Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டைம் பத்திரிகையில் அமீர்கான்!!

02 செப், 2012 - 15:41 IST
எழுத்தின் அளவு:

  பல வெற்றி படங்களில் நடித்து கிடைத்த பெயர், புகழ் எல்லாவற்றையும் காட்டிலும் சத்யமேவ ஜெயதே எனும் ஒரே ஒரு நிகழ்ச்சி அமீர்கானை எங்கோ கொண்டு போய் சென்றுவிட்டது. தனியார் டி.வி. ஒன்றில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகர் அமீர்கான். சமூகப் பிரச்னைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே பெரிதும் வரவேற்பு பெற்றது. இதன்தொடர்ச்சி 2ம் பாகமும் வரவேண்டும் என்றும், அதில் அமீர்கானே வரவேண்டும் என்று ரசிகர்களும் பலரும் விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இப்போது அமெரிக்கா வரை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் இந்நிகழ்ச்சி பற்றிய கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அமீர். முன்னதாக இதற்கு முன் முன்னாள் பிரதமர் இந்திரா, ராஜீவ், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வின் பாபி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா ஆகியோரது படங்கள் டைம் பத்திரிகையின் அட்டைப்பக்கத்தில் வந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

பிரேம் - Delhi,இந்தியா
04 செப், 2012 - 03:49 Report Abuse
 பிரேம் கமல் சார், மக்களுக்கு எந்த விழிப்புணர்வும், நல்லதும் செஞ்ச மாதிரி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒரு இந்தியனா அமீர், மக்களுக்கு நல்லது செஞ்சி இருக்காரு, அத பாராட்டாம கமல் சார் தமிழன், அதனாலதான் அவர அங்கீகரிக்கலன்னு சொல்லுறது தப்பு :)
Rate this:
voiceswriter - Bangalore,இந்தியா
03 செப், 2012 - 22:24 Report Abuse
 voiceswriter Aamir, sharukh, parveen babi and all other political leaders appeared only in ASIAN/SOUTHASIAN covers of the TIME .but it was only AISHWARYA RAI who appeared in US cover of time magazine and she is the FIRST INDIAN who got that privelege.
Rate this:
Kalees - Singapore,இந்தியா
03 செப், 2012 - 12:20 Report Abuse
 Kalees Mr கோவிந்த், நீங்க சொல்லுறது சரிதான். கமல் நல்ல நடிகர் தான். ஆனா அமிர்க்கு இந்த புகழ் நடிச்சதால இல்லை. சமூக சிந்தனை கொண்ட ஒரு நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வை உண்டாகியதற்காக. அதை மொதல்ல புருஞ்சுகோங்க.
Rate this:
Ramesh - Singapore  ( Posted via: Dinamalar Android App )
03 செப், 2012 - 09:52 Report Abuse
Ramesh வாய்மையே வெல்லும் என்பதற்க்கு மற்றொரு உதாரணம். கோவிந்த் போன்றவர்கள் சினிமா பற்றி மட்டுமே தெரிந்து வைத்தி்ருப்பவர்கள்.
Rate this:
விவேக் - france,இந்தியா
03 செப், 2012 - 01:23 Report Abuse
 விவேக் நீ லூசா கோவிந்த், இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசுற, தமிழனோட கெட்ட குணம் இது. வாழ்த்துக்கள் அமீர்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in