பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
குளோபல் என்டர்டெயினர் பேனரில், இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது, "கவர் ஸ்டோரி என்ற இந்தி திரைப்படம். ஜாக்கி ஷெராப், ஷீனா நாயர், பாப்பி சங்தானி உள்ளிட்டோர் நடித்துள்ள, இந்த படத்தை இயக்கியிருப்பவர் லாரன்ஸ் போஸ்ட்மா. ஷமீர் டான்டன், மொன்டி சர்மா ஆகியோர் இசையமைக்க, உதய் திவாரி ஒளிப்பதிவை கவனிக்கிறார். த்ரில்லரும், ஆக்ஷனும் கலந்த கதைகளத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில், பிரபலமான பத்திரிகையாளராக நடிக்கிறார் ஜாக்கி ஷெராப். பிரபல நடிகையாக ஷீனா நாயர் நடிக்கிறார். பத்திரிகையாளரான ஜாக்கி ஷெராப், நடிகையான ஷீனா நாயரை, பேட்டி எடுக்கப் போகிறார். அப்போது ஏற்படும் பரபரப்பான சம்பவங்களும், விறு விறுப்பான திருப்பங்களும், ரசிகர்களை நாற்காலியின் விளிம்பிற்கு கொண்டு வரும் வகையில், படமாக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் கூறுகின்றனர்.