விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஹீரோக்களுடன், மரத்தை சுற்றி, டூயட் பாடிக் கொண்டிருந்த கத்ரினா கயீப்பின் இமேஜை, சமீபத்தில் வெளியான "ஏக் தா டைகர் திரைப்படம், ஒட்டு மொத்தமாக மாற்றி விட்டது. இந்த படத்தில், எதிரிகளை பந்தாடும், அதிரடியான சண்டை காட்சிகளில் கத்ரினா, தூள் கிளப்பியுள்ளதால், "அழகான கத்ரினாவுக்குள், இப்படி ஒரு ஆக்ஷன் அவதாரமா என, பாலிவுட் ரசிகர்கள், ஆச்சர்யத்தில், வாய் பிளக்கின்றனர். இதனால், கத்ரினாவை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள், சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், கதைகளை, அவரிடம் கூறத் துவங்கியுள்ளனர். விளம்பர படத்துக்காக, கத்ரினாவை, ஒப்பந்தம் செய்திருந்த ஒரு நிறுவனம், அதில் இடம் பெறும் காட்சிகளை, சண்டை காட்சிகள் இடம் பெறுவதைப் போல், மாற்றி, படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த விளம்பர படத்துக்காக, ஏற்கனவே கத்ரீனாவுக்கு கொடுப்பதாக அளித்த தொகையை உயர்த்தி, ஏழு கோடி ரூபாய் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். "ஏக்தா டைகர்
படத்தின் புண்ணியத்தால், கத்ரீனா வீட்டில் உள்ள பீரோக்கள், நிரம்பி விடும் போல் தெரிகிறது.