிறேன், அதனோட பிரதிபலிப்பு, குவாலிட்டி வந்துடும். இதுல நடிக்கும் போது, அவங்க மேல நம்பிக்கை வந்துரும். அதனால அவங்க மேல ஆர்வம் வைச்சு பண்ணுவாங்க. இது எல்லாருக்குமே ரொம்ப பொதுவான விஷயம். அதனால ஒரு படம் நடிச்சா படம் முழுவதும் ஆர்வத்தோட நடிக்கிறாங்க. எனக்கு நெருக்கம்ன்னா, பரத் சொல்லலாம். ஏன்னா பரத் கூட என்னோட முதல் படம் பண்ணினேன். அந்த டைம்ல எனக்கு நிறைய உதவிகள் பண்ணிருக்கார். அடுத்து ஜீவா. ரொம்ப ரொம்ப குளோஸ் பிரண்ட். இப்போ டச் விட்டுப் போச்சு. ஆனா நாங்க வேலை பார்த்த நேரத்துல வந்து ரொம்ப நல்லா இருந்தோம். அப்போ சும்மா சும்மா சண்டை போடுவோம். ஜீவாவால நிறைய தடவை டைரக்டர் கிட்ட திட்டு வாங்கி இருக்கிறேன். குளோசப் காட்சிகள் வைக்கும் போது, எதிர்ல இருந்து நக்கல் பண்ணிட்டிருப்பார். அப்புறம் பார்த்தீங்கன்னா பிருத்விராஜ். படம் பண்ணினாலும் சரி, எனக்கு ரொம்ப குளோஸ். அப்புறம் மாஸ்டர்ஸ்ன்னு மலையாள படம் பண்ணும் போது, எந்த ஒரு ஈகோ இல்லாம படம் பண்ணினோம். தொழில் ஆனாலும் சரி, நடிப்பானாலும் சரி ரொம்ப விவாதிப்போம். மத்தப்படி எல்லாருமே என்னோட நல்ல நட்பாகத்தான் இருக்காங்க. அவங்க கூட பண்ணும் போது, குறைந்த நாட்கள் வேலை செய்திருக்கலாம். ஆனா மொத்தமா பார்க்கும்போது, நான் சந்தோஷமாத்தான் இருந்திருக்கிறேன். இன்னும் ஒர்க் பண்ணாத நடிகர்களுடன் நடிக்கும் போது இவங்க கொடுத்த அனுபவத்துலதான் நல்லா நடிச்சிருக்கேன். மற்றபடி தனியா எதுவும் சொல்ல தெரியலை. கதாநாயகர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கலர் இருக்கு. அதனால எல்லா கலரையும் கலந்துதான் கொடுக்க முடியும்.

@@@


* காதல் சந்தியாவுக்கு காதல் எப்ப வரும்?

இப்போதைக்கு கிடையாது. ஏன்னா எனக்கு இப்போ 23 வயசுதான் ஆகுது. இப்போ கல்யாணத்தை பற்றி எந்த எண்ணமும் கிடையாது. 2-3 வருஷம் கழிச்சி அப்பா - அம்மா அதப் பற்றி பேசலாம்.

@@@

* ஹீரோ கார்த்தி - பருத்திவீரன் கார்த்தி காம்பினேஷன் ஏன் ஒர்க் அவுட் ஆகவில்லை?

அடிப்படையில மாலை நேரத்து மயக்கம் படம் ரொமாண்டிக்கான கதை. கணவன் - மனைவி பற்றியது. அவங்க காதல் திருமணம் பண்ணிக்கிறாங்க. அதுக்கு அப்புறமா அவங்களுக்குள்ள பிரச்சினைகள் வருது. அந்த பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறாங்க. அது தான் கதை. எனக்கு செல்வராகவன் சார் முதல்ல கதை சொல்லும் போதே, ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. முதல் தடவையா கார்த்திய சந்திச்சேன். அந்த டைம்ல. பருத்தி வீரன் ரிலீஸ் ஆகலை. அதுக்கு முன்னாடி தான் போட்டோ ஷூட் நடந்தது. ரொம்ப எதிர்பார்த்தேன். பெரிய படம். நல்ல டீம். அவ்வளவு அழகான போட்டோ ஷூட். அது அவ்வளவு அழகா வந்தது. அதுக்கு அப்புறமா பருத்தி வீரன் ரிலீஸ் ஆச்சு. அப்புறமா செல்வராகவன் சார் மொத்தமா வேறு ஒரு கதை பண்ணனும்ன்னு சொல்லிட்டு தான் ஆயிரத்தில் ஒருவன் கதை ரெடி பண்ணினார். அதனால மாலை நேரத்து மயக்கம் படத்தை நிறுத்திவிட்டார்.  கார்த்திய பற்றி சொல்லணும்ன்னா வெரி கம்பேர்ட்டபிள் பெர்சன். போட்டோ ஷூட் டயம்ல, அந்த ஸ்டில் எடுக்கும்போது சில விஷயங்கள் பேசினோம். வெரி வெரி நைஸ் பெர்சன் ஒண்டர்புல் பெர்சன்.

@@@


* சந்தியா 2012 பிராஜெக்ட்ல?

என்னோட எதிர்கால பிராஜெக்ட் பார்த்தீங்கன்னா, இப்போ நான் வேலை செய்துக்கிட்டிருக்கிற மலையாள படம் மை டியர் மம்மி. அதுல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இடையே நடக்கிற கதை. என்னன்னா அம்மாவும் - பொண்ணும்  ஒரே டயத்துல காலேஜ் போவாங்க. அத எப்படி பார்ப்பாங்க கதை. முழு நீள காமெடி படம். ஊர்வசி மேடம் கூட பண்றேன். நான் ஊர்வசி மேடத்தோட படம் நிறைய பார்த்திருக்கிறேன். ரொம்ப பிரிலியண்ட் நடிகை. நிறைய விழாக்கள்ல பார்த்திருக்கிறேன். முதல் தடவையா அவங்க கூட நடிச்சேன்.

@@@


* சிம்பா உங்க வீட்டு செல்ல நாய்க்குட்டி பற்றி?

என்னோட பேமிலில ரொம்ப முக்கியமான ஒருத்தர். அதுக்கு 6 வயசாகுது. அது வேற யாரும் இல்லை. என்னோட நாய். பெயர் சிம்பா. பெயர் எப்படி வைச்சேன்னா எனக்கும் என் அண்ணாவுக்கும் இருக்கிற ஒன் ஆப் த மோஸ்ட் பேவரைட் பிலிம் பார்த்தீங்கன்னா லயன் கிங். லயன் கிங்ல வந்துட்டு, அந்த ராஜாவோட குழந்தை பெயர் சிம்பா. அப்படிதான் அந்த பெயர் வைச்சோம். அந்த சின்ன வயசு லயன் எப்படி இருக்குமோ, அதே மாதிரிதான் சிம்பாவோட முகம் இருந்துச்சு. எங்க வீட்டு வந்துட்டு பெயர் சொல்லி, இது, அதுன்னா சொன்னா தெரியாது. அச்சன், அம்மா, சேச்சன், சேச்சி, சேட்டா அப்படி சொன்னா தான் யார்ன்னு கண்டு பிடிக்கும். அப்பா யாரு, அம்மா யாரு, சேச்சி யாருன்னு சொன்னா கரெக்டா போய் நிற்கும். வெளியில ஷூட்டிங் போய்ட்டு வரும்போது, எங்க அப்பா - அம்மாவோட ரியாக்ஷன் பார்த்தீங்கன்னா பெரிசா ஒண்ணும் இருக்காது. என்னா எப்படி போச்சு. நல்லா இருக்கான்னு கேட்பாங்க. நான் வெளியில எங்க போனாலும், வீட்டுக்கு வர்ற வரைக்கும் சிம்பா பற்றிதான் யோசிச்சுட்டு இருப்பேன். ஏன்னா எங்க குடும்பத்துல ஒருத்தரா இருக்கிறதுல ரொம்ப சந்தோஷம்.

@ @@@@@


* சந்தியாவுக்கும் - பரதத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?

சமஸ்ரம்ன்னு சொல்லிட்டு ஒரு படம்.  சினிமாவ ஒரு வீட்டுல ஷூட் பண்ணுவாங்க. அதுல நான் ஒரு நடிகை. பாடல் சூட்டிங் பண்ணுவாங்க. பரத நாட்டிய பாடல். அந்த பரத நாட்டிய பாடல்ல வந்துட்டு எனக்குள்ள ஒரு போர்ஸ் ஏறி, ஆடுற மாதிரி ஒரு பாடல். ஆனா நான் பரத நாட்டிய கலைஞர் கிடையாது. இரண்டாவது ஆப்த மித்ரா பண்ணேன். அது சந்திரமுகியோட பாகம் இரண்டு. அத கன்னடத்துல செய்தேன். அதுல, ஜோதிகா மேடம் பண்ணின கேரக்டர நான், கன்னடத்துல செய்தேன். அது ஒரு வித்தியாசமான அனுபவம். அந்த படத்துல 100 சதவிகிதம் மேக்கப் போட்டுதான் படம் சூட்டிங் பண்ணினோம். ஆனா படத்துல பெரிசா டான்ஸ் எதுவும் கிடையாது. அத வந்து மைன்ட் ஆப் நார்மலா பண்றது தான், அந்த படத்துல வந்து காட்டினாங்க. பரத நாட்டிய டான்ஸ் வந்து முழு சமஸ்கிருதத்துல தான் பண்ணினேன். அன்னைக்கு முழுவதும் டென்ஷனா இருந்தேன். அதனால அதுல பயந்து, பயந்து டான்ஸ் பண்‌ணனேன். ஆனா அது சந்தோஷமா அனுபவமா இருந்தது. நான் 2-3 வயசுல பரத நாட்டியம் கத்துக்கிட்டதால அது மேனேஜ் பண்ண முடிஞ்சுது. இப்போ கூட பாட்டு பார்க்கும்போது, பரவாயில்ல நல்லதான் பண்ணியிருக்கேன்னு தோணும்.

@@@


* உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?

எனக்கு கிடைச்ச விருதுகள் பார்த்தீங்கன்னா நிறைய குட்டி குட்டி விருதுகள் கிடைச்சிருக்கு. தினகரன் விருது, பிலிம்பேர் விருது இரண்டு மாநில விருதுகள் கிடைச்சுருக்கு. முதல் இரண்டு படத்துக்கு மாநில அரசின் விருது கிடைச்சுருக்கு. முதல் படம் காதல். இரண்டாவது படம் டிஸ்யூம் அதுக்கும் கிடைச்சுது. பிலிம்பேர் விருது தெலுங்குல அனவரமன்து ஒரு படம் பண்ணினேன் அந்த படத்துக்கு கிடைச்சது. அதோட காதல் படத்துக்கும் கிடைச்சது. அது இல்லாம இப்போ நிகோரெசி விருது கிடைச்சது. டிராபிக் படத்துக்கு சிறந்த துணை நடிக்கைக்கான விருது கிடைச்சது. அந்த விருது ரொம்ப பிரபலமான விருது. அது, மாநில விருதுக்கு இணையான விருது. நான் வேலை செய்த இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்குமே என்னோட மனமார்ந்த நன்றி.

@ @@@@@


* வானவில் குறித்து உங்கள் கருத்து?

வானவில்ல பள்ளி காலத்துல நான் பார்த்ததா ஞாபகம் கிடையாது. நான் முதன் முதலா வானவில்ல பார்த்தது என்னோட முதல் பட ஷீட்டிங்குல. மழை பெஞ்சுது. அப்போ வானவில் பார்த்தேன். அது ரொம்ப சின்னதா இருந்தது. ரொம்ப அழகான விஷயம். கலர்ஸ் வந்து வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமான பங்கு வகிக்கிறது. என்கிட்ட கேட்டீங்கன்னா, எந்த கலரா இருந்தாலும் சரி, மல்டி கலரான விஷயம் பார்க்கும்போது, அதுவும் இயற்கையாக பார்க்கும் போது, உண்மையிலேயே அழகான விஷயம்தான்.

@@@

* நீங்கள் பிறந்த ஊர், நீங்கள் வசிக்கும் சென்னைக்கு என்ன வண்ணம் கொடுப்பீர்கள்?

சென்னை வந்து ரொம்ப கலர்புல் இடம் சென்னையும், கேரளாவையும் வைச்சு ஒப்பிட்டிங்கன்னா கேரளா ரொம்ப இயற்கையா இருக்கும். ஆனா கொச்சின் கட்டிடங்கள், நிறைய காபி கடைகள், தியேட்டர், மால்ஸ் அது நிறைய பொழுது போக்கு இடங்கள் இருக்கு. ஆனா கேரளாவுல வெளிப் புரங்கள் பார்த்தீங்கன்னா ரொம்ப பச்சை பசேல்ன்னு இருக்கும். சமீபத்தில மை டியர் மம்மின்னு படத்துல கலந்துக்கிட்டேன். தொடுபுலான்னு ஒரு இடத்துல நடந்துச்சு. ஆனா அங்க பார்த்தீங்கன்னா ஒரு காபி ஷாப் கூட கிடையாது. ஏன் பில்டிங் கிடையாது. அதனால அங்குள்ள ஒவ்வொரு வீடும் ரொம்ப அழகா, பெரிய பெரிய வீடா இருக்கும். அத அவ்வளவு அழகாக கட்டி இருப்பாங்க. அத சுத்தி பார்த்தீங்கன்னா பச்சையா இருக்கும் அந்த இடத்தோட பெயர் தொடும்புழா என்று அர்த்தம் தொடர்ந்து ஆறுகள் ஓடும் இடம் அந்த மாதிரிதான் அந்த இடத்தோட பெயர். அந்த இடத்துல இருந்து எங்கே போனாலும் ஆறுகள் நம்மை தொடர்ந்து கொண்டே வரும் ஆறு எப்படி இருக்குன்னா பச்சை பசேல்ன்னு இருக்கும் அந்த ஆற்றோட நீர் கண்ணாடி மாதிரி தெளிவாக இருக்கும் எப்பவேன்னா குடிக்கலாம். அவ்வளவு சுத்தமான தண்ணீர் தொடும் புழாவோட அழகை பார்த்த மாதிரி கேரளாவோட எல்லா பகுதிகளிலேயும் இருக்கு. ஆனா சென்னை பார்த்தீங்கன்னா ரொம்ப கலர் புல் சிட்டி சென்னையோட பெரிய பிளஸ் என்னன்னா, அழகான பீச், மெரினாபீச், பெசன்ட் நகர் பீச் எங்கே போனாலும் பீச்சோட சூழல் இருக்கும் பொதுவாக என்கிட்ட கேட்டீங்கன்னா கேரளாவை விட சென்னைதான் பிடிக்கும் எங்கே போனாலும், பத்து நாளைக்குள்ள சென்னைக்கு வந்துடனும்ன்னு தோணும்.

@@@

* உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று மனிதர்கள் என்ன வண்ணம் அவர்களுக்கு கொடுப்பீர்கள்?

என்னோட வாழ்க்கையில முக்கியான 3 மனிதர்கள் பார்த்தீங்கன்னா, முதல் என்னோட சகோதரர். ராகுல். எம்.எஸ் முடிச்சுட்டு அமெரிக்காவுல வேலை பார்த்திட்டிருக்கான். எங்க அண்ணன் கிட்டே 10 நிமிடம் பேசினாலும் தெளிவாகிடுவாங்க. அவன் எனக்கு எதிர் நான் யார் என்கிட்ட எது கேட்டாலும் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவேன். எங்கப்பா சொல்வாரு, நீ கொஞ்சமாவது யோசிச்சு பாரு. மத்தவங்க என்ன பேச வர்றாங்கன்னு யோசிச்சு பேசுன்னு சொல்வார். நீ சொல்றது சரிதான் இல்லைன்னு சொல்லல நீ பேசும் போது, மத்தவங்க மனது கஷ்டப்படுற மாதிரி பேசாதன்னு அறிவுரை சொல்வார். ஆனா அண்ணன் அப்படி கிடையாது. அவன் பேசுற விதம், மொழி எல்லாமே நல்லா இருக்கும். அதனால என்னோட வாழ்க்கையில அண்ணனுக்கு முக்கிய பங்கு இருக்கு அவருக்கு கொடுக்கிற கலர் வெள்ளை.

@@@

அப்புறம் இன்னொரு முக்கியமான நபர் பார்த்தீங்கன்னா, என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில பெரிய, இதுவரைக்கும் பெரிய பிரேக் கொடுத்து இயக்குனர் பாலாஜி சக்திவேல், என் வாழ்க்கையில முக்கியமான நபர், அதுக்கு அவரோட பேட்டி காதல் பட ஷீட்டிங்ன்னு நேரத்தை செலவழிச்சுருக்கேன். என்னோட வீட்டுல அவர் ஒரு குடும்ப உறுப்பினர். பாலாஜி கலர் செட்ல எப்படி இருப்பார்ன்னு பார்த்தீங்கன்னா பயங்கர கோபமா இருப்பார். சீன் முடிக்கணும், இன்றைய வேலையை முடிக்கணும் அப்படிதான் இருப்பார். ஆனா அப்ப அப்ப இடையிலே ஜோக் அடிப்பார். ஆனா தப்பு பண்ணின உடனே திட்டிடுவார். திட்டின உடனே சமாதானம் பண்ணிக்குவார். அப்ப சின்ன பொண்ணு இல்லையா. பிஸ்கட் எல்லாம் கொடுப்பார். உடனே கவலைப்படாத சொல்லி சமாதானப்படுத்துவார். காதல் மாதிரி அவருக்கு நிறைய படங்கள் பண்ணணும் என்னோட முதல் படம் அவருகூட வேலை செய்ததுக்கு ரொம்ப சந்தோஷம் பாலாஜி கலருக்கு நான் 2 கலர் கொடுக்கிறேன் அது சிவப்பு ஒண்ணு, இரண்டாவது வெள்ளை, ரெட்ன்னா பயங்கரமா கோபப்படுவார். நமக்கே ஒரு மாதிரி இருக்கும். அடுத்து வெள்ளை ஏன்னா, உடனே சமாதானம் ஆய்டுவார் அதுக்கு வெள்ளை நிறம்.

@@@

இன்னொன்னு பார்த்தீங்கன்னா தனிப்பட்ட யாருக்கும் கிடையாது. என்னோட எல்லா நண்பர்கருக்கும் தான் எனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சரி என்னோட நண்பர்கள் சப்போர்ட் பண்ணுவாங்க. எனக்கு தனியா சொல்ல தெரியலை. மோனிகா, அனிதா உள்பட பலர். நான் இன்னைக்கு கூட போன் பண்ணி ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னா, கவலைப்படாதே, எல்லாத்தையும் லேசா எடுத்துங்கங்கன்னு அட்வைஸ் பண்ணுவாங்க. நமக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பிரண்ட்ஸ் இருக்காங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வாழ்க்கை கலர்புல்லா இருக்கும். ஜாலியா இருக்கும். அதனால எல்லாருக்கும் தனிப்பட்ட கலருன்னு கிடையாது.

@ @@@@@


* உங்க வீடு அலங்காரமாகவும், அழகாகவும் இருப்பதற்கு காரணம் யார்?


என்னோட பேவரைட் கலர்ன்னு பார்த்தீங்கன்னா கருப்பு - வெள்ளை தான் பிடிக்கும். டார்க் பிரவுன் காம்பிஷனும் ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப என்னோட வீட்டுக்கு பயன்படுத்தி இருக்கிற கலர் மஞ்சள் தான். இதுதான் பின்னாடி இருக்கு. இதுல ரொம்ப பிடிச்ச கலருன்னா நீலம் நிறம்தான் ரொம்ப பிடிக்கும். இதுல மூன்று கலர் பிடிச்சிருக்கு. அடிப்படையா, ஒரு வீடு கட்டும் போது, பிடிச்ச காம்பினெஷன் என்னன்னா, வெள்ளை - பிரவுன் தான் நான் எங்கே போனாலும், வீடு வெள்ளையா இருந்தா தான் பிடிக்கும். எந்த வீட்டுக்கு போனாலும் வெளிச்சமா இருக்கணும். வீடு இருட்டா இருந்தாலே மூடு அப்செட் ஆயிடும். அதனால எந்த ஒரு கலரா இருந்தாலும், டிசைனா இருந்தாலும் வெள்ளை கலர் இருக்கணும் பர்னிச்சர் விஷயத்துல டார்க் ஷேடு இருக்கணும். அதனால டார்க் பிரவுன் இருக்கணும். வீட்டுல வரவேற்பரை முழுவதும் வெள்ளை இருந்துச்சு. அதனால் பிரவுன் பர்னிச்சர் போட்டா போதும். பொருட்கள் எதுவும் இல்லைன்னா கூட பரவாயில்லை. ரொம்ப அழகா இருக்கும். ஆனா சின்ன வீடா இருந்தா கண்டிப்பா வித்தியாசம் தேவைப்பட்டது. அப்போதான் சைடு சுவர்ல வித்தியாசமான கலர் கொடுத்தோம். வித்தியாசமான எண்ணங்கள்ல விதவிதமா போட்டோக்களை வைத்தோம். நிறைய கலர் காண்பிச்சாங்க. ஒவ்வொண்ணா வைச்சு பார்க்கும் போது, மரச்சாமான்கள், வெள்ளை, வீட்டுல பண்ணியிருக்கிற பிற வேலைபாடுகள் எல்லாத்துக்கும் பிடிக்கிற கலர் மஞ்சள்தான். மஞ்சள்ன்னா டார்க் மஞ்சள் கிடையாது. லேசான மஞ்சள் தான். இந்த வேலையை முடிக்க 2 நாட்கள் ஆயிடுச்சு. வீடு வந்து வெள்ளையும், பிரவுனா இருக்கிறதுனால சுவத்துக்கு மஞ்சள் தேர்ந்தெடுத்தோம்.

@@@

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தினமலருக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியை பார்த்திட்டு இருக்கிற தினமலர் வாசகர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இது ரொம்ப வித்தியாசமான பேட்டி. வெரி வெரி கலர்புல் பேட்டி. கண்டிப்பா இந்த வருஷம் எல்லாருக்கும் நல்ல வருஷமா இருக்கட்டும்.

@ @@@@@

நன்றி வணக்கம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in