ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்ற பின்னணியுடன், பாலிவுட்டுக்குள் அடி எடுத்து வைத்தவர், பிரனிதி சோப்ரா. மனிஷ் சர்மாவின் "லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் என்ற படத்தில் அறிமுகமானார். ஆரம்பம் என்னவோ, அமர்க்களமாகத் தான் இருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகை விருது, இவருக்கு கிடைத்தது. பாராட்டுகளும் குவிந்தன. பாலிவுட்டின் அடுத்த நம்பர்-1, பிரனிதி தான் என, பேச்சும் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், பெரிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க, ஒப்பந்தமானார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. இவரை புக் செய்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொருவராக, தங்கள் படங்களில் இருந்து பிரனிதியை கழற்றி விட்டு விட்டு, வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்யத் துவங்கி விட்டனர். தற்போது இவரது கைவசம், எந்த படமும் இல்லாமல், வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார். அவரிடம் கேட்டால், "எனக்கு படங்கள் இல்லை என, யார் கூறியது. ஹாலிவுட்டிலிருந்து கூட, எனக்கு அழைப்பு வந்துள்ளது. விரைவில், பெரிய நடிகையாகி விடுவேன்என, அள்ளி விடுகிறார்.