காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்! | பிரகாஷ்ராஜின் விவசாயி கனவு! | தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி-2 ? | திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபாஷா பாசு | ஹாலிவுட் படம் இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | விரைவில் திலோன் ரேஞ்சர் | தமிழில் பேசி பழகலாமே ; தீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜய்யுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் |
பரத்பாலா இயக்கும், "மரியான் படத்தில் நடித்துக்கொண்டே, "ராஞ்சா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு, தனுஷுக்கு மிக பிடித்தமான, காசியில் நடைபெறுகிறது. அதனால், மிகுந்த உற்சாகத்துடன் நடித்து வருவதாக சொல்லும் தனுஷ், "காசியின் எழிலும், சூழலும், கண்களுக்கும், மனதுக்கும் இதமாக உள்ளது. அதோடு, இயக்குனர் ஆனந்த், நாயகி சோனம் கபூர் ஆகியோரின் ஒத்துழைப்பு, படத்தின் மீதுள்ள ஈடுபாட்டை அதிகப்படுத்துகிறது என்கிறார். குறிப்பாக, "இந்தி சினிமாவைப் பொறுத்தவரை, நான் புதுமுக நடிகர் தான் என்றாலும், அங்கு பிரபல நடிகையான சோனம் கபூர், என்னுடன் இயல்பாக பழகுகிறார். நான் வரும் முன்பே, ஸ்பாட்டில் ஆஜராகி, ஆச்சர்யப்படுத்துகிறார் என, சோனம் கபூரை பெருமையாக சொல்கிறார் தனுஷ்.