ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அனுராக் காஷ்யப்பின்,"தேவ்-டி மற்றும் ராம்கோபால் வர்மாவின் "நாட் எ லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர், மஹி கில். பாலிவுட்டின் பிசியான நடிகைகளில், இவரும் ஒருவர். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன்றில், இவருக்கு, ஆடம்பரத்திலும், உல்லாசத்திலும் திளைக்கும், பணக்கார பெண் வேடம். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே, படத்தின் இயக்குனர், இவரிடம், "இந்த படத்தில், நீங்கள் மது குடிக்கும் காட்சிகள் உள்ளன. அதற்கேற்றார்போல், தயார் படுத்திக் கொள்ளுங்கள்என, கூறிவிட்டார். இதனால், காலையில் எழுந்தவுடன், காபி குடிக்கிறாரோ இல்லையோ, வோட்கா குடிக்க ஆரம்பித்து விட்டார். "என்ன மேடம், கோப்பையிலேயே, குடியிருக்க துவங்கி விட்டீர்கள் போல் இருக்கிறதுஎன, கேட்டால், "அட நீங்க வேற. காலையில் எழுந்ததும், ஒரு ஸ்மால் போடுவேன், அவ்வளவு தான். அதற்காக, காபியை மறந்து விடவில்லை. அதுவும், அப்பப்ப உண்டு என, கண்களைச் சொருக விட்டபடி பேசுகிறார்.