Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நடிகர் நாசரின் சிறப்பு பேட்டி!

28 செப், 2012 - 16:10 IST
எழுத்தின் அளவு:

  சினிமாவில் கருப்பு - வெள்ளை கலர் பரிணாம வளர்ச்சி பற்றி...?

சினிமாவில் வண்ணம், சினிமா வந்து இதுவரை தமிழகம் புரிஞ்சிக்காத ஒரு ஊடகமாக இருக்கு. சினிமாவில் முதலில் ஊமைப்படங்கள் வந்தது. அப்புறம் ஒலி சேர்த்தாங்க, வண்ணம் சேர்த்தாங்க. அப்புறம் ஒலியையே பிரிச்சு, டி.டி.எஸ்., டால்பிங்கிறாங்க. இப்ப ஒரு படம் வந்துச்சு. நேர்வாழ்க்கை எப்படி வந்து உயிரோட்டமாக ஒரு காட்சியை பார்க்கிற மாதிரி வந்துச்சு. எப்பவுமே, நமக்கும், சினிமா உருவாக்குன மேலை நாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. எப்பவுமே யதார்த்தத்தை ஒட்டியே இருக்குணும்ங்கிறது அடிப்படை நியதி. அதனால நீங்க மேலை நாடுகளை பார்த்தீங்கன்னா கருப்பு - வெள்ளை படங்கள் வண்ணத்துக்கு மாறும்போது கூட, அவங்க வந்து ஒரிஜினாலிட்டிய விட்டுக் கொடுக்கல. இயற்கையிலேயே ஒரு வீட்டுல என்ன வண்ணங்கள் உபயோகிக்கிறாங்களோ, ஒரு இயற்கை காட்சியில என்ன வண்ணங்கள் இருக்கிறதோ, அதையே தான் படங்கள்ல உபயோகிச்சாங்க. ஆனா தமிழ்ப்படங்கள்ல பார்த்தீங்கன்னா வண்ணம் அப்படிங்கிற விஷயம் சினிமாவுக்கு வந்ததுனால, தேவை இல்லாத வண்ணங்கள சேர்த்தாங்க, தேவை இல்லாத பூக்களை சேர்த்தாங்க. தேவையில்லாமல் ஹீரோக்கள் சிவப்பு சட்டை, பச்சை பேண்ட் இப்படியெல்லாம் வண்ணத்தை தப்பா பயன்படுத்திக்கிட்டாங்க. இத சொல்றதுல்ல ஒண்ணும் தவறு இல்லை. நான் முதன்முதலாக வண்ணபடமாக பார்த்தது அலிபாபாவும் 40 திருடர்களும்னு நினைக்கிறேன். சின்ன வயசுல வண்ணப்படமாக இருந்ததால அதுக்காகவே பார்க்கப் போவோம். அதுக்கப்புறம் ஆயிரத்தில் ஒருவன் வந்துச்சு. அதுக்குப் பிறகு பல படங்கள் வந்தது. இருந்தாலும் வண்ணங்களே இல்லாத கருப்பு - வெள்ளை படங்கள் தருகிற ஒரு ஆழம், இந்த வண்ணப்படங்கள் தருவதில்லை. ஏன்னா, பெரிய பெரிய கிளாசிக்கல் படம் கருப்பு - வெள்ளையாக எடுத்திருக்காங்க. சமீபகாலத்துல தான் வந்து, இந்த யதார்த்த சினிமாவ ஒட்டி எடுத்த படங்கள்லதான் வண்ணம் சரியா கையாளப்படுகிறது. ஆனா, அதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வண்ணங்கள் மிகக்குறைவாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கு.

@@@

* தங்களை வெகுவாக பாதித்த ஒளிப்பதிவாளர்கள்?

நிறங்களை அழகாக காண்பித்த ஒளிப்பதிவாளர்கள் தமிழ் சினிமாவுல அந்தளவுக்கு இல்லைன்னு தான் சொல்வேன். பாலு மகேந்திரா படங்கள்ல வந்து பச்சை அதிகமாக இருக்குன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா முறையா அவர் கத்துக்கிட்டு வந்தார்ன்னு நினைக்கிறேன். அவருக்கு கொடைக்கானல், ஊட்டி பிடிக்கிறதுன்னால பசுமை அதிகமா இருந்துச்சு. நம்ம கலர்ல வந்து, ஒரு மீடியாவ யூஸ் பண்ணி ஒரு படம் பண்ணினதா எனக்கு தெரியலை. அந்த காலத்துல மேலை நாட்டுல படம் வந்திருக்கு. ஏன்னா தமிழ் சினிமாவுல வந்து இன்னும் வண்ணத்த பற்றி நம்ம மக்களுக்கு கத்துக்கொடுக்கல. உதாரணத்துக்கு இப்ப என்ன சொல்றது, இப்ப வண்ண படங்கள் வந்த பிறகு, ஒளிப்பதிவு முறையே மாறுது. எல்லாரும், இந்த வண்ணம் இப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்கிறது, இப்ப டிஜிட்டலா மாறிடுச்சு. அப்ப வந்து கிரேடியல் முறை இருந்துச்சு. அதாவது மூன்று அடிப்படை கலர்ஸ். அந்தந்த கலர்ஸ் எந்த அடிப்படையில இருக்கணும்ங்கிறது. கிரேடியல் விடிய விடிய ஒரு மாசத்துக்கெல்லாம் நடக்கும். இப்போ அந்த கிரேடியல் பண்ணிட்டு, ஒளிப்பதிவாளருடைய ஆசைப்படி, அந்த வண்ணங்கள் அப்படியே வந்து, படம் காட்டும் போது, தெரியும் ஆனா தமிழ் சினிமாவுல வந்து, அந்த முறை முறையா பயன்படுத்துனது கிடையவே கிடையாது. நான் படம் பண்ணி ரிலீஸ் பண்ணும் போது தான் எனக்கே தெரியந்தது. என்ன பண்ணுவாங்கன்னா, நான் அவதாரம் பண்ணி ரிலீஸ் செய்யும் போது, அவுட் ஆப் சிட்டி பிரிண்ட் எல்லாம் கொஞ்சம் ப்ளீச் பண்ணி அனுப்பனும் சார்ன்னு சொன்னாங்க. நான் சொன்னேன் எதுக்கு ப்ளீச் பண்ணனும், ரெட் ரெட்டா தெரியணும். இல்ல சார் அவுட் ஆப் சிட்டி தியேட்டர்ல்லாம் கொஞ்சம் அவ்வளவா நல்லா இருக்காது. அப்ப ஏன்னு விசாரிச்சா, அப்பு புரொஜக்டர்ல 2 கார்பன் லார்டு இருக்கும். அது ரொம்ப கிட்ட இருக்கும் போது, தான் மிக அதிகமான வெள்ளை வெளிச்சம் வரும். அதனால அந்த வெள்ளை வெளிச்சம் அந்த கலர் பிரிண்ட் வழியா பார்க்கும் போது, அந்த பிம்பம் திரையில் விழும். இப்ப அந்த கார்பன மிச்சப் படுத்துறதுக்காக என்ன பண்ணுவாங்கன்னா, கார்பன் லார்ட் கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. கொஞ்சம் லேட்டா எரியும். அப்பன்னா என்னாகும்னா அங்க போய் சரியா விழாதுன்னால, இங்க ஒரு மாச கணக்குல ஒரு ஒளிப்பதிவாளரும், கிரைனும் உட்கார்ந்து பண்ற ஒரு விஷயத்த ப்ளீச் பண்ணி அங்க அனுப்புறாங்க. அப்புறம் சினிமா வந்து, முழுக்க முழுக்க 100 சதவிகித இருட்டில் பார்க்க வேண்டிய ஒன்று. எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவில் இதயம் அல்லது மூளை என்று சொல்லப்படுகிற கோடம்பாக்கத்தில் உள்ள கமலா தியேட்டரில், நான் பார்த்தது, திரையை சுற்றி சீரியல் செட் போட்டிருப்பாங்க. படத்தில் கதாநாயகனின் பாத்திரம் வரும் போது, சீரியல் எரியும். இது சினிமாவுக்கு நேர் எதிர் முரண்பாடு. இதுல வண்ணத்த பற்றி கவலைப்படுகிறதுக்கு நமக்கு என்ன இருக்கு. அதுக்காக தமிழ் சினிமாவுல வண்ணத்த பற்றி கவலைப்படக் கூடாது. அதே மாதிரி ஒப்பனை (மேக்கப்) சினிமா யதார்த்தத்தை பற்றி சொல்லும் போது, வண்ணப்படங்கள்ள, ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி அதிகமா மேக்கப் இருக்கும். கன்னத்துல ரொம்ப சிவப்பா இருக்கும். ஆனா கையில கருப்பா இருக்கும். அதனால தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக வண்ணங்கள் தவறாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன.

@@@

* தங்களின் அடிப்படை வாழ்க்கை ஆரம்பித்த செங்கல்பட்டுக்கு, என்ன வண்ணம் கொடுப்பீர்கள்?

செங்கல்பட்டுக்கு ஒரு கலர் கொடுக்கக் கூடாது, அதுக்கு கலர் கொடுக்கிறதுனா, நீலம், மண்ணை சார்ந்த வண்ணம், பச்சை இந்த மூனு தான் செங்கல்பட்டுக்கு அடையாளமாபடுகிறது. செங்கல்பட்டுக்கு நீலம், மண்ணை சார்ந்த வண்ணம் கொடுக்கிறேன்னா, செங்கல்பட்டுல வந்து நிறைய ஏரிகள் உண்டு. நாங்க படிக்கும் போது, நிறைய புளகாகிதமாக இருக்கும். ஏன்னா தமிழ்நாட்டுலேயே மிக அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டம் என்று பாடப்பத்தகத்தில் இருக்கும் ஆனா இன்னைக்கு எத்தனை ஏரிகள் இருக்கு, எத்தனை பிளாட்டுகளாக போடப்பட்டிருக்குன்னு தெரியல. ஏன்னா செங்கல்பட்டு உள்ள நுழையும் போது, பெரிய கடல் மாதிரி குளவாய் ஏரி இருக்கும். அதுதான் செங்கல்பட்டுடைய முதல் அடையாளமா இருக்கும். அதனால அதுக்கு நீலம். மண் சார்ந்த பகுதினா, செங்கல்பட்டு சின்ன சின்ன குன்றுகள் அங்கங்கே இருக்கும். நடுநடுவே குடியிருப்புகள் இருக்கும். அதுவும் நான் இருந்த நத்தம் பகுதி சிறிய மலைச்சரிவில் இருந்தது. எங்களுக்கு லீவு விட்டா மலையேறது, கலகலப் பழம் பறிக்கிறது, அதனால மண் சார்ந்த விஷயங்கள்ன்னால மண்ணுக்கான நிறம்.

பச்சைங்கிறதுக்கு கடல்போல குளவாய் ஏரி இருகுகிறதுனல, அதனுடைய வடிகால் ஒரு பச்சை கம்பளம் விரித்தாற்போல், வயல் பகுதிதான் இருக்கும். அதனால பச்சைய மறக்க முடியாது. ஆனா இன்னைக்கு ஒரு துணிகூட பச்சை கலர்ல செங்கல்பட்டுல கிடையாதுங்குறது தான் கஷ்டம். இந்த 3 வண்ணங்களும், செங்கல்பட்டுக்கு போட முடியாது தான் ரொம்ப மனவருத்தம்.

@@@


* சினிமாவின் வெற்றியை சுவாசித்ததற்கு பின்னர் அதற்கு என்ன வண்ணம் கொடுப்பீர்கள்?

உண்மைய சொல்லப் போனா, நான் சினிமாவுக்கு வந்து, கருப்பு வெள்ளையதான் கொடுப்பேன். ஏன்னா நான் சின்ன வயசுல சினிமா பார்த்தது கருப்பு - வெள்ளைல தான். ரொம்ப தொழில் முறையா நான் வந்து, திரைப்பட கல்லூரியால் படம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது கருப்பு - வெள்ளை படங்களில் இருந்து தான். சினிமா வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்துகிற போராட்டம் கருப்பாக தான் இருக்கும். அதனால சினிமாவுக்கு பச்சையோ, கோல்டு கலரோ கொடுக்க முடியாது. என்னன்னா சினிமாவுக்கு வந்த உடனேயே, உங்கள் மீது ஒரு சந்தேகப்பார்வை விழுகிறது. எப்பவுமே அவன் வெற்றிகரமான பணம் பழுக்கிற விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மைய சொல்லப்போனா நாம பல நல்ல விஷயங்களைத் தான் சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு, நான் சினிமாவுக்கு கறுப்பு- வெள்ளையும் சார்ந்த கலர்தான். அதிலும் சில சந்தோஷசங்கள் இருக்கு. அதனால சினிமாவுக்கான வண்ணமாக கருப்பு - வெள்ளையைதான் கொடுக்கிறேன்.

@@@


* கோச்சடையான் அனுபவம் எப்படி?


கோச்சடையான் உண்மையிலேயே எனக்கு கிடைச்ச பெரிய அனுபவம். ஏனென்றால் இதுவரை இந்திய சினிமாவில் யாரும் செய்யாத ஒரு விஷயம். இப்போ ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால், ரஜினிகாந்தின் ஒரு ஊருல பொம்மையை உருவாக்கினாலும், ரஜினியுடைய அங்க அசைவுகள், பேச்சு, முகபாவம் எல்லாம் வேறு ஒரு தொழில் நுட்ப முறையில் பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட ரஜினி என்கிற உருவத்தின் மேல் போர்த்துகிறார்கள். அதனால இந்த தொழில் நுட்பத்தையும் என்னால் கற்க முடிந்தது என்பது தான் சந்தோஷம். இந்த படம் அவதார் படத்தில் எடுக்கப்பட்ட அதே தொழில் நுட்பம்தான். இன்று இருக்கிற சினிமாவிலேயே, மிக அதிகப்பட்ச, உயர்வான தொழில்நுட்பம் அவதாரில் பயன்படுத்தப்பட்டது. அந்த தொழில்நுட்ப அடிப்படையில்தான் கோச்சடையான் உருவாக்கப்படுகிறது. ஆகையால், இதுவும் பிரம்மாண்டமான படமாக அமையும் என்று நம்புகின்றேன்.

@@@

* வண்ணம், எண்ணம் குறித்து தங்கள் கருத்து?

மனிதனுடைய நாகரிக வளர்ச்சியில வந்து வண்ணம், அப்படின்ற விஷயம் ரொம்ப முக்கியமானது. இப்ப சமீபத்திய ஆராய்ச்சி, வண்ணங்களை கண்டறியக்கூடிய எல்லா ஜீவராசிகளும் அந்த வண்ணத்தை முறையா பயன்படுத்துது. வண்ணம் அப்படின்றது மனுஷனுக்கு வந்து ரொம்ப ரொம்ப முக்கியம். நான் கற்காலத்தில் இருந்து, படிப்படியா வளரும்போது, அவங்க கற்கால குகைகளில் ஓவியமா வரையும் போதே, அவங்க வண்ணத்தை எப்படி இருக்கிற மாதிரி, இல்லாம வண்ணத்தை எப்படி அவன் உபயோகப்படுத்தினான்னு யோசிக்க ஆரம்பிச்ச பிறகு, புதிய ஓவியங்கள் வருது. அதுக்கப்புறம் கோவில்களில் பார்க்கிறோம். அனேகர் உடைகளில் பார்க்கிறோம். எல்லா நாகரித்திலயும், எகிப்து, நாகரிகத்தில் இருந்து, மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இருந்து தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வண்ணம் என்கிறது, ஒரு கலாச்சாரத்தோட பூர்வீகம். உதாரணத்துக்கு சைனாவ எடுத்துக்கிட்டிங்கன்னா, சைனாவுல வந்து சிவப்பு அப்படிங்கிறது, அவங்களுக்கு, கம்யூனிஸ்ட் நாடு அப்படின்னு கிடையாது. அந்த கம்யூனிசம் சிவப்போட சம்பந்தப்படக் கூடியதற்கு முன்னாலேயே, சைனாவுல வந்து பாரம்பரியமா சிவப்பு என்ற எண்ணத்தை அவங்களுடைய பெருமையா, சந்தோஷம் தரக்கூடிய விஷயமா இருக்கு. ஆனா ஐரோப்பியர்கள் வந்து, சிவப்பு நிறத்தை ஒரு அபாயமா பார்க்கிறாங்க. அதே மாதிரி ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், ஒவ்வொரு வண்ணம் வந்துட்டிருக்கு இயற்கையாகவே. உதாரணத்துக்கு குழந்தைங்க முன்னாடி விளையாடுவதற்கு பல வண்ணத்துல விளையாட்டுப் பொருட்களை போட்டிங்கன்னா, அதுக்கு பிடிச்ச கலரையே திருப்பி திருப்பி பயன்படுத்துற பார்க்கலாம். அப்புறம் வந்து அவதாரம் படத்துல கூட எண்ணங்களுக்கு ஏத்த மாதிரி வண்ணங்கள் மாறும் என்று பாட்டு அமைச்சிருந்தேன். இது உண்மை. நீங்க பார்த்தீங்கன்னா, நம்ம வந்து ஒரு சூரியன் மறையும் போது, அல்லது சூரியன் எழும்போது நம்ம உட்கார்ந்து பார்த்தோம்ன்னா, அதுல வர்ற சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறமா. மாறுறது வண்ணத்தோட விளையாட்டுத்தான்.

@@@


* சூரிய உதயத்தின் போது, வரும் ஆரஞ்சு நிறம் பற்றி...?

உண்மைய சொல்லப்போனா, சென்னைக்கு வந்தப் பிறகு, நான் சூரிய உதயத்தையே பார்க்கிறத விட்டுட்டேன். ஏன்னா அது உண்மை. சென்னையில இருக்கிற குழந்தைகளும் சரி, பெரியவங்களும் சரி, தனக்கு மேல ஒரு வானம் இருக்கு, வானத்துல நட்சத்திரம் இருக்குங்கிறதெல்லாம் பார்க்கிறதே கிடையாது. அந்த பொறுமையும், அப்படிங்கிற விஷயமே தெரியாது. நாங்க எல்லாம் செங்கல்பட்டுல இருக்கும் போது, இரவுன்னா சட்டுன்னு வானம் தெரியும். ஆனா இங்க வானத்த அன்னாந்து பார்க்கிற பொறுமையே கிடையாது. சும்மா மரபு ரீதியா சூரிய நமஸ்காரம் அப்படின்னு சாலையில வாக்கிங் போகும்போது, பார்ப்பாங்க. ஆனா அது ஒரு அழகு. அது வந்து ஒரு ஓவியம் அப்படின்னு பார்க்கப் பழகிட்டோம். வண்ணங்கள் வந்து இயற்கையிலே இறைஞ்சு கிடக்கு. பூக்கள்ல இருந்து, இலைகள்ல இருந்து இருக்கு.

@@@


* வானவில் குறித்து சிறிய வயது நினைவுகள்?

வானவில்லை பார்க்கும்போது, சின்வங்களா இருந்தாலும் சரி, பெரியவங்களா இருந்தாலும் சரி, ஒரு சின்ன குழந்தைக்கே உரிய ஆச்சரியமும், சந்தோஷமும் தான் வரும். அது எண்ணத்தை எல்லாம் தூண்டிவிடுமா என்பதெல்லாம் தெரியாது. ஒருவேளை அந்த வானவில் இருக்கும்போது, ஏதாவது நிகழ்வுகள் இருந்தால் வரலாம். ஆனா வானவில் பார்க்கிறது ஒரு சந்தோஷமான விஷயம். எனக்கு சின்ன வயசுல பார்த்த ஞாபகம் வருது. பொறுமை வரலன்னு தான் சொல்வேன். வானவில் வந்து ஒரு ஆச்சரியம் தரக்கூடிய, அது விஞ்ஞான ரீதியா கண்டறியதுக்கு முன்னாடி, பெரிய அற்புதங்கள் எல்லாம் கண்டறியப்பட்டது. ஒரு நல்ல மழைக்காலத்துல, வானவில் தோன்றிச்சுன்னா வண்டிய நிறுத்திட்டு இன்னைக்கும் நான் மட்டுமல்ல, ஜனங்களும் நின்னு ஆசை ஆசையா பார்க்கிற விஷயம். இன்னும் பலஆயிரம் ஆண்டு விஞ்ஞானம் முன்னேறினாலும் வானவில்லை ரசிக்க முடியாமல் இருக்க முடியாது. வானவில்லை பற்றி பள்ளியில் படிக்கும்போது அதைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்க முடிந்தது. எப்படி சூரிய ஒளி சிறுசிறு கதிர்களா மாறி, 7 வண்ணங்களா மாறதுன்னு படிக்கும் போது, அது ஒரு ஆச்சரியமா பட்டுச்சு. அதனால வானவில் எப்படி தோன்றுது, அது ஒரு ஆர்ச் மட்டும் கிடையாது, ரொம்ப தூரத்துல இருந்து பார்த்தா முழுவட்டமா தெரியுது என்றெல்லாம் அதப்பற்றி தெரிஞ்சுக்கும் போது ஏற்பட்ட ஒரு பிரகாரம் தான்.

@@@


* கருப்பு வண்ணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது மனிதனுடைய நிறம்தான். நீங்க உட்கார்ந்திருக்கிற ஷோபா கருப்பு, என் முடி கருப்பு, ரஜினி சார் கருப்புன்னு சொல்ற மாதிரி சந்தோஷப்படுறோம். அது அவங்க மனநிலைக்கு ஏத்தது. சில பேருக்கு கருப்பு ரொம்ப பிடிக்கும். கருப்பு - வெள்ளை என்பது இன்னைக்கு வர ஒரு வண்ணமாகவே கருதப்படவில்லை. ஒரு வண்ணத்தினுடைய அடர்த்தியான விஷயம் என்னதுன்னா கருப்புதான். ஒரு வண்ணத்துடைய நீர்த்த விஷயமா வெள்ளைய சொல்றாங்க. இருந்தாலும் கருப்பு அப்படின்றது சோகம். அப்படின்னா மனுஷனுக்கு ஏறக்குறைய உலக நாடுகளிலும் சரி,  மேலை நாடுகளிலும் சரி, சைனாவிலும் சரி எல்லாருக்கும் வந்து, நமக்கு வந்து இருட்டை பார்த்து பயப்படுகிற விஷயம் வந்து,  பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. மனோ ரீதியாகவே இருந்து வருகிறது. ஏன்னா எந்த மிருகத்துக்கும் இருட்டை பார்த்து பயம் கிடையாது. குழந்தையாக இருந்து மனித நிலைக்கு மாறும்போதுதான் நமக்கு இருட்டைப் பற்றி பயம். ஏன்னா இருட்டுக்குள்ள ஏதோ ஒளிஞ்சுக்கிட்டிருக்கோ, மற்ற மிருகங்களுக்கு இல்லாத கற்பனை வந்து மனிதனுக்கு உருவாகும்போது, அவன் கண்ணுக்கு தெரியாத எல்லா விஷயத்துக்கும் பயப்படுறான். அதனால அவனுக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. அதனால எப்போ சூரியன் வரும். சூரியன் வணங்குறான். எப்போ இடி வரும் அந்த பயத்துலதான் இருள் என்பது கருப்பாக இருப்பதால், அந்த சோகம் அல்லது உயிர் பிரிஞ்சு போய் இருட்டுல கலக்குது. அதனால சோகத்துக்கான ஒரு விஷயமா வச்சிருக்கான். ஆனா கருப்பை மிக அழகாக, இப்போ இருக்கிற ஓவியங்கள் மிக அழகாக உபயோகப்படுத்தப்படுகிறது. எந்த வண்ணத்தை பயன்படுத்தினாலும் சரி, அதை எந்த வகையில் உபயோகப்படுத்தினாலும் சரி  அது அழகு கிடையாது. ஆனா தாத்தா போட்டோ எல்லாம் கருப்பு -  வெள்ளை தான். எங்கப்பா, எம்.ஜி.ஆர். பழைய படங்கள் கருப்பு  -  வெள்ளை தான்.

ஒரு கண் பார்வையற்ற பெண் ஒரு வண்ணத்தை அதிகமாக பயன்படுத்துகின்ற, அதிகமா ஆராய்கின்ற தெருக்கூத்து கலைஞனுக்கும் இடையே ஒரு சம்பவம் நடக்கும்போது, ஒரு தெருக்கூத்து கலைஞன் எப்போதும் வண்ணத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். அவன் இந்த கலர் போட்டா இப்படி, அந்த கலர் போட்டா இப்படின்னு அவன் வாழ்வே வண்ணங்கள் தான். ஒரு கண் தெரியாத பெண் அவன்கிட்டே சரி, எப்ப பார்த்தாலும் கலர் கலர்ன்னு சொல்லிக்கிட்டிருக்கியே எப்படி இருக்கும்ன்னு அவ கேட்கிறா. ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு எப்படி வண்ணத்தை பற்றி விளக்க முடியும். அதுவும் படிப்பறிவில்லாத ஒரு இளைய மனிதன். அதனால் அவன், அவனுக்கு தெரிந்த வகையில் கோபம் வந்தா தோனுதே அத சிவப்புன்னு வச்சுக்க. உனக்கு பயம் வந்தா கருப்புன்னு வச்சுக்க. அப்படின்னு பாடம் ஆரம்பிக்க போதுதான் ஒரு பாட்டு அமைச்சது. அந்த பாட்ட வாலி அவர்கள் மிக அழகாக மனிதன் நுகருகின்ற ஒரு நல்ல விஷயத்தை வைத்து அந்த பாடலை எழுதினார். மற்றபடி  அதுக்குப் பின்னாடி வேற ஒண்ணும் கிடையாது. அந்த படத்தோட கலை இயக்குனர் தாமு. அவர் தமிழ் ஓவியத் துறையில் முக்கியமான ஒரு ஒவியர். அதுக்கப்புறம் அவர் எந்த படத்துக்கும் வேலை செய்யல. அவருடைய கைவண்ணம் தான். அப்போ இப்போ இருக்கிற டிஜிட்டல் டெக்னாலஜி எல்லாம் கிடையாது. அந்த பாட்ட எடுக்கும்போது, கேமராவ ஓடவிட்டு பெடாண்ட் பண்ணிட்டு, கேமரா ஆப் பண்ணிட்டு திரும்பவும் அடுத்த பகுதிய வரைஞ்சுட்டு அப்படியே எடுத்தோம்.

@@@


*தங்கள் வாழ்க்கையில் முக்கியமான மூன்று மனிதர்களுக்கு என்ன வண்ணம் கொடுப்பீர்கள்?

பாலச்சந்தர் அவர்களுக்கு வெள்ளை நிறத்தை கொடுப்பேன். ஏனென்றால் பாலச்சந்தர் அவர்கள் கண்முன் அந்த உருவத்தை நினைக்கும் பொழுதே, நான் நடிக்க ஆரம்பிக்கும் போதே அவருடைய வெள்ளை முடி, வெள்ளை சட்டை, வெள்ளை கால்சட்டை, வெள்ளை செருப்பு, அதுபோல அவருடைய  உள்ளமும் அதே மாதிரிதான். பாலசந்தர் அவர் பெரிய சாதனையாளர் என்பதும், பாரதிராஜா போன்ற புது இயக்குனர்கள் வரும்போது, அவருடைய திறமைக்காக கால்களில் விழுகின்றேன் என்கிற ஒரு குழந்தையை போல் சொல்கின்ற, ஒரு பணிவு மிக்க ஒரு சாதாரண மனிதராக தன்னை எப்போதும் வெளிப்படுத்துகின்ற பாலசந்தருக்கு நான் வெள்ளை கலரை கொடுக்கிறேன்.

@@@

திரு.கமலஹாசன் அவர்களுக்கு வானவில் உள்ள அத்தனை கலர்களையும் கொடுப்பேன். ஏனென்றால் கமலுக்கு ஒரு முகம் கிடையாது. அவர் நடிப்பார், ஆடுவார், பாடுவார், படம் தயாரிப்பார், படம் இயக்குவார். இன்னும் பல சினிமாவுக்கு சம்பந்தப்படாத சில விஷயங்களை செய்து கொண்டிருக்கலாம். அவருக்கு வானவில் கலரை கொடுக்கிறேன்.

@@@


இளையராஜா அவர்களுக்கு நான் மஞ்சள் நிறத்தை கொடுக்கிறேன். மஞ்சள் என்பது, தமிழர்களின் பண்பாடுகளில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் வண்ணங்களில் சிகப்பு, கருப்பு மஞ்சள் இந்த மூன்று வண்ணங்கள் தான் தமிழர்களிடம் வெளிப்படுகிற விஷயம். இதில் சிவப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு பின்னணியில் பெண்ணிற்குரிய அடையாளமாக இருக்கிறது. தமிழர்களுடைய வாழ்வில் கருமை என்பது துக்கமான விஷயமாகவே காணப்படுகிறது. ஆனா பல காரணங்களுக்காக வைக்கவில்லை. மஞ்சள் என்கின்ற விஷயம தமிழர்களுடைய ஆன்மிக விஷயமாக கருதுகிறேன். அவர்களுடைய வழிபாடுகளில் மஞ்சள் மிக மிக மென்மையான வண்ணமாக வாழ்வில் இடம் பெறுகிறது. அந்த வாழ்வியலின் ஒட்டுமொத்த உதாரணமாக இளையராஜாவை சொல்லலாம். மண் சார்ந்த இசையை கொடுத்ததால், மண் சார்ந்த விஷயங்களை சினிமாவில் புகுத்தியதால் அவருக்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறேன்.

@@@


* வாஸ்து நம்பிக்கை உண்டா?


வண்ணங்களைப் பற்றி பேசும்போது, உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு 100 - 150 வருடங்களுக்கு முன்வரை, வண்ணங்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்றால் சிவப்பாக இருக்கிற கல்லில் இருந்து, பொழந்து அதில் தண்ணீரோ, வேறு ஏதாவது திரவமோ கலந்து சிவப்பாக பயன்படுத்துவார்கள். கருமை புகை படிந்து போன விஷயத்தை, புகை மண்டிக்கிடந்த விஷயத்தை எடுத்து, அதில் மை கலந்து அல்லது எண்ணெய் கலந்து சிவப்பாக பயன்படுத்துவார்கள். எல்லா வண்ணங்களும் இயற்கையாக கிடைக்கின்ற பச்சை இலையில் இருந்து, சில காய்களில் இருந்து, சில கொட்டைகளை காய்ச்சுகிற போது, வருகிற வண்ணங்களை வைத்துதான் அவர்கள் 150 ஆண்டு காலம் வரை வண்ணங்களை பயன்படுத்தி வந்தார்கள். குறிப்பாக கட்டிடக்கலையில் உங்களுக்கு வெள்ளை சுண்ணாம்பில் கிளிஞ்சல்களை சூடுபடுத்துகின்ற வெள்ளையில் இருந்தும், மண் சார்ந்த கலர், ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு மண் ஓடு கலராக இருக்கும். நீங்க கரிசல்பட்டிக்கு போனீங்கன்னா மண் கருப்பா இருக்கும். நாகர்கோவிலுக்குப் போனீங்கன்னா மண் சிவப்பா இருக்கும். அத சுவத்துல பூசினாங்கன்னா நாகர்கோவிலில் வீடு சிவப்பா இருக்கும். இப்படி ஓடுகள் வேய்ந்த காலக்கட்டம் வரும்போது, அந்த மண்ணை சுடும்போது, இயற்கையாகவே அதற்கு சிவப்பு நிறம் வருகிறது. வெள்ளை, மண் சார்ந்த நிறம், சிவப்பு இந்த மூன்றும் தான் கட்டிடக் கலையில் அடிப்படை வண்ணங்களாக கடந்த 150 வருடங்களாக இருந்து வந்திருக்கிறது.

@@@

நன்றி!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in