ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி, நடிகையாக தயாராக இருக்கிறார் என, தெரிந்ததும், அவரை தமிழில் அறிமுகப்படுத்த, பெரிய போட்டா போட்டியே நடந்தது. ஆனால், "என்ட்ரியே மிரட்டலாக இருக்க வேண்டும் என, நினைத்த அவர், பாலிவுட்டின் மீது பாசம் காட்டி, "லக் என்ற படத்தின் வாயிலாக, சினிமா பிரவேசம் செய்தார் ஸ்ருதி. பின், தெலுங்கு தேசத்திற்குச் சென்ற அவர், "7ம் அறிவு மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்தார்.இந்நிலையில், ஸ்ருதிக்கு மீண்டும், இந்தியில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்தப் படத்தை, பிரபுதேவா இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற, "நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தன்டனா என்ற படத்தை, இயக்கினார். அந்தப் படம் தான், "உனக்கும் எனக்கும் என்ற பெயரில், தமிழில் வெளி வந்தது. தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும், திரிஷா ஏற்று நடித்த வேடத்தில், இந்தியில் ஸ்ருதி நடிக்கிறார்.