Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சத்யனின் பார்வையில் வண்ணமும், எண்ணமும்...! ஒரு சிறப்பு பேட்டி!!

28 செப், 2012 - 14:17 IST
எழுத்தின் அளவு:

            வணக்கம் தினமலர் நேயர்களே...

தினமலர் பேட்டிக்காக சொல்லல... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பத்திரிகை. ஏன்னா எப்போதுமே உண்மையைத்தான் எழுதுவார்கள். நண்பன் படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம், பெரிய சக்சஸ் ஆன படமும் கூட. அந்த படத்தை பற்றிய தினமலர் விமர்சனத்தில் என்னை ரொம்ப பெருமைப்படுத்தி எழுதியிருந்தாங்க. அதுல குறிப்பாக எழுதி இருந்தது... ஹீரோவுக்கு சேலஞ்ச் விடுகிற அளவுக்கு நடிச்சிருக்கார். ஏன்னா நண்பன் படத்துல விஜய் சார், ஸ்ரீகாந்த் சார், ஜீவா சார் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாங்க. அவங்க எல்லாத்தையும் தாண்டி இவர் ஜொலிக்கிறார் என்கிற மாதிரி ஒரு பெரிய காம்ப்ளிமெண்ட் எனக்கு கிடைச்சுடுச்சு. அது எனக்கு மறக்க முடியாத விஷயம். அந்த கட்டிங்கை கோயம்புத்தூர் வீட்டுல நான் வைச்சிருக்கேன். என் பாட்டி அதை பொக்கிஷமா வைச்சிருக்காங்க. அவங்க காலையில எழுந்த உடனே தினமலர் விமர்சனத்தை படிப்பாங்க. படிச்ச உடனே சந்தோஷப்பட்டுக்குவாங்க. அதே மாதிரி இரவு தூங்கப் போகும் போதும் அதை படிப்பாங்க. ஏன்னா அவங்க பேரனை பற்றி பெருமையா வந்தது அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம், பெருமை. அதற்காக தினமலருக்கு... என்னோட மனமார்ந்த நன்றிகள்... என்று ஆரம்பித்தார் சத்யன்.

@@@

சரி இனி அவரது எண்ணங்களையும், வண்ணங்களையும் பற்றி விரிவாக விவரிக்கிறார் நீங்களே கேளுங்கள்...

* கல்லூரி வாழ்க்கை, கலர் புல்லான லைப் என்பது பொதுவாக கருத்து. தங்கள் வாழ்க்கையில் எப்படி...?


நான் படிச்சது பி.பி.ஏ., பேச்சுலர் ஆப் பிசினஸ் மேனேஜ்மெண்ட். அதுமட்டும் தான் எனக்கு தெரியும். வேற எதுவும் தெரியாது. அதைப்பற்றி எதுவும் கேட்காதீங்க, இதையே மனப்பாடம் பண்ணி பண்ணி படிக்க பல வருஷம் ஆனது. பி.பி.ஏ.வையே தப்புதப்பா சொல்லுவேன். ‌ரொம்பநாள் கழிச்சு தான் பி.பி.ஏ.,ன்னா பேச்சுலர் ஆப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் என்றே தெரியும். அதுவும் டிகிரி முடிக்கும்போது தான் தெரிஞ்தது. கல்லூரியில் நான் கவனித்த விஷயம் கலர்கள் தான். நான் படிச்ச காலேஜ் பிரின்ஸ்பாலுக்கு என்ன கோபமோ தெரியல, எங்க கிளாசுல நாளே நாள் பொண்ணுங்கதான். நாங்க 57 பசங்க. சரி என்ன பண்றதுன்னு அஜஸ்ட் பண்ணி கல்லூரி வாழ்க்கையை நகர்த்தினோம்.

அழகுக்கும் நிறத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் வெள்ளை நிறம் மட்டும் உடனே மனசை கேட்ச் பண்ணிடும். அப்படி எங்க கல்லூரியிலும் கேட்ச் ஆச்சு. ஆனால் அவங்களுக்கு நாங்க கேட்ச் ஆ‌னோமான்னு தெரியல. இன்னிக்கு ஷூட்டிங்குல எத்தனையோ வெள்ளை நிற பெண்களை பார்க்கிறேன். ஆனால் காலேஜ் லைப்ல பார்த்த வெள்ளைக்கான மவுசு இப்பல்ல. தினமும் ஷூட்டிங்கில் மற்ற ஆர்ட்டிஸ்ட் கூட நடிச்சு நடிச்சு சலித்து போச்சு. எனக்கு எல்லா விஷயத்திலேயும் வெள்ளை நிறத்தோட தொடர்பு உண்டு. ஏன்னா எனக்கு பிடிச்ச கலரும் வெள்ளை தான். அதுக்காக எல்லா இடத்துக்கும் வெள்ளை நிற டிரஸ் போட்டு கொண்டு போக முடியாது. அந்தளவுக்கு வயசும் ஆகல. அதனால கலர் டிரஸ் போட்டுத்தான் போறேன். தலைமுடி மட்டும் வெள்ளையாகமல் கடவுள் பார்த்து கொண்டால் சரிதான்.

@@@

* உங்கள் முதல் படம் பற்றிய அனுபவம்?

என்னோட சினிமா கேரியர் ஆரம்பிச்சது ஹீரோவா. இரண்டு படம் பண்ணேன். இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் இரண்டும் ஓடல. அதுக்கடுத்து காமெடியனா நடிச்சேன். ரஜினி சார் சொன்ன மாதிரி நீ விரும்புகிற பெண்ணை கட்டிகிறதை விட, உன்னை விரும்புகிற பெண்ணை கட்டிகிட்டா வாழ்க்கை பிரகாசமா இருக்குங்ற மாதிரி, நமக்கு பிடிச்சதை நடிக்கிறதை விட, மக்களுக்கு பிடிக்கிற மாதிரி நடிச்சா தான் சினிமாவுல நிலைச்சு நிற்க முடியும் என்று முடிவு பண்ணி காமெடி பண்ண ஆரம்பிச்சேன். மக்களுக்கும் ரொம்ப பிடிச்சது. நிறைய படங்கள் வந்து நமக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துச்சு... சிவா மனசுல சக்தி, கஜினி, மகா நடிகன், சந்தோஷ் சுப்ரமணியம், வேட்டைக்காரன் என்று நிறைய படங்கள். எல்லாமே காமெடி ரோல்தான்.

ஹீரோ அப்படியிங்கிறதுல நிறைய விஷயங்கள் இருக்கு. ஹீரோயின் என்பது தனி கலர். காமெடியன் அது வேற. நான் ஹீரோவாக நடிச்சு, காமெடியனா வந்ததுனால சொல்லல. காமெடி பண்றது தான் மிகப்பெரிய கஷ்டம். சினிமாவுல வந்து பல பரிணாமங்கள் இருக்கு. வில்லன், டான்ஸ், பைட், ஹீரோ ஜொலிக்கிற ஆக்ரோஷமான, வில்லன், மெண்டலி, பிசிக்கலான சேலஞ்சிங்கா நடிக்கிறதுன்னு நிறைய விஷயங்கள் இருக்கு. காமெடியில ஒருத்தற சிரிக்க வைக்கிறது கஷ்டம்.

டான்ஸ் அப்படித்தான் நல்ல கோரியோகிராபர், நல்ல கலர்கள் பின்னாடி நின்னா,  முன்னாடி நிக்கிறவங்க தப்பிச்சிக்கலாம். பைட்டுக்கு அதே மாதிரி டூப்- கீப் போட்டு பண்ணிக்கலாம். காமெடிக்கெல்லாம் டூட் போட முடியாது. நீங்க கரெக்ட் டைமிங்கல, கரெக்டா எக்ஸ்பிரஸ்சன் கொடுக்கணும். இப்ப நண்பன்ல வந்த ஸ்டேஜ் சீன், கிளைமாக்ஸ் இதெல்லாம் பயங்கரமா ரசிச்சாங்க. அதுகென்ன ஒரே காரணம்னா கரெக்டா டயலாக்க டெலிவரி, பண்ணும், எக்ஸ்பிரசன் பண்ணனும், செந்தில் நீதான விட்டே. அப்படின்னு அந்த பாம் மேட்டர்லாம் ஒரு சாதாரண டயலாக் தான். பட் நம்ம சொல்ற விதம் தான்.

காமெடி என்கிறது மிகப்பெரிய கஷ்டம். ஹீரோ அப்படின்னு பார்த்தீங்கன்னா, ஹீரோவுக்கு, பலவிதமான டான்ஸ் பண்ணும், பைட் பண்ணனும் நிறைய கஷ்டம்தான். அதனால் வர்ணம் அப்படின்னு பார்த்தீங்களா இரண்டுக்கும் ஒரே கலர் தான். ஏன்னா ஹீரோவுக்கும் அவங்களுக்கான கஷ்டம் இருக்கு. வில்லன் எல்லாம் அதுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு. அதனால இரண்டும் கொடுக்கிற கலர் சிகப்பு கலர் தான். நல்லா பண்ணா வெள்ளை. நல்லா பண்ணலைன்னா சிகப்பு. என்ன காமெடி ஹீரோவா சில படங்கள்ல கேட்டிருக்காங்க. அதுவும், பாண்டியராஜ் சார், பாக்கியராஜ் சார் மாதிரி ஒரு பேட்டன்ல.... சில கதைகள் கேட்டு இருக்காங்க.. விரைவில் அறிவிப்பு  வரும். அதனால காமெடி ஹீரோவா பண்றது இன்னும் கஷ்டம். சோ நல்ல படியா நடிக்கணும். அதனால இரண்டுக்கும் கொடுக்கிற கலர் வந்து, நல்லா பண்ணா வெள்ளை. நல்ல பண்ணலைன்னா சிகப்பு.

@@@

* கொங்கு தமிழ் பேச்சு - உங்களுக்கு சிறப்பு அதற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி?

ஏன்னுங்கண்ணா அது தான் கோவை தமிழோட பேச்சு வழக்கு. எனக்கு வந்து சார் இயற்கையிலேயே இருக்கு. ஏன்னா கோயம்புத்தூர்தான் சொந்த ஊரு. படிச்சது எல்லாமே... கோயம்பத்தூர் தான். அதனால அந்த பேச்சு விட்டுப் போகாது. இன்னொன்னு என்னன்னா நமக்கு பிடிச்ச விஷயங்கள் என்னைக்குமே மறக்காது. இப்ப எத்தனையோ சினிமாக்கள் பார்த்து இருப்பீங்க. அதுல பிடிச்ச படம், பிடிச்ச சீன் எது என்று கேட்டால் 50 வருஷம் கழிச்சு கேட்டால் கூட அதைத்தான் தெரியும். இப்ப பார்த்தீங்கண்ணா கர்ணன் படம் பிய்ச்சிட்டு ஓடுது. அது போல தான் பிடிச்ச விஷயம் மனசுக்குள்ள அப்படியே நிற்கும். எனக்கு வந்து கோயம்புத்தூர் ஸ்லாங்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால மனசுல அப்படியே நிக்குது.

ஒருத்தரோட ஒரிஜினாலிட்டி தான் எப்பவும் அழகு, அதை மாற்றுவது தப்பு. இப்ப வடிவேல் சார் வந்து, இவ்வளவு பெரிசா ஹிட்டானதற்கு என்னான்னா, அது மதுரை ஸ்லாங்குல, வந்தாய்ங்க, போனாய்ங்க அது தான். அவரை மாற்றி கோயம்புத்தூர் ஸ்லாங்குல பேச சொல்லி இருந்தாலோ, மெட்ராஸ் பாஷையில் பேச சொல்லி இருந்தாலோ ஹிட்டாகி இருக்காது. சில டைரக்டர்கள் வந்து, மாற்ற சொல்லி சொல்லுவாங்க. மற்றபடி எல்லா இடத்திலேயும் என்னோட ஒரிஜினாலட்டி வரும். என்னைக்குமே கொங்கு தமிழோட அழகே அழகு தான். கோயம்புத்தூர் ஸ்லாங்கு வாழ்கண்ணோ!

@@@

* உங்கள் மனம் கவர்ந்த காமெடி நடிகர்கள் பற்றி? குறிப்பாக கவுண்டமணி சார் பற்றி?

எனக்கு ரொம்ப பெருமையான விஷயம் என்னன்னா கோயம்புத்தூர்ல இருந்து பெரிய, எத்தனையோ நடிகர்கள் சக்சஸ் ஆகி இருக்காங்க. ஹீரோவா, காமெடியனா, சுந்தராஜன் சார், நாகேஷ் சார் ஆகட்டும் ஏன் கே.பி.சுந்தராம்பாள் எவ்வளவு பெரிய பாடகி அவங்களும் கோயம்புத்தூர் தான். அப்புறம் கவுண்டமணி சார்ன்னு நிறைய பேர் கோயம்புத்தூர் சைடுல இருந்து சக்சஸ் ஆகியிருக்காங்க. அதுல குறிப்பா சொல்றதுன்னா கவுண்டமணி சார். ஏன்னா அந்த ஸ்லாங்கு மாறாம, அந்த கோவை ஸ்டைலிலேயே அடிச்சி கிளப்புனது தான். அவர் எந்த படத்துலேயும் ஸ்லாங் மாத்தி பேசினது கிடையாது. வால்டர் வெற்றிவேல் படத்துல ஹீரோ கோவை ஸ்லாங்கு பேச முடியாது. ஆனால் கவுண்டமணி சார் அந்த ஸ்லாங் மாறாமல் அப்படியே பேசினார். அடகொன்னியா, ஒக்காமக்கா இதுலாம் வந்து கோயம்புத்தூர் ஸ்லாங். அதாவது என்னவென்றே புரியாது. சட்டென்று சிரிப்பு வந்துவிடும். அடங்கொன்னியான்னு சொன்னால் டபார்ன்னு சிரிச்சிடுவாங்க. அடங்கொன்னியா அப்படின்னா என்ன சென்சார் காரங்களே கன்பியூஸ் ஆகிவிடுவாங்க. இது என்ன கெட்டவார்த்தையா? இல்ல சார் கொன்னியான்னா சும்மா ஜாலியா பேசுறது. சின்ன சின்ன விஷயங்கங்களுக்கு கூட கோயமபுத்தூர் ஸ்டைல் யூஸ் பண்றது கவுண்டமணி சார் தான். அடங்கொன்னியாங்குற தெல்லாம் அவர் தான் யூஸ் பண்ணினாரு. சோ, இன்னைக்கு வரைக்கும் கவுண்டமணி சாரை ரசிக்கிறதுக்கு காரணம் என்னன்னா அந்த கோயம்புத்தூர் ஸ்லாங் அப்படியே இன்னைக்கு வரைக்கும் மாறாமல் யூஸ் பண்ணினார்.

@@@

* உங்களுக்கு மிகவும் பிடித்த பெயர் வாங்கித் கொடுத்த படங்களைப் பற்றி...

எனக்கு பெயர் வாங்கித் தந்த படங்கள் ஏற்கனவே சொன்னது தான்... கஜினி, சிவா மனசுல சக்தி, ரௌத்திரம் போன்றவைகள். அதிலும் கஜினி ஏற்கனவே ரொம்ப பேமஸ். ஹாய் ஐ எம் சஞ்சய் ராமசாமி. மகா நடிகன் படத்துல குழந்தையே நீங்க தான். இதெல்லாம் பஞ்ச் மாதிரி ஆச்சு. ரௌத்திரம் படத்தை பார்த்தீங்கன்னா, உங்க பெயரென்ன பி.ராமானுஜம். அப்படின்னதும் பெரிய  டெரர் மாதிரி. ஆனா சுத்த பேடி அவன். ஹீரோகிட்டே சொல்வான். நாங்கெல்லாம் அந்த காலத்துல ரொம்ப டெரர்தான். நாங்கெல்லாம் காலேஜ் போனா கண்ணெல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு, நாங்க 10 பாய்ஸ் போய் கெட்ட வார்த்தையிலே திட்டிட்டு திரும்ப வந்திருவோம். ரெளத்திரம் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகலைன்னா கூட காமெடி பெரிய ஹிட். அதுக்கு ரொம்ப பெருமை. அதுக்கு டைரக்டர் கோகுல் சாருக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்.

அடுத்து எனக்கு ‌பெயர் பெற்று தந்த இன்னொரு படம் எஸ்.எம்.எஸ். டைரக்டர் ராஜேஷ்.எம் பண்ணின படம். ராஜேஷ் சார் படம் பண்ணும் போது, வேட்டைக்காரன் படம் பண்ணிட்டிருந்தேன். சார் சின்ன ரோலா இருக்கேன்னு சொன்னேன். இல்ல சீன்ஸ் கேளுங்கன்னார். சீன் ரொம்ப ஹீயூமர் சென்ஸா இருந்திருச்சி. எப்படி எடுப்பார்ன்னு இருந்திச்சு. ஏன்னா அவரோட பஸ்ட் படம். ஆனா அதுவும் ஹிட் ஆயிடுச்சு. நான் பார்ல உட்கார்ந்திருப்பேன். ஒரு மினி பீர் வச்சிட்டு உட்கார்ந்திருப்பேன். ஏதோ பெரிய குடிகாரன் மாதிரி பீல் பண்ணுவேன். ஆனா மினி பீர்தான்.  அத குடிக்கிறதுக்கு பெரிய போரட்டம் நடக்கும். அந்த சீன்ல பார்த்தீங்கன்னா கடைசி வரைக்கும் நான் அந்த பீரை குடிக்க முடியல. அதுக்கே ரொம்ப பீல் பண்ற மாதிரி நடிச்சிருப்பேன்.

அதே மாதிரி ரிஜிஸ்டர் ஆபீஸ் சீன்ல கூட ரொம்ப பெரிசா பில்டப் பண்ணுவேன். அந்த வில்லன்கள் எல்லாம் கல்யாணத்தப்ப உள்ளே வந்துருவாங்க. அப்ப ஜீவா அடிக்கப் போவார். உடனே தடுத்துட்டு, சிங்கம் சிங்களாத்தான் போகணும்ன்னு சொல்லி, ரவுடி கிட்ட போய் காலர் பின்னாடி கையை தூக்குவேன். உடனே வில்லன்கள் பயந்து போய் பின்னாடி போவாங்க. ரோஸ் பூவை எடுத்து புஸ்சுன்னு ஊதுவேன். ரவுடி முறைச்ச உடனே இது டம்மி பீஸ்ன்னு தலையிலேயே அடிப்பார். அழுதுகிட்டு ஜீவா கிட்ட போவேன். எதுக்குடா போனேன்னு ஜீவா கேட்பார். அந்த இன்னொசென்ட் சீன ராஜேஷ் சார் ரொம்ப அழகா எடுத்திருந்தார். அவருக்கும் என்னோட பெரிய நன்றி. ஏன்னா என்னோட கேரியர்ல எஸ்.எம்.எஸ் ரொம்ப பெயர் வாங்கித் தந்த படம்.



@ @@@@@

* உங்க சினிமா அனுபவத்தில் உங்களுக்கு பிடித்த மிகவும் கலர் புல் கதாநாயகி யார்?

இது ஒரு போட்டிதான். எப்படின்னா அதிகம் பேர் இருக்காங்க. சோ குறிப்பா வந்து ஒருத்தர சொல்லணும்னா எனக்கு ஜோதிகா ரொம்ப பிடிக்கும். ஏன்னா நீங்க மாயாவி படம் பார்த்திருப்பீங்க. இரண்டு விஷயத்துல ஜோதிகா மேடம் பிடிக்கும். ஒண்ணு நடிப்பு, இரண்டு அவங்களோட அழகு. யதார்த்தமான நடிப்பு குஷியில பார்த்திருப்பீங்க... அற்புதமா பண்ணிருப்பாங்க. மாயாவில இவ்வளவு தூரம் அவங்கள கேவலப்படுத்தி இருக்க முடியாது. உங்க படம் பார்க்கப் போனா குவாட்டர் அடிச்சுட்டு  தூங்கிருவேன்.  சிம்ரன் போஸ்டர 3 மணிநேரம் பார்ப்பேன். நீங்க ரொம்ப ஓவர் ஆக்டிங். நீங்க குடுத்த காசுக்கு மேல நடிக்கிறீங்க அப்படியெல்லாம்... அப்போ அவங்க  பீக்ல இருக்கும் போது. ஏன்னா  சிம்ரன் - ஜோதிகா இரண்டு பேரும் சமமான இடத்துல இருந்தாங்க. அப்படி இருக்கும் போது ஒரு ஹீரோயின கம்பேர் பண்ணி திட்டுறதுக்கு பெருந்தன்மையா சிரிச்சுக்கிட்டு ஒத்துக்கிடட்டாங்க. நான் பேசுற டயலாக் எல்லாத்தையும் சிரிச்சி என்ஜாய் பண்ணினாங்க. அதுக்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அதோட அவங்க கேரக்டர் வாய்ஸ் பிடிச்சிருந்தது. அதே மாதிரி அவங்க நடிப்பு பார்த்தீங்கன்னா, குஷியும் பார்க்க முடியும், சந்திரமுகியும் பார்க்க முடியும்.

@@@

* உங்கள் மனைவியுடன் உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது?

அதாவது ஒரு கத்தியை நல்லதுக்கும் யூஸ் பண்ணலாம், கெட்டதுக்கும் யூஸ் பண்ணலாம். எவனோ கடன்காரன் வாரான் அவன துரத்துறதுக்கு கத்தி யூஸ் பண்ணலாம். திருடன் உள்ள வந்தா சடக்குன்னு ஒரு ஏத்தவும் ஏத்திடலாம். நாம திங்குறோம் பாருங்க சோறு, அதுக்கு காய்கறி நறுக்கிறது கத்தி தான். நீங்க லைப்ப எப்படி யூஸ் பண்றிங்கன்னு  பொறுத்து தான். என் வாழ்க்கைக்கு நல்ல கத்தி தான். காய்கறி நறுக்கிறதுக்கு மாதிரி நல்ல விஷயத்துக்குத் தான் பயன்படுது. நீங்க எப்படி கல்யாண வாழ்க்கையை கொண்டு போறீங்கன்னு பொருத்துத்தான். என் மனைவி பெயர் சங்கீதா. அவங்க ஊர் பொள்ளாச்சி பக்கம் வேட்டைக்காரன்புதூர் தான். சின்னகவுண்டர், எஜமான், தேவர்மகன் போன்ற பெரிய படங்கள் எடுத்த ஊரு. அவங்க கிராமத்துல வாழ்ந்தாலும், சிட்டிக்கு சீக்கிரமா மாறிட்டாங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. அப்புறம் சென்னையோட பியூட்டின்னு ஒண்ணு இருக்குங்களா? மால்ஸ், சத்யம் தியேட்டர், பீச் இதெல்லாம் அங்க கிடையாது. அதனால ரொம்ப பிடிச்சிருச்சு. இந்த க்ளைமேட்  ஒண்ணு தான். அந்த 2 மாதம், ஏன்னா அவங்க ஊர்ல எப்பவும் ஜில்லுன்னு காத்துவரும். க்ளைமேட் ரொம்ப சூப்பரா இருக்கும். சென்னையில கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க. இப்ப சந்தோஷமா போய்க்கிட்டுருக்கு.

@ @@@@@

* உங்களுக்கு பிடித்த வண்ணம்?

வண்ணம், எனக்கு ரொம்ப பிடித்தது வெள்ளைதான். ஏன்னா எல்லா நல்ல விஷயங்களுக்கும் வரக் கூடியது வெள்ளை தான். சமாதானத்துக்கு, எல்லாத்துக்குமே வெள்ளை தான். அதே மாதிரி ஹீரோயின்களும் வெள்ளைதான். நாயகி வெள்ளையா இருந்தா தான் படம் பார்க்கும் போது அது ஒரு கிக்கா இருக்கும். எனக்கும் வெள்ளைக்கும் ஏன் அதிக தொடர்புனா, எனக்கு எங்கப்பா ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தவறிவிட்டார். ரொம்ப வருத்தமான விஷயம். அவர் எப்பவுமே வெள்ளையா தான் இருப்பார். அவர் வீட்டிலே இருந்தாலும், வெள்ளை பனியன், லுங்கிதான் போட்டிருப்பார். வெள்ளையை பார்க்கும் போது ஒரு பெரிய மதிப்பு வரும். அதனால மனசுக்கு பெரிய சந்தோஷம் இருக்கும். நரைச்ச முடியை பார்த்தீங்கன்னா, எல்லாரும் டை அடிச்சுக்கிறாங்க. வயதாக வயதாக நரைச்ச முடி தான் அந்த வயதிற்கே அழகு. நரைச்ச முடி பெரியவரை பார்த்தீங்கனாலே அவர்கள் மீது மதிப்பு வரும். வயசு 60, 70 இருக்கும். ஆனா மீசைக்கெல்லாம் டை அடிச்சிருப்பார். முடிக்கு டை அடிச்சிருப்பார். எங்களுக்கெல்லாம் நரைச்ச முடி வரக்கூடாது. எங்களுக்கு வந்தா டை அடிச்சுதான் ஆகணும். ஆனா என்னோட வாழ்க்கையில தொடரப் போவது என்னோட அப்பா. அதனால அவரை வெள்ளையிலே பார்த்து, பார்த்து பழகிப்போச்சு. அதனால எனக்கு பிடிச்ச வண்ணம் வெள்ளை.

@@@

* வானவில் பற்றி உங்கள் அனுபவம், கருத்து என்ன?

என்னோட ஊர் மாதம்பட்டி. நான் பக்கா கிராமத்தான். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் விவசாயக் குடும்பம். நாங்க விவசாயிகள் தான். அதனால அதிகபட்சம் விடுமுறைன்னா காடு மேடுல சுத்தறது தான் எங்களுக்கு வேலை. ஆனா இன்னைக்கு பார்த்தீங்கன்னா டிவி, இன்டர்நெட், மொபைல்ன்னு வந்துடுச்சு. நாங்க சிறுவயசுல ஓடி ஆடி விளையாடி, பட்டாம் பூச்சி, தட்டாம்பூச்சி பிடிக்கிறது, எல்லாம் ரொம்ப ஜாலியாக இருக்கும். அப்போ எனக்கு 10 வயது இருக்கும் போது தான் முதன்முதலாக வானவில் பார்த்தேன். சோளக்காடு பின்னாடி பெரிசா வானவில் தெரிஞ்சுது. அதை பார்த்து பிரமிச்சு நின்னேன். அதை பார்த்த உடனே மனசு லேசாகிடும். குறிப்பா எத்தனை பெரிய மனுஷனா இருந்தாலும் வானவில்ல நின்னு ரசித்து பார்த்துட்டுத்தான் போவான்.  அதை ரசிக்கலைன்னா அவன் மனுஷனே இல்லை.

@@@

* மறக்க முடியாத மனிதர்கள் - அவர்களுக்கு என்ன நிறம் கொடுப்பீர்களா?

என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் என்னோட அப்பா மாதம்பட்டி சிவக்குமார், இன்னொருவர் எனது குருநாதர் ஷங்கர் சார். இவர்களுக்கு ஒரு கலர் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

* அப்பாவுக்கு பச்சைக்கொடி - ஏன்னா ஒரு ரயிலுக்கு தொடக்கமே பச்சை கொடிதான். என்னோட சினிமா பயணத்தை தைரியமாகவும், நம்பிக்கையாகவும் ஆரம்பித்து வைத்தது அப்பா தான். என்னோட பயணத்தை ஆரம்பிச்சு வைத்தது அப்பா. அவருக்கு என் நன்றிகள்.

@@@

* ஷங்கர் சார்: எனக்குள்ள இருக்கிற நடிப்பு திறமையை கொண்டு வந்தவர். அவர் என்னிடம் சத்யன், உனக்குள்ள சென்ஸ் ஆப் ஹீயூமர், டேலண்ட்டே வேற. நீ எங்கேயோ போகப் போறன்னும், உனக்கு வானமே எல்லை, அப்படின்னு சொல்லி அதை உண்மை ஆக்கியவர் ஷங்கர் சார் தான். அவருக்கு நான் கொடுக்கும் நிறம் ஊதா. கி.மு., கி.பி.  மாதிரி என்னுடைய வாழ்க்கையிலும் ந.மு., ந.பி., அதாவது நண்பனுக்கு முன், நண்பனுக்கு பின். நண்பன் படம் சத்யனை மொத்தமா மாத்திடுச்சு. இன்னைக்கு படத்தில் என்னோட பெயரை போட்டா கை தட்டுறாங்க. சத்யன் இருந்தால் ஒரு பிசினஸ் இருக்கும், அப்படிங்கற ரேஞ்சுக்கு கொண்டு வந்துவிட்ட ஷங்கர் சாருக்கு என்னைக்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

@ @@@@@


* உங்கள் இல்லத்தில் பொக்கிஷமாக கருதும் பொருள் என்ன?

என்னடா இந்த கப் வச்சுக்கிட்டு ரொம்ப படம் போடுறானேன்னு நீங்க நினைக்க வேண்டாம். பிஸ்டல் கிளாசா, இல்ல ஒரு சாதாரண கப் தான். இல்ல டீ கடையில இருந்து திருடிட்டு வந்துட்டானான்னு மாதிரி நீங்க நினைக்கலாம். இந்த வீட்டுல இருக்கிற ஷோபாவோ, லைட்டோ, பவுண்டனோ என எவ்வளவோ பொருட்கள் இருக்கலாம். ஆனால் இந்த கப்புக்கு இருக்கிற மதிப்பே வேற. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த கப்பை மட்டும் தரமாட்டேன். இந்த கப் மட்டும் வீட்டில் காணாமல் போய்விட்டால் பெரிய ரணகளமே ஆகிவிடும். அப்படி என்ன இந்த கப்பில் விஷேசம் என்கிறீர்களா...?  இளையராஜா சார் எங்க வீட்டுக்கு வந்தப்ப இந்த கப்ல தான் காபி குடிச்சார். அதுக்கப்புறம் நானே அந்த கப்பை கழுவி பத்திரப்படுத்தி, அவர் எப்ப வந்தார்ன்னு தேதி எல்லாம் எழுதி வைச்சுரு‌க்கேன். அவர் எங்க வீட்டுக்கு வந்தது மிகப்பெரிய பெருமை.

@ @@@@@

தினமலர் நேயர்களுக்கு, எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஏன்னா இவ்வளவு நேரம் என்னுடைய பேட்டியை பொறுமையாகவும், சந்தோஷமாக கேட்டதற்கு. வண்ணம் அப்படின்ற நிகழ்ச்சி ஒரு அருமையான நிகழ்ச்சி. இந்த கான்செப்ட் யாருக்கு தோணுச்சோ அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். ஏன்னா வண்ணம் இல்லாத மனுஷனே கிடையாது. எல்லோருக்கும் வண்ணம் இருக்கும். வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. உங்களுக்குள் இருக்கிற வண்ணம் நமக்கு தெரியாது. வானவில் பார்த்தால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்குதோ, அந்த மாதிரி, இந்த நிகழ்ச்சியை சந்தோஷமா பார்க்கணும்னு கேட்டுக்கிறேன்.

மீண்டும் தினமலர் நேயர்களுக்கு வண்ணம் நிகழ்ச்சி மூலமா சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். உங்கள பார்த்ததுல எனக்கு ரொம்ப பெருமை... சந்தோஷம்... நீங்களும் அதே மாதிரி சந்தோஷமா இருக்க கேட்டுக் கொள்கிறேன். கடவுள் அருளால இன்னும் நான் மேலும் வளரனும்னு வேண்டிக்குங்க நன்றி வணக்கம்!

@@@

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! இந்தியாவில் தேர்தல் திருவிழா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in